Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதியில் யார் பாருங்க.. தல தலனு ஆரவாரம் செய்த ரசிகர்கள்.. சைகையிலயே சைலண்ட்டாக்கிய அஜித் குமார்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: கே 64 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் முன்பு நடிகர் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் உடன் கேரள மாநிலம் பாலக்காடில் உள்ள தன்னுடைய குல தெய்வமான ஊட்டுக்குளங்கரா பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்த நிலையில், இன்று திருப்பதி கோயிலுக்கு அஜித் குமார் சென்றிருக்கிறார்.. அங்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து, ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.. இந்த நிகழ்வு வீடியோவாகவும் வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

நவம்பர் 2ம் வாரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் AK64 அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் பரவி கொண்டிருக்கிறது.. ஆனால், அதற்கு முன்பேயே AK65 படத்தின் டைரக்டரை தேர்வு செய்து விட்டதாக மற்றொரு தகவல் பரவி கொண்டிருக்கிறது. எனவே இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் அஜித் நடிக்க போகிறாரா? என்ற ஆர்வம் எகிறி வருகிறது.

Television Ajith Kumar Tirupati temple

அஜித் குமார் அடுத்த படம்

பிரஷாந்த் நீல், விக்ரம் வேதா புகழ் புஷ்கர் காயத்ரி போன்ற டைரக்டர்கள் யாராவது ஒருவர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க போவதாக கூறப்பட்ட நிலையில், இவர்களில் ஒரு இயக்குனரை அஜித் தேர்வு செய்துவிட்டாராம்... அஜித் குமாரின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், AK65படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளிலும் இறங்கியிருப்பதாக தெரிகிறது.

சினிமா படங்களுக்கு மத்தியிலும், கார் பந்தயத்தை கைவிடாதவர் நடிகர் அஜித் குமார்.. சமீபத்தில்கூட ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3வது இடம் பிடித்தார்... பிறகு, ஜெர்மனியில் நடைபெற்ற கார் ரேஸிலும் கலந்து கொண்டிருந்தார்.

கார் ரேஸ், துப்பாக்கி சுடும் போட்டி

அதுமட்டுமல்லாமல், இந்த வருட இறுதியில் மலேசியாவிலும், வரும் வருடம் அபுதாபியிலும் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.

அதேபோல ரேஸ் தவிர துப்பாக்கி சுடும் போட்டியிலும் அஜித்துக்கு ஆர்வம் அதிகம்.. அதனால்தான், கடந்த 2022ல் திருச்சியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று, 4 தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 6 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தார்.

திருப்பூரில் கலக்கல்

நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டத்துக்கு அஜித் சென்றிருந்தார்.. காரணம், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள வெள்ளகோவில் பகுதியில் கொங்கு நாடு ரைஃபில் கிளப் என்ற பெயரில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

இதற்கு மாநிலம் முழுதுமே 3 இடங்களில் கிளை உள்ள நிலையில், வெள்ளகோவிலில் உள்ள கிளைக்கு வருகை தந்த நடிகர் அஜித்குமார், அங்குள்ள வசதிகளை பார்வையிட்டு துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்டார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது..

திருப்பதியில் அஜித் குமார் தரிசனம்

அதற்குள் அஜித் குமார் திருப்பதிக்கு சென்ற வீடியோ சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளது.. திருப்பதி கோவிலில் அஜித்குமார் சாமி தரிசனம் செய்தார். இன்று காலை நடைபெற்ற சுப்ரபாத சேவையின்போது வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரைக் கண்ட ரசிகர்கள் தல, தல என்று சத்தமாக எழுப்பி கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். அப்போது கோவிலில் அமைதியாக இருக்குமாறு ரசிகர்களுக்கு சைகை காட்டினார் அஜித்குமார்.

மேலும் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு ரசிகர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டார் அஜித் குமார்.. இந்த போட்டோக்கள், வீடியோக்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்துவருகிறார்கள்.

வலது மார்பில் பச்சை குத்தி

4 நாட்களுக்கு முன்பு அஜித் குமார் தன்னுடைய குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். மேலாடை அணியாத நிலையில் அஜித் தனது மார்பின் வலது பக்கத்தில் பச்சைக் குத்திக் கொண்டு இருந்தது இணையத்தில் கவனம் பெற்றிருந்தது.. அந்த டாட்டூ அஜித்தின் குலதெய்வமான பகவதியம்மன் என்றும் கூறப்பட்டது. இப்போது திருப்பதி தரிசனத்தின் வீடியோவும் இணையவாசிகளை ஈர்த்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+