பாக்கியலட்சுமி சீரியலில் இனி இது தானா? ஆகாஷுக்கு வந்த போன் கால்! பாக்கியா சொன்னது நடக்க போகிறதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் செல்வியின் மகன் ஆகாஷ் கேரக்டரில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். அவர் தற்போது தன்னுடைய காட்சியின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு யூகிக்க முடியாத வகையில் தான் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது. சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல் கடந்த மாதத்திலேயே வெளியானது. ஆனால் அதற்கு பிறகு தான் சீரியலில் எதிர்பாராத பல சம்பவங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது.

Baakiyalakshmi Serial vijay TV

புது பிரச்சனை தொடக்கம்

சுதாகர் குடும்பத்தினர் அதிரடியாக பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுத்தனர். சுதாகர் ஆரம்பத்திலேயே பாக்கியாவின் ரெஸ்டாரண்டை வாங்குவதற்காக பாக்யாவிடம் சவால் விட்டார். அதற்கு பாக்கியா தான் ரெஸ்டாரண்டை தரவே மாட்டேன் என்று பேசி இருந்தார் ஆனால் சுதாகர் இனியாவை தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைத்து பாக்யாவின் ரெஸ்டாரண்டையும் எழுதி வாங்கிவிட்டார்.

சுதாகர் ஆட்டம்

பாக்கியா முதலில் ரெஸ்டாரண்டை எழுதி கொடுக்க முடியாது என்று எவ்வளவோ பிரச்சனை செய்தார். ஆனாலும் மொத்த குடும்பத்தினரும் பாக்கியாவிற்கு எதிராக இருந்ததால் பாக்யா வேறு வழியில்லாமல் தன்னுடைய மகளுக்காக கையெழுத்து போட்டுக் கொடுத்த பாக்கியலட்சுமி ரெஸ்டாரண்டின் பெயர் மட்டும் மாறுகிறது என்று சொல்லி பாக்கியாவின் மொத்த உரிமையும் எடுத்துக் கொண்டனர்.

பறிபோகும் ரெஸ்டாரண்ட்

அதோடு பாக்யாவை ரெஸ்டாரண்டை விட்டு துரத்திவிட்டார். ஆனால் இதை தெரிந்த பிறகும் பாக்கியாவின் குடும்பத்தினர் சுதாகருக்குத்தான் சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். இது பார்க்கும் ரசிகர்களை கோபப்படுத்துகிறது. ஆனாலும் அடுத்த திருப்பமும் வந்துவிட்டது அதாவது பாக்யாவின் முதல் ரெஸ்டாரண்ட் வாடகைக்கு தான் வைத்திருக்கிறார். அந்த ரெஸ்டாரண்டின் உரிமையாளரிடம் சுதாகர் அந்த ரெஸ்டாரண்டையும் வாங்கி விட்டார்.

மீண்டும் ஆகாஷ்

இதனால் பாக்கியா இப்போது இரண்டு ரெஸ்டாரண்டும் இல்லாமல் இருக்கிறார். இனி இனியாவிற்கு ஏதாவது நடந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று வார்த்தைக்கு வார்த்தை வீம்பு பேசிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதற்கான சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த சீரியலில் செல்வியின் மகனைத்தான் பாக்யாவின் மகள் இனியா காதலித்தார். சில நாட்களாக செல்வியின் மகன் ஆகாஷ் காட்சிகள் சீரியலில் இல்லாமல் இருந்தது ஆனால் இப்போது இந்த சீரியலில் மீண்டும் தான் நடிப்பதாக ஆகாஷ் கேரக்டரில் நடிக்கும் நடிகர் அஜித் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார்.

இனியாவுக்கு பிரச்சனை

அதில் அவர் போனில் யாரிடமோ மிகவும் அதிர்ச்சியாக பேசுகிறார். இதனால் இனியா தான் ஆகாஷுக்கு போன் செய்வாரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனியாவிற்கு சுதாகர் குடும்பத்தால் பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனியாவின் கணவர் நிதிஷ் இப்ப வரைக்கும் இனியாவை நல்லபடியாக கவனித்துக் கொள்கிறார். ஆனால் இனி அப்பா பேச்சைக் கேட்டு இனியாவை கொடுமைப்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்போதுதான் பாக்கியா மீண்டும் சிங்கம் போல சிலிர்த்து நிற்க போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Baakiyalakshmi Serial vijay TV

ஈஸ்வரியின் ரியாக்ஷன்

இதுவரைக்கும் பாக்யா சொன்னது தவறு என்று வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் ஈஸ்வரிக்கு பாக்யா சொன்னதுதான் சரி என்று இப்போது மீண்டும் காட்டப் போகிறார். ஏற்கனவே இதுபோல பலமுறை ஈஸ்வரி பாக்கியாவை அவமானப்படுத்துவதும் பிறகு பாக்யாவை சாதிக்கும்போது பாக்கியாவை இப்போதான் நான் புரிந்து கொண்டேன் என்று பஞ்ச் வசனம் பேசுவதும் வாடிக்கையாக இருக்கிறது. இனியும் அதுபோல நடக்கப்போகிறது என்று தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்புவரைக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் அரைத்த மாவே அரைக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது கதை சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் போய்க்கொண்டிருக்கிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம் மக்களே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+