Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் மகனையே அதை செய்ய விட மாட்டேன்.. ஊரார் மகனை இதை செய்ய சொல்லுவேனா? அரவிந்த்சாமி நச் வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அரவிந்த்சாமி நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்தும் தனக்கு ரசிகர்கள் நடிகர் சங்கம் வைக்காதது குறித்தும் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார் இந்த பேச்சு தான் இப்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் பல இளம் பெண்கள் அரவிந்த்சாமி போல மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தது ஏராளம். ஆனால் நானெல்லாம் அப்படியே கிடையாது என்று எளிமையாக இப்போ பேசி வரும் அரவிந்த்சாமி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் தனித்து ஜெயித்து வருகிறார்.

television sun tv

ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த அரவிந்த்சாமி ஒரு விபத்துக்கு பிறகு இவரெல்லாம் இனி அவ்வளவுதான் என்று பல ஏளனங்களை சந்தித்து இருந்தாலும் அதையெல்லாம் தகர்த்து இப்போது மீண்டும் கதாநாயகனாகவும், வில்லனாகவும் மிரட்டிக் கொண்டிருக்கிறார். அரவிந்த்சாமி ரோஜா, பம்பாய், மின்சார கண்ணா போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவரை பார்த்து பல ஆண்கள் கூட பொறாமை பட்டிருக்கிறார்கள்.

ஆனால் அவருக்கு ஏற்பட்ட திடீர் விபத்தால் எடுத்துக்கொண்ட சிகிச்சையின் காரணமாக உடல் எடை கூடி, தலைமுடி எல்லாம் கொட்டி போய் அரவிந்த் சாமியா இவர் என்று சொல்லும் அளவிற்கு மாறி இருந்தார். ஆனால் இப்போது தன்னுடைய பழைய நிலைக்கு மீண்டும் வந்திருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அரவிந்த்சாமி நடித்துக் கொண்டு முடித்த மெய்யழகன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் இந்நிலையில் அந்த திரைப்பட பிரமோஷனுக்காக தொகுப்பாளர் கோபிநாத் உடன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அப்போது கோபிநாத் அரவிந்த்சாமியிடம் கேட்ட கேள்விக்கு தெளிவாக அவர் கொடுத்த விளக்கம் பலராலும் பாராட்டப்படுகிறது. அது பற்றி பார்க்கலாம் அதில் கோபிநாத் ஒரு படத்தை எடுத்துக் கொண்டால் அதில் அந்த படத்தின் பட்ஜெட்டில் ஹீரோக்களுக்கு அதிகமான சம்பளம் போவதாக தயாரிப்பாளர்கள் குறை சொல்றாங்களே இதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, எனக்கு புரியல நானும் தெளிவு பெற்று இருக்கிறேன். ஆனால் இங்கு யாரையும் வற்புறுத்தவில்லை.

மார்க்கெட் இருக்குதோ இல்லையோ அந்த நடிகர் அவ்வளவு பணம் கேட்கிறார் என்றால் நீங்கள் கொடுப்பீங்க ஒத்துக்கிட்டீங்கன்னு தானே அர்த்தம். நான் கொடுக்க மாட்டேன் வேற யாராவது ஒருவரே வைத்து படம் எடுக்கிறதா தயாரிப்பாளர்கள் சொல்லலாம். ஒரு நடிகருக்கு நிறைய படங்கள் வராட்டி அவர் தன்னாலே படத்தின் சம்பளத்தை குறைக்க போறார். இங்க யாரும் யாரையும் வற்புறுத்தல, என்ன பட்ஜெட் படம் அப்படிங்கறத தீர்மானிப்பது ஒரு ப்ரொடியூசர் தான்.

television sun tv

எப்படி பைனான்ஸ் பண்ண போறாங்கன்னு தீர்மானித்ததும் ஒரு புரொடியூசர் தான். எப்போ ரிலீஸ் பண்ண போறாங்கன்னு தீர்மானிப்பதும் ப்ரொடியூசர் தான். அது மாதிரி பெரிய நடிகர் கூட படம் பண்ணனும்னுமா? வேண்டாம்னு முடிவு எடுக்கும் உரிமை ப்ரொடியூசருக்கு இருக்கு. அந்த படத்தில் நடிக்கவா வேண்டாமா என்று முடிவு எடுக்கும் சுதந்திரமும் அந்த பெரிய நடிகருக்கு இருக்கு என்று பதில் சொல்லி இருக்கிறார்.

அதுபோல நான் எப்போதும் அடுத்தவங்க நம்மள மதிக்கணும் என்பதற்காக எந்த பொருளையும் வாங்க மாட்டேன். ஒரு பொருளை நான் வாங்கும் போது அடுத்தவர்களுக்காக நாம் அதை வாங்கி விட்டால் அது எனக்கு பிரச்சனையா தான் அமையும் என்று பேசிக்கொண்டு இருந்த அரவிந்தசாமி இடம் கோபிநாத் ரசிகர்கள் மன்றங்கள் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்று கேட்க, அதற்கு எனக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கி என்ன செய்யப் போகிறார்கள்? ரசிகர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்கணுமே?

நான் சினிமாவை விட்டு விலகினால் அவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்விகள் எனக்குள் உண்டு. என்னுடைய மகனுக்கு ஒரு நடிகரை ரொம்ப பிடிக்கும் அவருடைய ரசிகர் மன்றத்தில் சேர வேண்டும் என்று சொன்னால் அதை நான் ஊக்குவிக்க மாட்டேன். அப்படி இருக்கும் பட்சத்தில் என் மகனுக்கு ஒரு அட்வைஸ் ஊரார் மகனுக்கு ஒரு அட்வைஸ் என்று என்னால் எப்படி தர முடியும் என்று விளக்கம் கொடுத்த அரவிந்த்சாமி நம்மைப் பற்றி என்ற கேள்விக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

television sun tv

சில விஷயங்கள் நம்முடைய கட்டுப்பாட்டை மீறி நடக்கும் அதற்கு நாம் மிகுந்த முயற்சி எடுக்கணும். இந்த பிரபஞ்சத்தில் 200 பில்லியன், மில்லியன் நட்சத்திரங்கள், சிறு கோள்கள், கருத்துளைகள் இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் பூமி என்பது ஒரு சிறு துகள் மாதிரி தான். இந்த பூமியில் நான் ஒரு பெரிய நடிகர் நீங்க ஒரு பெரிய இன்டர்வியூர் என்று இல்லை.

இந்த பெரிய உலகத்தில் நாம போட்ட சின்ன சண்டை எல்லாம் பெரிய விஷயமா நினைக்கிறதே இந்த பிரபஞ்சத்துக்கே தெரியாது. இதில் நீ என்ன ஜாதி, நான் என்ன ஜாதி, நீ பெரியவன், நான் சிறியவன் என்று பார்ப்பதால் உன் கஷ்டத்துக்கும் பிரபஞ்சத்துக்கும் சம்பந்தம் இருக்கா? என்று அந்த பேட்டியில் அரவிந்த்சாமி கலகலப்பாக பேசியிருக்கிறார். அப்போது நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து அதில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

அதில் சினிமாவில் இருந்து பலர் அரசியலுக்கு வருவதால் அவர்களை பலருக்கும் தெரியும். நோக்கம் சரியாக இருந்தால் எங்கு இருந்து வேண்டும் என்றாலும் அரசியலுக்கு வரலாம். அதற்கு முன்பாக அரசியல் களத்தை பற்றி தெரிந்து கொண்டு மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி நம்பிக்கை விதைத்தால் அது ஓட்டாக மாறும் என்றும் அரவிந்த்சாமி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+