சார் இல்லை மாமா! மகள் ஐஸ்வர்யாவை கலாய்த்த ஆக்ஷன் கிங் அர்ஜுன்.. பிரஸ் மீட்டில் கலகல!
சென்னை: நடிகர் ராமையாவை சார் என ஐஸ்வர்யா சொன்னதும் மாமா என அர்ஜுன் திருத்திய போது அங்கு சிரிப்பலை ஏற்பட்டது. அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் ராமையா மகள் உமாபதிக்கும் திருமணம் கடந்த ஜூன் 10ஆம் தேதி நிகழ்ந்தது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, பட்டத்து யானை என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், கன்னட மொழிகளில் வெளியான சொல்லி விடவா படத்திலும் நடித்திருந்தார்.

குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி, அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், தண்ணி வண்டி, சேரன் இயக்கிய திருமணம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு உமாபதி அறிமுகமானார். நிகழ்ச்சியில் உமாபதியின் நற்குணம் அர்ஜுனுக்கு பிடித்து போக தனது வீட்டு மாப்பிள்ளையாக பச்சைக் கொடி காட்டினார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிச்சியதார்த்தம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் கடந்த 10 ஆம் தேதி கெருகம்பாக்கத்தில் நடிகர் அர்ஜுன் கட்டியுள்ள ஸ்ரீயோக ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தனது இன்ஸ்டாவில் மகள் திருமணம் குறித்து நெகிழ்ச்சிகரமான பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில் எங்கள் அன்பு மகள் ஐஸ்வர்யா தனது காதலன் உமாபதியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தருணத்தின் போது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. சிரிப்பு, மகிழ்ச்சி, காதல் என பல அழகான நினைவுகள் நிறைந்த மறக்க முடியாத நாள் அது.
உனது வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு நீ செல்வதை பார்க்கும் போது பெருமையாகவும் உணர்ச்சிமிக்க தருணமாகவும் உள்ளது. உங்கள் இருவரின் காதலை போல் உங்கள் வாழ்க்கையும் சிறப்பாக இருக்க ஆசிர்வாதம் என வாழ்த்தியுள்ளார் அர்ஜுன்.
திருமணம் முடிந்து 4 நாட்கள் ஆன நிலையில் ஐஸ்வர்யா- உமாபதி, அர்ஜுன், தம்பி ராமையா ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஐஸ்வர்யா பேசுகையில் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
என்னை நீங்கள் அனைவருமே சிறிய வயது முதல் பார்த்து வருகிறீர்கள். நீங்கள் எல்லாருமே எனக்கு குடும்பம் மாதிரிதான். நான் பள்ளி செல்லும் போது கல்லூரி செல்லும் போது நீங்கள் என்னை பார்த்திருக்கிறீர்கள் . திருமணம் என்ற நிலை எனக்கு தற்போது புதிய அனுபவமாக இருக்கிறது.
உங்களுடைய ஆசிர்வாதங்களும் ஆதரவும் எங்களுக்கு தேவை. அப்பாவுக்கும் ராமைய்யா சாருக்கும் எப்படி ஆதரவு கொடுத்தீர்களோ அது போல் எங்களுக்கும் கொடுங்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட அர்ஜுன் சார் இல்லை மாமனார் என்றார். உடனே வெட்கத்தில் சிரித்த ஐஸ்வர்யா யெஸ் மாமனார் என்றார்.
மேலும் ஐஸ்வர்யா தொடர்கையில் எனது கருத்துகளை, விருப்பங்களை வெளிப்படுத்த எனது அப்பா, அம்மா எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். எனது கருத்துகளுக்கும் இடமளித்திருக்கிறார்கள். அதே போல் எனக்கு என் புகுந்த வீட்டில் ஒரு குடும்பம் கிடைத்திருக்கிறது. உமா எனது நண்பர். எல்லா விஷயத்திலும் எனக்கு நிறைய ஆதரவு கொடுப்பார். நான் உண்மையில் அதிர்ஷ்டசாலிதான் என ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications