இப்போ எல்லாம் மாறிடுச்சு.. குடும்ப ரகசியத்தை இணையத்தில் உடைத்த அருண் விஜய் மனைவி! திடீர் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் குமாரின் பேத்தியின் திருமணம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று இருந்தது. அதை தொடர்ந்து விஜயகுமாரின் கிராமத்தில் அவருடைய பேத்திக்கு பிரம்மாண்டமாக ரிசப்ஷன் நடைபெற்று இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் அருண் விஜய்யின் மனைவி விஜயகுமாரின் பேத்தி தியா குறித்து ஒரு பதிவு ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

அருண் விஜயின் மனைவி ஆரத்தி வெளியிட்ட திடீர் போஸ்ட்க்கு லைக்குகள் குவிந்து வருகிறது. அதோடு கமெண்டுகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அது என்ன அவர் சொல்லியிருக்கிறார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

 actor Arun vijay wife has published a post about Vijayakumars granddaughter Diya

அந்த வகையில் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதாவின் மகளுக்கு சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. விஜயகுமாருக்கு முத்து கண்ணு என்ற மனைவி இருக்கும் நிலையில் அவருக்கு கவிதா, அனிதா, அருண் விஜய் என்ற மூன்று பிள்ளைகளும் இருக்கும்போது முத்துக்கண்ணுவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விஜயகுமார் விவாகரத்து செய்திருந்த நிலையில் அப்போது நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

மஞ்சுளாவிற்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் விஜயகுமார் இப்போது இரண்டு மனைவியின் குழந்தைகளையும் ஒன்றாக தான் பார்த்துக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் அனிதாவின் மகளுக்கு இப்போது திருமணம் நடந்திருக்கும் செய்தி தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

அதோடு விஜயகுமார் வீட்டு பங்க்ஷன் என்பதால் அங்கு எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகிறது. விஜயக்குமார் வீட்டு பங்க்ஷனுக்காக பல நடிகர்கள் நடிகைகள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர். பிரமாண்டமாக நடந்த இந்த நிகழ்ச்சி பற்றிய பேச்சு இன்னும் இணையத்தில் முடிவடையவில்லை. இந்த நிலையில் நடிகர் அருண் விஜய்யின் மனைவி ஆரத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தியாவிற்கு திருமணம் ஆகி ஒரு சில நாட்கள் கழித்து இன்று ஒரு நீண்ட பதிவு வெளியிட்டிருக்கிறார்.

அதில் தியாவின் திருமணத்தன்று அருண் விஜய் குடும்பத்தோடு எடுத்த புகைப்படத்தை ஆரத்தி பதிவு செய்து இருக்கிறார். அதற்கு எங்கள் பெண் குழந்தை இப்போது திருமணமான பெண்ணாக மாறியிருக்கிறார். தியாம்மா நீ இத்தனை வருடங்களாக என்னுடைய முதல் மகளாய் இருந்தாய்... நீ ஒவ்வொரு கட்டத்திலும் வளர்ந்து வருவதை பார்த்து நான் சந்தோஷப்பட்டு இருக்கிறேன். உன்னுடைய இலக்குகளை அடைந்து என்னை பெருமைப்படுத்தி இருந்தாய்.

எனது இரண்டு குழந்தைகளுக்கும் நீ ஒரு முன் மாதிரியாக இருக்கிறாய். நீ உன்னுடைய பெரிய வெற்றிக்காக பாடுபடு அது உனக்கு வெகு தொலைவில் இல்லை. அதுபோல திலன் எங்களுடைய அன்பை பகிர்ந்து கொள்ள நீ கண்டுபிடித்த ஒரு நல்ல மனிதர். உங்கள் இருவரின் அன்பையும் பொக்கிஷமாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருவருமே அன்பு காட்டுவதில் உங்களைப் போல வேறு யாரும் இல்லை என்பது போன்று ஒருவருக்கொருவர் கவனித்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற உங்கள் பயணம் ஒரு விசித்திர கதையே தவிர மிகுந்த அன்பும் மகிழ்ச்சியும் சூழத் தொடங்கி இருக்கிறது. நீங்கள் இருவருமே என்னுடைய குழந்தைகள் நீங்கள் இருவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. உங்கள் இருவருக்கும் எல்லா விதங்களிலும் ஒருங்கிணைத்த பகுதியாக நான் இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

 actor Arun vijay wife has published a post about Vijayakumars granddaughter Diya

எங்கள் குடும்பம் இப்போது பெரியதாகி விட்டது. திலனுடைய தம்பி மற்றும் தங்கை அப்பா அம்மா அனைவரையும் எங்கள் குடும்பத்திற்கு வரவேற்கிறோம் என்று ஒரு நீண்ட பதிவை ஆரத்தி வெளியிட்டு இருக்கையில் இந்த பதிவிற்கு அதிகமானோர் பாராட்டி கமென்ட் கொடுத்து வருகின்றனர். அதோடு தன்னுடைய அத்தை ஆரத்தி வெளியிட்ட பதிவுக்கு அடுத்த நொடியே தியா லவ் யூ அத்தை என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்.

அதுபோல தியா ஏற்கனவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மாமா மற்றும் அத்தை குறித்து பல நேரங்களில் பெருமையாக போஸ்ட் போட்டிருக்கிறார் இந்த நிலையில் இப்போது இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+