“அருண் விஜய் 36” திரைப்பட பூஜையில் மகனுக்கு மாலை போட்டு சொன்ன வார்த்தை.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகர் அருண் விஜய் நடிக்கும் அவரது 36-வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் இன்று அவருடைய திரைப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது.
அதில் அருண் விஜய்யின் மனைவி, குழந்தைகள் மற்றும் அவருடைய அப்பா விஜயகுமார், அம்மா முத்து கண்ணு என எல்லோரும் குடும்பமாக கலந்து கொண்டனர். அப்போது எடுத்த வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

"முறை மாப்பிள்ளை" படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் அருண் விஜய் பாண்டவர் பூமி, இயற்கை, தடையற காக்க என்று பல திரைப்படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது "என்னை அறிந்தால்" திரைப்படம் தான். அருண் விஜய் ஆரம்பத்தில் சாந்தமான கேரக்டரில் ஜாலியான கதாநாயகன் கேரக்டரில் நடித்து வந்த நிலையில், "என்னை அறிந்தால்" திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார்.
அதற்குப் பிறகு தடம், செக்க சிவந்த வானம் என்று பல திரைப்படங்களில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிகாட்டி ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். நடிகர் அருண் விஜய் குடும்பத்தில் எல்லோருமே நடிகர்களாக இருக்கின்றனர். அவருடைய அப்பா விஜயகுமார் அந்தக் காலத்தில் இருந்து இப்போது வரைக்கும் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான மிஷன் சாப்டர் 1, அச்சம் என்பது இல்லையே போன்ற படங்களும் அதிகமான வரவேற்பு பெற்றது.
அதே நேரத்தில் பாலா இயக்கத்தில் "வணங்கான்" திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த திரைப்படமும் இன்னும் சில நாட்களில் விரைவில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே நடித்துள்ள பார்டர் படம் வெளியாவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது. இப்படியான நிலையில் இன்று தனது 36 ஆவது படத்திற்கான பூஜையை நடத்தி இருக்கிறார். அது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அது குறித்த புகைப்படங்களையும், போஸ்டர்களையும் வெளியிட்டு இருக்கிறார்.
இந்த படத்தை பாபி பாலச்சந்திரன் தயாரிக்கிறார். அதே நேரத்தில் இந்த படத்தின் பூஜையில் எடுத்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் அருண் விஜய் பகிர்ந்து இருந்த நிலையில் அது அதிகமானவருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் ஒரு வீடியோவில் தன்னுடைய மகனும் பக்கத்திலேயே நின்று கொண்டு நானும் உன்னுடைய படத்தில் நடிக்கிறேன் அப்பா என்று கேட்க,
அதற்கு அருண் விஜய் அவருக்கும் மாலையை போட்டு அவரோடு க்யூட்டாக பேசிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே சமீபத்தில் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய மகனோடு மீன் சந்தைக்கு ஆட்டோவில் சென்று மீன் வாங்கிய வீடியோவை பகிர்ந்திருந்தார். அதை தொடர்ந்து இப்போது தன்னுடைய பட பூஜையில் தன்னுடைய மகனுக்கு மாலை போட்டு இவர் பேசிக் கொண்டிருக்கும் வீடியோவும் இணையத்தில் பரவி வரும் நிலையில் அருண் விஜய் நடிக்கும் 36-வது திரைப்படத்தில் அவருடைய மகனும் நடிக்க போகிறாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications