ஆசை ஆசையாய் தோசை சுட்டு போட்ட நடிகர் பப்லு.. இப்ப முன்னாள் காதலி ஷீத்தலுக்கு கல்யாணம்.. பிரபலம் நச்
சென்னை: பிரபல நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ்ஜின் முன்னாள் காதலி ஷீத்தல் குறித்து, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.. ஷீத்தலுக்கு திருமணம் என்றும் அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் அறிவித்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர் நடிகர் பப்லு - ஷீத்தல் ஜோடி.. தன்னை விட 30 வயது குறைவான இந்த பெண்ணை காதலித்தார் 57 வயதான பப்லு ப்ரித்விராஜ். இதனை சமூக வலைத்தளத்திலும் அறிவித்து ஷீத்தலை அறிமுகப்படுத்தினார்.

போட்டோக்கள்: பிறகு 2 பேரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ துவங்கினர். இருவரும் அதிகமான போட்டோக்கள், வீடியோக்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வந்தனர். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று இந்த போட்டோ, வீடியோக்களை இருவருமே சோசியல் மீடியாவிலிருந்து டெலிட் செய்து விட்டனர்.
இதுகுறித்து பப்லு, ஷீத்தலிடம், "இருவரும் பிரிந்துவிட்டீர்களா?" ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பப்லு, "சில தவறுகள் செய்துவிட்டேன், இப்போது தெரிந்து விட்டேன்" என்று பதிலளித்திருந்தார். அதாவது பிரிந்துவிட்டோம் என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை..
பரிசு பொருட்கள்: ஆனால், இருவரும் பிரிந்து விட்டோம், பப்லு கொடுத்த அனைத்து பொருட்கள் பரிசு என அனைத்தையும் திருப்பி கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன் என்று ஷீத்தல் தன்னுடைய பேட்டிகளில் ஓபனாகவே கூறியிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில்தான், ஷீத்தல் இன்னொரு நபரை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்ய போவதாகவும் தகவல்கள் கசிந்தன. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ,King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் சொல்லி உள்ளதாவது:
விதவித வீடியோ: "நடிகர் பப்லு, தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாக்களில் கதாநாயகனாக நடித்தவர்.. டிவி சீரியல்களிலும் நடித்தவர்.. இவருடைய 16 வயது மகன், ஒரு ஸ்பெஷல் குழந்தை ஆவார்.. தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்தவர் பப்லு. சமீபத்தில் மாடல் அழகி ஷீத்தல் என்பவருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தார்.. விரைவில் அவரை திருமணம் செய்ய போவதாகவும் அறிவித்தார்..
பிறகு தினந்தோறும் இவர்கள் எடுத்து கொண்ட நெருக்கமான போட்டோக்களையும், தோசை சுட்டு ஷீத்தலுக்கு பரிமாறுவது என விதவிதமான வீடியோக்களையும் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் எடுத்து பதிவிட்டு வந்தார். பிறகு இருவருக்கும் திடீரென சண்டை வந்துவிட்டது.. இறுதியில் இருவருமே நண்பர்களாக பிரிந்து விட்டார்கள்.. ஷீத்தலை பற்றி பப்லு எதுவுமே சொல்வதில்லை.. பப்லுவை பற்றியும் ஷீத்தல் எதுவுமே சொல்வதில்லை.
பப்லு மவுனம்: இந்நிலையில், ஷீத்தல் தன்னுடைய திருமணத்தை அறிவித்திருக்கிறார். தற்போதைய காதலர், ஒரு தடகள பயிற்சி வீரர்.. பாடி பில்டர்.. கர்நாடகத்தை சேர்ந்தவர்.. பெங்களூரில் ஜிம் வைத்திருக்கிறார். அவரது பெயர் சுமேஷ் சோமசேகரன்.. இவரைதான் ஷீத்தல் திருமணம் செய்ய போவதாக அறிவித்துள்ளார்.. ஆனால் ஷீத்தலின் இந்த திருமணம் குறித்து பப்லு இதுவரை எதுவுமே சொல்லவில்லை" என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications