ரூ.250 கோடி சொத்து.. ஆசை நிறைவேறியும் பரிதவிக்கும் பாலா.. 4வது மனைவிக்காக விழுந்தடித்து வந்து வீடியோ
சென்னை: பிரபல நடிகர் பாலா, எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. தன்னுடைய மனைவி குறித்து, அவதூறாக பேசுவோர்க்கு இந்த எச்சரிக்கையை, வீடியோ மூலம் விடுத்துள்ளார். இதுதான் இணையதளத்தில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.
பிரபல நடிகர் பாலாவுக்கு 41 வயதாகிறது.. கடந்த 2010 முதல் 2019 வரை முதல் மனைவி பாடகி அம்ருதா சுரேஷுடன் மணவாழ்க்கையில் ஈடுபட்டு வந்த இவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். ஆனாலும், 2வதாக டாக்டர் எலிசபெத் என்பவருடன் லிவ்விங் இன் உறவில் இருந்ததாக தெரிகிறது. இதற்கு பிறகு பாலா ஒரு நடிகையுடன் திருமணம் என்றார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த பாலா, "மீண்டும் முறையாக சட்ட ரீதியாக திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ விரும்புகிறேன். தனது ரூ.250 கோடி சொத்துக்கு நான் சொல்பவரே வாரிசு" என்று அறிவித்திருந்தார்.
மீண்டும் திருமணம்: இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த மாதம் கோகிலா என்ற தன்னுடைய உறவுக்கார பெண்ணை 4வதாக திருமணத்தை செய்துள்ளார் பாலா.. கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று கேரள மாநிலம் கழூர் பாவக்குளம் கோவிலில் கோகிலாவை திருமணம் செய்து கொண்டார்.
இதுசம்பந்தமாக பாலா சொன்னபோது, "என்னுடைய ஆபரேஷனுக்கு, ஒரு துணை தேவை என்ற உணர்வு தோன்றியதால் திருமணம் செய்துகொண்டேன்.. கோகிலா என்னுடைய உறவுக்கார பெண். நாங்கள் இருவருமே மனதளவில் ஒத்துப்போய்விட்டோம்.. " என்று மகிழ்ந்து கூறியிருந்தார்.
எலிசபெத்: கோகிலாவை பொறுத்தவரை, தன்னுடைய சிறுவயதிலிருந்தே பாலாவை நேசித்து வருபவராம். பாலாவின் மீதான தனது அன்பை யாருக்கும் தெரியாமல் தன்னுடைய டைரியிலேயே எழுதி பாதுகாத்து வந்தாராம்.. 3வது மனைவி எலிசபெத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் மன அமைதிக்காக பாலா சென்னையில் தங்கியிருந்தபோதுதான், கோகிலாவை பற்றியும், தன்மீது சிறுவயதில் இருந்தே அவர் கொண்டிருந்த காதல் பற்றியும் பாலாவுக்கு தெரியவந்ததாம்.
இதற்கு பிறகுதான், தன்னுடைய அம்மாவின் நீண்ட கால ஆசையை நிறைவேற்றும் வகையில், இந்த திருமணத்தை செய்திருந்ததாக பாலா விளக்கம் அளித்திருந்தார். ஆனாலும், பாலாவின் இந்த 4வது திருமணத்தை சிலர் சோசியல் மீடியாக்களில் கிண்டல் செய்து வருவதாக தெரிகிறது.. "பெண் கிடைக்காமல் வீட்டில் வேலைக்காரியாக இருந்தவரை கல்யாணம் செய்துள்ளார் பாலா" என்று சிலர் விமர்சித்தனர்.
கடும் ஆத்திரம்: இதனால் கடும் ஆத்திரமும், ஆவேசமும் அடைந்த பாலா, "என் மனைவியை நீங்கள் எப்படி வேலைக்காரி என சொல்ல முடியும்? என் மனைவியை பற்றி இப்படி எல்லாம் பேசுகிறீர்களே நான் உங்கள் மனைவி பற்றி இப்படி எல்லாம் பேசட்டுமா? நான் திருமணம் செய்து கொண்ட என் மனைவியின் அப்பா, மிகப்பெரிய அரசியல்வாதி. நீங்கள் தவறாக பேசியது பற்றி நான் போலீசில் புகாரளிக்கிறேன் என சொன்னபோது, அவர் நானே பார்த்துக் கொள்கிறேன்.
என் மனைவி மீது இப்படி திட்டமிட்டே சுமத்தப்படும் அவதூறுகளுக்கு எல்லாம் யார் காரணம் என்று எனக்கு தெரியும். கண்டிப்பாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்களை நான் சும்மா விடமாட்டேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்.. இது என்னுடைய நேரடியான எச்சரிக்கையாகும்.. கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள். நான் என் மனைவி மீது முடிவில்லா காதலை வைத்துள்ளேன்... என் மனைவி கோகிலாவை காயப்படுத்த யாரும் நினைக்காதீங்க" என்று தன்னுடைய மனைவியை அசிங்கப்படுத்தியவர்களை எச்சரித்து வீடியோ வெளியிட்டுள்ளார் பாலா.
ஆதரவு தர வேண்டும்: இந்த வீடியோ மிகப்பெரிய அதிர்வலையை திரையுலகில் உண்டுபண்ணி வருகிறது. ஆனால், கோகிலாவை திருமணம் செய்த பாலா, "இத்தனை நாள் தனக்கு கொடுத்த ஆதரவைப் போல தன் புதிய மனைவி கோகிலாவிற்கும் ஆதரவு தரவேண்டும்" என்று கேட்டுக் கொண்ட வார்த்தைகள்தான், பாலா மீதான விமர்சனத்தை முன்வைக்க காரணமாக இருப்பதாக சலசலக்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications