சிவகார்த்திகேயன் சீரியல் வாய்ப்பு கேட்டதுக்கு முடியாதுன்னு சொல்லிட்டேன்! காரணம் இதுதான்! தீபக் ஓபன்
சென்னை: நடிகர் மற்றும் தொகுப்பாளராக பிரபலம் அடைந்த தீபக் பேட்டி ஒன்றில் பேசும் போது என்னிடம் சிவகார்த்திகேயன் சீரியலில் நடிக்க வாய்ப்பு கேட்டார், ஆனால் நான் அதற்கு முடியாது என்று சொன்னேன். அதற்கு காரணம் இதுதான் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சின்னத்திரையில் இருந்து ஒரு சில நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களுடைய திறமையால் வெள்ளித்திரையில் கால் எடுத்து வைத்து அங்கு கொடிகட்டி பறந்து வருகிறார்கள். அதில் சிவகார்த்திகேயனும் ஒருவர். அவரைப்போல தீபக்கும் சில வருடங்களுக்கு முன்பு சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து வெள்ளி திரையில் கதாநாயகனாக அறிமுகமானார்.

ஒரு சில திரைப்படங்கள் அவருக்கு வெற்றி கொடுத்தது. ஆனால் சில திரைப்படங்கள் பிளாப் ஆகிவிட்டது. தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு கலவையான விமர்சனங்களும் வருகிறது. தீபக் திமிராக நடந்து கொள்கிறார், பெண் போட்டியாளர்களை மதிக்கவில்லை, தனக்கு அதிக ஆங்கிலம் தெரியும் என்று ஆணவமாக விஜய் சேதுபதி இடமே பேசுகிறார் என்ற விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டாலும் அவருடைய விளையாட்டு சுவாரசியமாக இருக்கிறது என்று அவரை பலரும் பாராட்டியும் வருகிறார்கள்.
இப்படியான நிலையில் அவர் பேசிய வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது தீபக் போலத்தான் சிவகார்த்திகேயனும் விஜய் டிவியில் ஆரம்பத்தில் மிமிக்ரி கலைஞர் ஆக அறிமுகமாகி பிறகு தொகுப்பாளராக மாறி அதிலிருந்து திரைப்படங்களில் காலடி எடுத்து வைத்து இப்போது தமிழ் சினிமாவில் பலரும் வியந்து பார்க்கும் நடிகராக மாறி இருக்கிறார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து தீபக் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் ஆரம்பத்தில் நான் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது சிவகார்த்திகேயன் என்னிடம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கேட்டார். நான் அப்போ முடியாது சீரியல் எல்லாம் நீ ட்ரை பண்ணி பார்க்காத, நீ நேரடியாக திரைப்படத்திற்கு போயிரு சீரியல் செட்டாகாது என்று சொன்னேன்.
அதற்கு காரணம் இப்ப இருக்குற மாதிரி சீரியலில் நடிச்சா திரைப்படங்களுக்கு அப்போவெல்லாம் போக முடியாது. சீரியலில் ஒரு நடிகர் நடித்துவிட்டால் அப்படியே தான் இருந்தாக வேண்டும். அதற்காகத்தான் நீ சீரியலில் வந்தால் உன்னுடைய வாழ்க்கைக்கு அது பெரிய மாற்றத்தை கொடுக்காது இப்போ இருந்து நீ உன்னுடைய பயணத்தை வெள்ளித்திரையில் ஆரம்பி என்று சொன்னேன்.
அதற்குப் பிறகு சில திரைப்பட வாய்ப்புகளுக்காக சிவகார்த்திகேயன் முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்படித்தான் அவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதில் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார். சிவகார்த்திகேயன் அண்ணன் உங்கள பத்தி கொஞ்சம் பேச போறேன் என்று சொன்னார்.
நான் நம்மை பற்றி என்ன கலாய்க்க போறானோ தெரியலையே என்று நினைத்திருந்தேன். ஆனால் அங்கு அவன் பேசும்போது தான் நான் சில வருடங்களுக்கு முன்பு சொன்னது எனக்கே ஞாபகம் வந்தது. அதாவது தீபக் அண்ணனிடம் நான் சீரியலில் நடிக்கட்டுமா என்று கேட்டேன் அப்போ அவங்க வேண்டாம் என்று சொன்னாங்க, நீ திரைப்படத்திற்கு முயற்சி செய் என்று சொன்னாங்க.

அவங்க சொல்லும் போது எனக்கு வருத்தமா இருந்தது. நமக்கு வாய்ப்பு கேட்டோம் அவர் முடியாதுன்னு சொல்லிட்டாரே என்று நினைத்தேன். ஆனா இப்போ அதோட அர்த்தம் புரிகிறது என்று சொன்னார். அதுபோல சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் இருந்தது போல தான் இன்று இவ்வளவு தூரம் வளர்ந்த பிறகும் இருக்கிறார். கொஞ்சம் கூட அவருக்கு பிகு பண்ணி பந்தா காட்டியது கிடையாது.. என்று அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் பற்றி தீபக் பெருமையாக பேசி இருக்கிறார்.
-
காந்தாரா சர்ச்சை! மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்! நடந்தது என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications