பார்த்திபன் சீதா நட்பு.. இன்ப அதிர்ச்சி தந்த தனுஷ் - ஐஸ்வர்யா.. எறும்பு ஊர கல்லும் தேய்ந்து: பிரபலம்
சென்னை: எறும்பூர கல்லும் தேயும் என்பது போல, யாத்ராவும், லிங்காவும் தங்களுடைய அப்பா, அம்மா மனதை கரைத்து விட்டார்கள்.. இதன்காரணமாக, பிரிந்திருந்தவர்கள் மீண்டும் இணைகிறார்கள்.. இது யாத்ரா லிங்காவுக்கு மட்டும் இன்ப அதிர்ச்சி அல்ல.. ரஜினிகாந்த், தனுஷ் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாகும்.. அந்தவகையில், தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணைகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்.
Paper Weight Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "மீண்டும் இணைகிறார்கள் தனுஷ் - ஐஸ்வர்யா.. யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்களுக்காக மீண்டும் ஒன்று சேரும் ஐஸ்வர்யா, தனுஷூக்கு வாழ்த்துக்கள்.. இதன் பின்னணி என்ன?

ராமராஜன், நளினி பிரிந்தார்கள்.. பார்த்திபன் சீதா பிரிந்தார்கள்.. தங்களது வாரிசுகளின் திருமணத்தில் மட்டும் கலந்து கொண்டார்கள்.. இப்போதும் நண்பர்களாகவே இருக்கிறோம் என்று இந்த 2 ஜோடிகளுமே சொல்கிறார்கள்..
பார்த்திபன் சீதா
பார்த்திபன் சீதா இருவருமே அடிக்கடி கருத்தால் உரசிக் கொண்டாலும், ஒருவரையொருர் தாக்கியோ, அசிங்கமாக புகார் சொல்லியோ பேசிக் கொண்டதில்லை.. என்னுடைய மிகச்சிறந்த கணவர் ராமராஜன், ஏதோ விதி எங்களை பிரித்துவிட்டது என்கிறார் நளினி..
ஆனால், இப்போது ஒரு நடிகர் விவாகரத்துக்காக துடித்து கொண்டிருக்கிறார்.. கோர்ட்டில் கேஸ் நடந்து வருகிறது. பகிரங்கமாகவே தன்னுடைய காதலியுடன் கிரிக்கெட் போட்டி போகிறார், ஸ்டார் ஓட்டல் போகிறார்..
தனுஷ் - ஐஸ்வர்யா
இதுஒருபுறமிருந்தாலும், தனுஷ் - ஐஸ்வர்யா இருவருமே பிரிந்துவிடுவதாக சேர்ந்து அறிவித்துவிட்டார்கள்.. கோர்ட்டுக்கும் விவாகரத்து கேட்டு போனார்கள். அவர்களுடைய உடல்தான் பிரிந்திருக்கிறதே தவிர, ஐஸ்வர்யா உள்ளமும், தனுஷ் உள்ளமும் இணைந்துதான் உள்ளது..
தங்களின் இரு மகன்களின் பள்ளிக்கூடங்களில் எப்போதெல்லாம் விளையாட்டு போட்டிகள் நடக்கிறதோ, அல்லது தேர்வுகளில் கலந்து கொள்கிறார்களோ, அப்போதெல்லாம் தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே சென்று பங்கேற்று விடுகிறார்கள்..
எனவே பிரிந்திருப்பதை போல தோன்றினாலும் யாத்ரா, லிங்காவுக்காக தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே விமர்சித்து கொள்வதில்லை.. தனுஷ் படம் வந்தால் வாழ்த்துவது, ஐஸ்வர்யா படம் வந்தால் வாழ்த்துவது என இருவருமே இணைந்துதான் உள்ளனர்..
பள்ளிப்படிப்பு - போட்டோ
சமீபத்தில் யாத்ரா தன்னுடைய பள்ளிப்படிப்பு 12ம் வகுப்பை முடித்து விட்டார்.. இதற்கு பட்டமும் தருவார்கள்.. இந்த பட்டத்தை வாங்கி கொண்ட யாத்ரா, இடது கரததில் ஐஸ்வர்யாவையும், வலது கரத்தில் தனுஷையும் ஒன்றாக கட்டிப்பிடித்து ஆசி பெறுவது போல இருந்தது.. இந்த போட்டோவும் இணையத்தில் வைரலாகியது.
அந்த விழாவில் தனுஷூம், ஐஸ்வர்யாவும் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தார்கள்.. அதைவிட முக்கியமாக, ஐஸ்வர்யாவின் அப்பா ரஜினிகாந்த், "என்னுடைய பேரன் வாழ்க்கையில் இது ஒரு மைல்கல்" என்று குறிப்பிட்டுள்ளார்..
அப்பா, அம்மா பிரிந்துவிட்டது போல தோன்றினாலும், கணவனும் மனைவியும் பிரிந்து விட்டது போல தோன்றினாலும், உள்ளம் ஒன்றாகவே உள்ளது என்பதைதான் நிரூபித்திருக்கிறார்கள் தனுஷூம், ஐஸ்வர்யாவும்..
இதை பிரிந்துள்ள மற்ற நடிகர்களும் பின்பற்றினால் நல்லது.. ஏனென்றால், பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு நல்லது நடக்கும்போது, அப்பா, அம்மா பிரிந்துவிட்டார்கள் என்றால் மிகப்பெரிய அவச்சொல் வரும்.. இது பிள்ளைகளை அன்று கட்டாயம் பாதிக்கும்..
எறும்பூர கல்லும் தேயும்
எறும்பூர கல்லும் தேயும் என்பது போல, யாத்ராவும், லிங்காவும் தங்களுடைய அப்பா, மனதை கரைத்து விட்டார்கள்.. இதன்காரணமாக, பிரிந்திருந்தவர்கள் மீண்டும் இணைகிறார்கள்.. இது யாத்ரா லிங்காவுக்கு மட்டும் இன்ப அதிர்ச்சி அல்ல.. ரஜினிகாந்த், தனுஷ் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாகும்.. எந்த ரசிகரும், தங்களது அபிமான்ய நடிகர் விவாகரத்து செய்வதை விரும்புவதில்லை..
விவாகரத்து செய்யும் நடிகர்களும் மீண்டும் சினிமாவில் மார்க்கெட்டை பிடித்ததில்லை.. மாறாக, விவாகரத்து செய்யும் நடிகைகள் நல்ல நிலைமைக்கு வந்துவிடுகிறார்கள், ஆனால், நடிகர்கள் மார்க்கெட் இறங்கிவிடுகிறது.. இவர்களது படங்களையும் பெண் ரசிகைகள் விரும்புவதில்லை.. கமல் படம் ரஜினியைவிட குறைவாக வசூல் பெற இதுதான் காரணம்..
தீப்பந்தம் - ரசிகர்கள்
சமீபத்தில் தனுஷ் ஒரு பதிவு போட்டிருந்தார்.. அதில், "நீங்க என்னை எவ்ளோ வேண்டுமானாலும் கிண்டல் செய்யுங்க.. எவவளவு வேண்டுமானாலும் வதந்தி பரப்புங்க.. ஆனால் ஒரு செங்கல்லை கூட ஆட்ட முடியாது, அசைக்க முடியாது.. ஏனென்றால் தீப்பந்தம் போல என் ரசிகர்கள் என்னுடன் இருக்கிறார்கள்.. என்னுடைய ரசிகர்கள்தான் என்னுடைய வழிகாட்டி.. என்னை சந்தோஷமாக வைத்திருப்பதே என்னுடைய ரசிகர்கள்தான்" என்று பதிவிட்டிருந்தார்" என்று தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications