பல்லவியை காதலித்தேன்! பிறகு ஏற்பட்ட பிரச்சனை.. இப்பவும் அந்த வலி.. ஜி.எம் குமார் ஓபன்
சென்னை: இயக்குனர் மற்றும் நடிகராக இருக்கும் நடிகர் ஜி.எம் குமார் பேட்டி ஒன்றில் நடிகை பல்லவியை காதலித்து பற்றி பேசியிருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பற்றி வருகிறது அது பற்றி பார்க்கலாம்.
சினிமா துறையில் ஒன்றாக நடித்து அல்லது ஒரே படத்தில் வேலை செய்த பலர் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பலர் திருமண வாழ்க்கையில் ஒன்றாக பயணிப்பது இல்லை. ஒரு சிலர் மட்டும்தான் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமாக கொண்டு போய் இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கும் ஜி.எம் குமார் தன்னுடைய படத்தில் நடிகையாக நடித்த பல்லவியை காதலித்து பிறகு பிரிந்தது குறித்து பேசி இருக்கிறார்.

அதே நேரத்தில் ஜி.எம் குமார் முதலில் பாக்கியராஜ் இடம் அசிஸ்டன்டாக இருந்து பிறகு அறுவடை நாள் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக மாறி இருக்கிறார். முதல் திரைப்படம் இவர் நினைத்த அளவிற்கு பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆனால் அதற்குப் பிறகு இவர் இயக்கி தயாரித்த நான்கு படங்கள் அடுத்தடுத்து சென்சார் பிரச்சனையில் சிக்கி இருக்கிறது.
அந்த நேரத்தில் அதிகமான கடனில் மூழ்கிய ஜிஎம் குமாருடன் இருந்த பலர் விலகி இருக்கிறார்கள். அப்போது ஜிஎம் குமாருக்கு சப்போர்ட்டாக நடிகை பல்லவி தான் இருந்திருக்கிறார். பல்லவி வேலைக்காரன் திரைப்படம் உட்பட பல திரைப்படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். பல்லவிக்கும் ஜிஎம் குமாருக்கும் முதலில் அறிமுகம் ஏற்பட்டது ஒரு திரைப்பட ஆடிஷனில் தானாம். தன்னுடைய படத்தின் ஆடிஷனுக்காக பலரை இண்டர்வியூ செய்து கொண்டிருந்த ஜி எம் குமார் கண்ணில் பல்லவி பட்டிருக்கிறார்.
அவரிடம் ஜிஎம் குமார் ஒரு வசனத்தை கொடுக்க அதை அழகாக பல்லவி பேசி விட்டாராம். உடனே அவரை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்த அப்போது எல்லோரும் நீ நல்ல ஆளை தான் புடிச்சிருக்க இவங்க ஏற்கனவே கன்னடா தெலுங்குல பிரபலமா இருக்காங்க என்று சொல்ல அப்போதான் ஜி எம் குமாருக்கு இவர் நடிகை என்பதே தெரிய வந்ததா அதற்கு பிறகு முதலில் நட்பு தொடங்கி பிறகு காதலி இவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் தொடர்ச்சியாக தன்னுடைய திரைப்படங்கள் சென்சார் பிரச்சனையை சிக்கியிருந்த நிலையில் விரக்தியில் ஜிஎம் குமார் ஊட்டியில் காட்டிற்கு சென்று விட்டாராம். அங்கு காதலை விட போட்டோ எடுப்பது நல்லா இருக்கு என்று ஆறு வருடம் காட்டிற்குள் இருந்து விட்டாராம். அப்போது தான் பல்லவி ஜி எம் குமாரை பிரிந்து இருக்கிறார்.
இது குறித்து ஜி.எம் குமார் பேசுகையில் நான் பல்லவியுடன் நிறைய முறை காரில் பாம்பேவிற்கு சென்று வந்து இருக்கிறேன். ஆரம்பத்தில் பாம்பே போகும்போது குறைந்தது 45 மணி நேரம் ஆகும். அதற்குப் பிறகு 50 மணி நேரம் ஆனது. இப்போதெல்லாம் நேரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அந்த பயணத்தின் தூரம் 1500 கிலோமீட்டர் 21 மணி நேரத்தில் காரில் கடந்து விட முடியும். முன்பெல்லாம் நானும் பல்லவியும் காரில் பாம்பேக்கு போவோம்.
ஆனால் இப்போது நான் செல்கிறேன் அவள் அவளுடைய கணவரோடு செல்கிறார். நான் பல்லவியைப் பிரிந்த பிறகு அவள் என்னை பாம்பேக்கு ஒரு முறை அழைத்து இருந்தாள். அப்ப கூட நான் என்னிடம் காசு இல்லை என்று சொன்னேன். ஆனால் அவள் பெட்ரோல், தங்குவது உள்ளிட்ட எல்லா விஷயங்களை நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னாள். தற்போது பல்லவி சந்தோசமாக இருக்கிறார்.
ஆனால் அவளுடைய மகன் இறந்தபோது பல்லவி ரொம்ப கஷ்டப்பட்டாள். அவளுக்கு தற்போது மிகவும் நல்ல கணவர் அமைந்திருக்கிறார். அவர் வெளிநாட்டவர் அவர் கூகுளில் பொறியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு குழந்தைகள் இல்லை. அவளுக்கு அப்போதே உடலில் ஏதோ பிரச்சனை இருந்தது. முன்பு அவளுக்கு இங்கு இருந்தபோது கடன் தொல்லை இருந்தது.
இப்போ அவளுக்கு கடன் தொல்லை இல்லை. 2008 ஆம் ஆண்டு அவள் என்னை விட்டு சென்று விட்டாள். ஆனால் நிச்சயமாக அந்த காதலாக எமோஷனல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் காலப்போக்கில் அது கொஞ்சம் கொஞ்சமாக போய்விட்டது. மாயாண்டி குடும்பத்தார், வெயில், அவன் இவன் போன்ற படங்களில் சோகமான கட்சிகளில் நடிக்கும் போதெல்லாம் நான் அவள் என்னை விட்டு சென்ற பிரிவினை நினைத்து தான் நடித்தேன்.
உண்மையில் அந்த படங்களில் வெளிப்படுத்திய நடிப்பு அனைத்தும் அவள் கொடுத்த பிரிவின் வலிதான். அதனால்தான் அதில் அவ்வளவு உண்மை இருக்கிறது. அந்த பிரிவின் வலி கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டிருக்கிறது. ஆகையால் இப்போது நான் நடிக்க ஆரம்பித்து இருக்கிறேன் என்று அந்த பேட்டியில் ஜிஎம் குமார் பேசியிருக்கிறார்.
அதுபோல பல்லவி ஆரம்பத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் உன்னை நினைத்து திரைப்படத்தில் நடிகை லைலாவின் அம்மாவாக தலைவாசல் விஜயின் மனைவி ஆக நடித்திருந்தார். அது அவருக்கு நெகட்டிவான பெயரை வாங்கி கொடுத்தது. அதற்குப் பிறகு அதிகமாக தமிழ் படங்களில் பல்லவி நடிப்பதில்லை.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications