என் கோரிக்கை ஏற்கப்படவில்லை.. கணவருடன் பேச விரும்புகிறேன்.. ஜெயம் ரவி மனைவியின் திடீர் பதிவு
சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி நான் அமைதியாக இருப்பதால் என்னை பற்றி வரும் குற்றச்சாட்டுகளுக்கு நான் குற்ற உணர்ச்சியில் இருப்பதாக பொருள்படாது. என்னுடைய கணவரோடு சேர்ந்து வாழ விரும்புகிறேன் என்று instagram பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தான் தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து விவாகரத்து வேண்டி இருக்கிறார். ஆனால் ஜெயம் ரவியின் மனைவி அதை மறுத்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் விவாகரத்து என்பது ஜெயம் ரவி தனிப்பட்ட முறையில் எடுத்த விஷயம். என்னிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்று சொல்லியிருந்தார். அதை தொடர்ந்து இவர்களின் பிரிவை வைத்து தொடர்ச்சியாக பல்வேறு வதந்திகளும், சர்ச்சைகளும் பல பரவி வருகிறது.

இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்த்தி ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில் எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பொதுவெளியில் பகிரப்படும் கருத்துக்களை பார்த்து நான் அமைதியாக இருப்பது என்னுடைய பலவீனம் மற்றும் குற்ற உணர்ச்சியினால் அல்ல. உண்மையை மறைக்க என்னைப் பற்றி மோசமாக சித்தரிக்க முயற்சி செய்பவர்களுக்கு பதில் அளிக்காமல் நான் கண்ணியமாக இருக்கிறேன்.

ஆனால் நீதி நிலை நிறுத்தப்படும் என்று நம்புகிறேன். தெளிவாக சொல்வது என்றால் நான் ஏற்கனவே விடுத்த அறிக்கையில் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது. அது அவர்(ஜெயம் ரவி) எடுத்த தனிப்பட்ட முடிவு தான். அவரின் முடிவு அதிர்ச்சியை அளிக்கிறது. இப்பவும் நான் அவருடன் தனிப்பட்ட முறையில் பேச தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கான வாய்ப்பு இப்போது வரைக்கும் எனக்கு மறுக்கப்பட்டுள்ளது.
திருமண பந்தத்தை நான் மிகவும் மதிக்கிறேன். இது பற்றி பொதுவெளியில் பேசி யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. என்னுடைய குடும்பத்தின் நலனே எனக்கு முக்கியம், கடவுள் அருள் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications