பண்ணை வீட்டில் நடிகரின் கள்ள காதலி? தினமும் 12 பீர்? நம்ம விஜயகாந்த் போல பாசக்கார வள்ளல் கலாபவன் மணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கம்யூனிஸ சிந்தனை கொண்ட கலாபவன் மணிக்கு எதிரிகள் கிடையாது.. அனைவருடனும் நட்பாகவே இருந்துள்ளார்.. யாருடனும் மோதல் போக்கு இருந்ததில்லை. எல்லாருக்கும் நல்லவராக இருந்துள்ளார்.. சிறந்த மனிதர், சிறந்த நடிகர்.. இப்போதும் அவர் பாடிய பாடல்களை பாடிக் கொண்டேயிருக்கிறார்கள்" என்று நடிகர் கலாபவன் பற்றி புகழாரம் சூட்டியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப்.

Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "கலாபவன் மணி ஆட்டோ டிரைவராக இருந்தவர்.. பிறகு நாடக நடிகரானார்.. பிறகு மிமிக்ரி கலைஞர் ஆனார்..

மிகச்சிறந்த பாடகரும்கூட.. மலையாள நாட்டுப்புற பாடல்களை அதிகமாக பாடுவார்.. கம்யூனிச சித்தாந்தத்துடன் தொடர்புடையவர்.. எனவே, மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஈர்ப்பு கலாபவன் மணிக்கு கிடைத்தது.. அதற்கு பிறகுதான் சினிமாவுக்கே நடிக்க வந்தார்..


சிறந்த டப்பிங் கலைஞர்

மம்முட்டி போன்றோருடன் மிகப்பெரிய நட்பு இருந்தது.. மம்முட்டி, கலாபவன் இருவருமே எந்த மொழியில் நடித்தாலும், அந்தந்த மொழியை கற்றுக் கொண்டு டப்பிங் பேசக்கூடியவர்கள்,., கலாபவன் மணி, தமிழ் நல்லா பேசுவார்.. தெலுங்கு நன்றாக பேசுவார்.. இந்தி பேசுவார்..

ஜெமினி படத்தில் வித்தியாசமான வில்லனாக தோன்றினார்.. காமெடி + மிமிக்ரி கலந்த வில்லனாக வந்தார்.. அதனால்தான் மக்கள் மனதில் எளிதாக இடம்பிடித்தார். அந்தந்த மொழியில் நடிக்கும்போதெல்லாம் நல்ல பெயரை பெற்றார்.

கல்லீரல் சிகிச்சை

உதவும் மனப்பான்மை கொண்டவர் கலாபவன் மணி.. தன்னுடைய உதவியாளர் கல்லீரல் சிகிச்சையால் அவதிப்படும்போது 10 லட்சம் ரூபாய் தந்து அவரை காப்பாற்றியிருக்கிறார்.

தன்னுடைய அப்பா மீது பெரும் மதிப்பு கொண்டவர்.. அந்த காலத்தில் அவரது அப்பா மாட்டு வண்டி ஓட்டி வந்துள்ளார்.. அந்த மாட்டு வண்டியை,, கடைசிவரை தன்னுடன் பத்திரப்படுத்தி வைத்திருந்தார் கலாபவன் மணி.

ஒரு பண்ணை வீட்டில்தான் அவரது அப்பா வேலை பார்த்து வந்திருக்கிறார்.. கடுமையாக உழைத்து, தன்னுடைய அப்பா வேலை பார்த்த அதே பண்ணையை, விலைக்கு வாங்கி, அந்த பண்ணை வீட்டிலேயே, எஜமானராக உட்கார வைத்துள்ளார் கலாபவன் மணி. அந்த பண்ணை வீட்டில்தான் அப்பாவுடன் பெரும்பாலான நேரத்தை செலவிட்டார் கலாபவன் மணி..

பண்ணை வீட்டில் மகிழ்ச்சி

அதேபோல தன்னுடைய சினிமா வட்டார நண்பர்களை பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று சிறந்த முறையில் உபசரித்து, அவர்களுடன் ஜாலியாக இருந்திருக்கிறார்..
அதனால் கலாபவன் மணி இறந்ததுமே, அந்த பண்ணை வீட்டில்தான் அடக்கம் செய்யப்பட்டார்.

மதுப்பழக்கம் கலாபவன் மணிக்கு இருந்தது.. ஒருநாளைக்கு 12 பீர் குடிப்பாராம் கலாபவன் மணி.. பெண்கள் விஷயத்தில் மோசமானவர் என்று சொல்ல முடியாது.. அவரை தேடிதான் பெண்கள் சென்றுள்ளனர்..

துபாய் போன்ற நாடுகளில் மலையாள திரைப்படங்களின் விழா நடக்கும்போதெல்லாம், கலாபவன் மணி மிமிக்ரி ஷோ செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளர்.. அதனால் சவூதி அரேபியாவில் இவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது..

நம்ம ஊர் விஜயகாந்த்

அதேபோல, யாராவது புதிதாக டிவி சேனல் தொடங்கினால், கலாபவன் மணியைதான் முதலில் கூப்பிடுவார்களாம்.. காரணம் கிண்டல், கேலி, மிமிக்ரி என எதையாவது செய்து ஓவர்நைட்டில் அந்த சேனலை பாப்புலராக்கி விடுவாராம்..

நம்ம ஊர் விஜயகாந்த் போல , கேரளாவில் கலாபவன் மணியை சொல்லலாம்.. ஏழைகள் மீது இரக்கம் கொண்டவர்.. பணத்தேவை என்று வந்தவர்களுக்கு அள்ளி தந்திருக்கிறார்..

சிலருக்கு வீடு கட்டி தந்துள்ளார்.. சிலருக்கு மருத்துவமனை கட்டி தந்துள்ளார்.. மம்முட்டி, மோகன்லால் அளவுக்கு சூப்பர் ஸ்டாராக இல்லாவிட்டாலும், அதற்கு அடுத்தக்கட்ட நடிகராக இருந்தும், இத்தனை உதவிகளை செய்து வந்துள்ளார்..

ஆட்டோ ஓட்டுநர்கள்

ஆட்டோ ஓட்டுனராக இருந்ததால், ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் எப்போதுமே அவருக்கு நல்ல பெயர் உள்ளது.. அவரே காமெடி எழுதுவார், ஸ்கிரிப்ட் எழுதி நடிப்பார்.. பாடல்களையும் எழுதுவார்.. இதெல்லாம் பிறரை கவரும்படியாகவே இருந்தது.. அதனால்தான், மலையாளத்தில் நிறைய காமெடி நடிகர்கள் இருந்தாலும் கலாபவன் மணி அளவுக்கு அவர்களால் புகழ் பெற முடியவில்லை. எந்நேரமும் பிஸியான நடிகராகவே வலம் வந்தார் கலாபவன் மணி..

சூனியம் வைத்தார்களா

அவரது மரணத்துக்கு பல காரணங்கள் சொல்கிறார்கள்.. அந்த தருணத்தில் அவரது நண்பர்கள் வந்து போனதாகவும் சொல்கிறார்கள்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், பூச்சிக்கொல்லி மருந்து அவரது உடலில் கலந்திருந்தது தெரியவந்தது.. ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளார்.. சிலர் அவருக்கு சூனியம் வைத்திருக்கலாம் என்கிறார்கள்.,,.
அதாவது, ரத்தம் கக்கி இறந்துள்ளதால், சொத்துக்காக பண்ணை வீட்டில் சூனியம் வைத்திருக்கலாம், என்றார்கள்..

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொன்னதால், இந்த மரண வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பட்டது.. சிபிஐ இதனை விசாரித்து, இது கொலை இல்லை, இயற்கையான மரணம் என்று 35 பக்கத்துக்கு அறிக்கை தந்தது..

கம்யூனிஸ சிந்தனை கொண்ட கலாபவன் மணிக்கு எதிரிகள் கிடையாது.. அனைவருடனும் நட்பாகவே இருந்துள்ளார்.. யாருடனும் மோதல் போக்கு இருந்ததில்லை. எல்லாருக்கும் நல்லவராக இருந்துள்ளார்.. சிறந்த மனிதர், சிறந்த நடிகர்.. இப்போதும் அவர் பாடிய பாடல்களை பாடிக் கொண்டேயிருக்கிறார்கள்..

சமாதி மண்

சீயான் விக்ரம் இன்னமும் கலாபவன் மணி பற்றி பேசிக் கொண்டேயிருப்பார்.. பண்ணை வீட்டிலுள்ள அந்த சமாதிக்கு, ஆந்திரா, தமிழ், கர்நாடக ரசிகர்கள் சென்று வருகிறார்கள்..

ஆரம்பத்தில் சமாதி கட்டாதபோது வெறும் மண் கொட்டப்பட்டிருந்தது.. அந்த மண்ணைகூட சில ரசிகர்கள் எடுத்து சென்றார்கள்.. ஆனால், மண்ணை கொண்டுபோன சிலர் இதனால் பயந்தும் போனார்கள்.. நிறைய பேர் மண்ணை அள்ளி சென்றதால், அங்கு சமாதி கட்டப்பட்டுவிட்டது.. அந்த பண்ணை வீட்டில் இப்போது யாருமில்லை" என்றெல்லாம் பேட்டியில் கூறியிருக்கிறார்.

கள்ளக்காதலி

கலாபவன் மணிக்கு கஞ்சா பழக்கம் இருந்தாக கூறப்பட்டது.. அதேபோல, மணிக்கும் இடுக்கியை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் அவரது நெருங்கிய நண்பர்கள் கூறியிருந்தனர்.. இந்த பெண் டாக்டர் தொடர்பால், மனைவியை விவாகரத்து செய்துவிடுவாரோ என்ற பயத்தில் அவரின் உறவினர்கள் இருந்தார்களாம். இப்படியெல்லாம் கேரள மீடியாவில் அன்றைய தினம் செய்திகள் கசிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+