அந்த நடிகர் என்னை ஒரு பெண்ணா மதிச்சதே இல்லை.. பல வருடம் கழித்து மனம் திறந்த நடிகை சுலக்ஷனா
சென்னை: நடிகை சுலக்ஷனா தன்னை நடிகர் கார்த்திக்கு ஒரு பெண்ணாக எப்போதும் மதித்தது கிடையாது என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
நடிகர் கார்த்திகோடு பல திரைப்படங்களில் நடித்த நிலையில் சுலக்ஷனா கார்த்திக் தன்னை கிண்டல் செய்யும் காரணத்தைப் பற்றியும் அதில் பகிர்ந்து இருக்கிறார்.
சூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக கலகலப்பாக இருக்கும் கார்த்திக் எதற்காக சுலோக்சனாவிடம் மட்டும் இப்படி ஒரு வார்த்தையை கூறினார் என்று அவர் பகிர்ந்து இருப்பதை பார்க்கலாம்.

பல காலமாக பல நடிகைகள் வெள்ளி திரையில் கொடி கட்டி பறந்து விட்டு தங்களுக்கு அங்கே மார்க்கெட் கொஞ்சம் சரியத் தொடங்கியதும் சின்ன திரையில் கதாநாயகியாகவும், அம்மா கேரக்டர்களும், அக்கா கேரக்டரிலும் குணச்சித்திர கேரக்டர்களிலும் நடிக்க தொடங்கி விடுவார்கள். அந்த வரிசையில் ஒருவர் தான் சுலக்ஷனா.
துலாபாரம் என்ற திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதற்குப் பிறகு தூறல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அவதாரம் எடுத்து கிட்டத்தட்ட 450 மடங்களுக்கு மேலே சுலக்ஷனா நடித்திருக்கிறார். அதுவும் கமல் ரஜினி இருவரோடும் ஜோடி போட்ட நடிகைகளில் இவரும் ஒருவர். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் நடிகையாக இருக்கும் போது கிடைத்த அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றி கூறியிருக்கிறார்.
அதில் நடிகர் கார்த்திக் பற்றி பலருக்கும் தெரியும். சூட்டிங் ஸ்பாட்டில் அவர் எப்போதும் கலகலப்பாக அனைவரிடமும் பேசிக் கொண்டிருப்பாராம். அந்த வகையில் சுலக்ஷனா உடன் சேர்த்து நடிக்கும் போது எப்போதும் உன்னை ஒரு பெண்ணாக நினைத்ததே கிடையாது என்று கூறுவாராம். அதோடு நீ எனக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் உன்னை பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோணுகிறது ஒரு பொண்ணு என்கிற ஃபீலிங் கொஞ்சம் கூட இல்லை என்று கிண்டல் செய்வாராம்.

அதுபோல சுலக்ஷனாவை பார்த்து,உனக்கு யாரு நடிக்கிறதுக்கு வாய்ப்பு கொடுத்தா? ஒரு ஹீல்ஸ் செருப்பு போட்டு நடிக்க கூட தெரியல. இவங்களுக்கு கதாநாயகி வாய்ப்பு கொடுத்து இருக்காங்களே என்று அடிக்கடி கலாய்ப்பாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கடி கிண்டல் செய்து கொண்டிருந்தாலும் அவர் மீது கோபம் வராது. அனைவருக்கும் அவரை பார்த்து சிரிப்புதான் வரும் என்று கார்த்திக் பற்றி பல தகவல்களை கூறியிருக்கிறார்.
-
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications