365 நாளும் "பாய்ஸ் கட்ல" இருக்கும் கிரேஸ்! "சுவாரஸ்ய" காரணம் சொன்ன கருணாஸ்!
சென்னை: என் மனைவிக்கு நீளமான கூந்தல் இருந்தது. அதை கட் செய்ததே நான்தான் என நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான படம் நந்தா. இதில் லொடுக்கு பாண்டி என்ற கேரக்டரில் நடித்தவர் கருணாஸ். முதல் படமே அவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்துவிட்டது.

இதையடுத்து அவர் வில்லன், புதிய கீதை, திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி, வசூல் ராஜா எம்பிபிஎஸ், பாபா, பொல்லாதவன், கற்றது தமிழ் உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடித்திருந்தார். திருடா திருடியில் ஏ மச்சான் நீ கேளேன், நீ கேளேன் என காமெடி செய்வார்.
திண்டுக்கல் பார்த்தசாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டு அரசியலில் ஆர்வம் காட்டினார். முக்குலத்தோர் புலிப் படை எனும் கட்சியைத் தொடங்கினார். இதன் மூலம் முக்குலத்தோர் சமுதாயத்தினர் மட்டுமல்லாமல் அடித்தட்டு மக்களும் வளர்ச்சி பெறவே அரசியலில் இறங்கினார்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்த கருணாஸ் 2016 ஆம் ஆண்டு அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுகவுக்கு தனது ஆதரவு என கூறிய நிலையில் திடீரென வாபஸ் பெற்றார். இவர் முன்னதாக கிரேஸ் எனும் பின்னணி பாடகியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் கென் கருணாஸ் அசுரன், வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். கிரேஸ் திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பாடலை பாடியிருந்தார். மேலும் அவர் விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பாய்ஸ் கட் லுக்கில் கிரேஸ் மிகவும் அழகாக இருப்பார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் ஒரு பேட்டியில் கருணாஸ் கூறியிருப்பதாவது: என் மனைவி கிரேஸுக்கு திருமணத்திற்கு முன்னர் நீளமான முடி இருந்தது. ஆனால் நான்தான் வெட்டிவிட்டுட்டேன். அதனால்தான் அவர் எப்போதும் பாய்ஸ் கட்டில் இருக்கிறார்.
பாய்ஸ் கட் செய்தால்தான் பெண்களுக்கு ஒரு தைரியமும், தன்னம்பிக்கையும் வரும். அதனால்தான் நான் அவரது தலை முடியை வெட்டிவிட்டுவிட்டேன். இவ்வாறு கருணாஸ் தெரிவித்துள்ளார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்












Click it and Unblock the Notifications