தம்பதின்னா பேசிட்டே இருக்கணுமா? மாலையும் கழுத்துமா நின்றாரே மாதம்பட்டி ரங்கராஜ்? அது இல்லீகல் உறவா?
சென்னை: பிரபலங்கள் வீட்டு விசேஷம் என்றாலே மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் தான்.. தன்னுடைய தொழிலில் பெரிய வளர்ச்சி பெற்றவர் விஜய் டிவி பக்கம் வந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். ஹெலிகாப்டரிலேயே சென்று விஐபி வீடுகளுக்கு சென்று சமைக்கும் அளவுக்கு காஸ்ட்லி சமையல்காரராக உள்ளார் .. ஆனால், இவரது குடும்பத்தில் சலசலப்பு தினந்தோறும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து இதுவரை ரங்கராஜ் எந்தவிதமான விளக்கத்தையும் தரவில்லை. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்று தந்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ். காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிரிஸில்டா என்பவராவார்.. சமீபத்தில், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆன போட்டோக்களை ஷேர் செய்து, தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

சந்தேகங்கள் - சலசலப்புகள்
ஜாய்-மாதம்பட்டி ரங்கராஜ் உறவு, பல சந்தேகங்களையும், சலசலப்பையும் உண்டுபண்ணியது.. அதுவரை இன்ஸ்டாவில், மனைவி ஸ்ருதியை அன்ஃபாலோ செய்திருந்த மாதம்பட்டி, ஜாய் கிரிஸில்டாவை இன்ஸ்டாவில் ப்ளாக் செய்து விட்டு ஸ்ருதியை இப்போது ஃபாலோ செய்து வருவதாக கூறப்படுகிறது. அப்படியானால், ஜாயை மாதம்பட்டி ரங்கராஜ் பிரிந்துவிட்டாரா? என்பது தெரியவில்லை..
ஆனால், ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜூடனான உறவு குறித்தும், வயிற்றிலுள்ள குழந்தை குறித்தும், போட்டோக்களையும், போஸ்ட்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
கடந்த வாரம் மாதம்பட்டி ரங்கராஜ், முதல் மனைவி ஸ்ருதி இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.. இருவருமே பக்கத்தில் அமர்ந்திருந்தாலும் ஒருவரையொருவர் பார்த்து கொள்ளவில்லை, பேசிக் கொள்ளவுமில்லை..
நெருக்கமான வீடியோ
இந்த நிலையில் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜாய் கிரிசில்டா. அதில், மாதம்பட்டியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு, இந்த லிப்லாக் வீடியோவை எடிட் செய்தது எனது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் என்று கூறி, டேக் செய்திருக்கிறார். இந்த வீடியோவில் எனக்காக பிறந்தாயே எனதழகி என்ற பாடலை பேக்ரவுண்ட் மியூசிக்காக வைத்துள்ளார்.
இப்படிப்பட்ட சூழலில், Frontvoods TV என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், "சேர்ந்து வரவில்லை.. ஒரே காரில் வரவில்லை.. தனித்தனி காரில் வந்துள்ளனர்.. எதிர்பாராத விதமாக இருவரும் ஒரேஇடத்தில் உட்கார வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.. ஸ்ருதியும், ரங்கராஜூம் பேசிக் கொள்ளவில்லை என்பது அனைவருக்குமே தெரிந்துவிட்டது..
முதல் மனைவி ஸ்ருதி
மாதம்பட்டி ரங்கராஜூக்கு இரண்டாவது திருமணம் நடந்துவிட்டதா? இல்லையா? என்பதுபோலத்தான், ஸ்ருதிக்கும் மாதம்பட்டிக்கும் உறவு இருக்கா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை.
ஸ்ருதி ஒரு வழக்கறிஞராவார்.. திமுகவில் சொற்பொழிவாளராகவும் உள்ளார்.. எனவே, இதுதொடர்பாக தேவையில்லாமல் ஸ்ருதி பேச முடியாது.. இப்போதும் ஸ்ருதிதான் மனைவி.. அங்கீகரிக்கப்பட்ட மனைவியும் கூட..
விவாகரத்தை ரத்து செய்துவிட்டதாக சொல்கிறார்கள்.. அதன் உண்மைத்தன்மை என்னவென்று தெரியவில்லை.. பெரும்பாலும் இதுபோன்ற விஷயங்களுக்கு விவாகரத்துதர மாட்டார்கள்.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. எதுக்காக விவாகரத்து என்று கேட்கும்போது, வலுவான காரணத்தை சொல்ல வேண்டும்.. எனவே விவாகரத்து வரை போகாமல் இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுவார்கள்.
6 மாத கர்ப்பம்
தன்னை திருமணம் செய்துகொள்ள, மாதம்பட்டி ரங்கராஜ் நாட்களை கடத்தியதால்தான், 6 மாத கர்ப்பமாக உள்ளதாக, தற்போது ஜாய் அறிவித்துள்ளார்.. கர்ப்பம் என்று மட்டும்தான் சொல்லியிருக்காரே தவிர, மாதம்பட்டி ரங்கராஜ்தான் குழந்தையின் அப்பா என்பதை உறுதியாக அவரால் சொல்ல முடியவில்லையே? இதை மாதம்பட்டி ரங்கராஜ் சொன்னால்தான், அதனை உண்மையாக கருத முடியும்.
மாலை மாற்றிக் கொண்ட போட்டோவை ஜாய் பகிர்ந்திருந்தார்.. அதற்காக அதனை கல்யாணம் என்று சொல்லிவிட முடியாது.. மாலை போட்டுக் கொண்டு யார் வேண்டுமானாலும் போட்டோ எடுத்து கொள்ளலாம்.. அதுக்காக அது கல்யாணமாகிவிடுமா?
மாலையும் கழுத்துமாக
திருமணம் என்றால் அதை முறைப்படி பதிவு செய்ய வேண்டாமா?கோயில் என்றாலும், அங்கு பதிவு செய்திருக்க வேண்டுமே? இரண்டாவது பதிவு, ரிஜிஸ்டர் ஆபீஸில் செய்யணுமே? இந்த இரண்டு பதிவுகளுமே நடக்கவில்லையே? எனவே இது சட்டவிரோதமான திருமணம்.
எனவே, இது இல்லீகலான உறவு இருக்கலாம்,. அத்துடன் தன்னுடைய கணவர் என்றும் ஜாய் சொல்லி கொள்ளலாம். ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ், சட்டப்படி, வயிற்றிலுள்ள கருவுக்கும் தந்தையாக முடியாது, ஜாய்-க்கும் கணவராக முடியாது. தனக்கு 2வது திருமணம் நடந்துவிட்டது என்று மாதம்பட்டி ரங்கராஜ் அறிவித்தால் மட்டுமே, இதுகுறித்து ஸ்ருதி பேச முடியும்.. மாதம்பட்டியே இதுகுறித்து பேசாததால், ஸ்ருதிக்கு எந்த சிக்கலும் இல்லை..
அந்த விழாவில் கலந்துகொண்டபோது, ஸ்ருதியிடம் மாதம்பட்டி ரங்கராஜ் பேசவில்லை.. கணவன்-மனைவி என்றால் எந்நேரமும் பேசிக் கொண்டேயிருக்க வேண்டுமா? இருவரும் அங்கு சண்டையும் போட்டுக் கொள்ளவில்லை. எனவே, இரு தரப்பிலுமே பொறுமையாக இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications