அப்பா கடைசியா போன் பண்ணி சொன்னது இதுதான்.. தங்கச்சியின் ஆசை.. கண்ணீரோடு மாரிமுத்துவின் மகன்
சென்னை: திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பால் காலமானார்.
அதாவது எதிர்நீச்சல் சீரியலில் டப்பிங் பேசிக் கொண்டிருக்கும்போது அவருக்கு ஏற்பட்ட அசெளகரியம் காரணமாக அவர் மருத்துவமனைக்கு சென்று இருந்த நிலையில் அங்கு உயிரிழந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவருடைய இறப்பு திரைத்துறையில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த நிலையில் தொடர்ச்சியாக சில நாட்களாகவே அவர் குறித்த நினைவுகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அதுபோல நடிகர் மாரிமுத்துவின் மகனும் தன்னுடைய தந்தை குறித்த நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியில் அவர் பல விஷயங்களை கூறியிருக்கிறார். அதாவது அப்பாவிற்கு இப்படி ஆகும் என்று நாங்கள் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. நாங்கள் மனதை திடப்படுத்திக் கொண்டாலும் அப்பா இறந்ததை தங்கையால் தான் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
மேலும் அப்பாவிற்கு நெஞ்சு வலி ஏற்கனவே வந்த சமயத்தில் நாங்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தோம். ஆனால் அந்த நேரத்தில் அவர் வீட்டிலிருந்தார். அதனால் உடனடியாக எங்களால் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போக முடிந்தது. அதோடு இந்த முறை தனக்கு நெஞ்சு வலிப்பதாக போன் செய்து இதற்கு முன்பு வந்ததை விட அதிகமாக வலிப்பதாகவும் கூறினார். இதனால் தான் நாங்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு போங்க, நாங்க அங்கு வந்து விடுகிறோம் என்றோம்.
அதுக்குள்ள இப்படி எல்லாம் ஆகும்னு நாங்க நினைக்கல. அதுபோல சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் என் தங்கைக்கு வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்பதுதான் அவங்க ஆசை. அந்த ஆசையை கண்டிப்பா நிறைவேற்றனும். ஏனென்றால் அப்பா இல்லாததால் எல்லாம் மாறிவிட்டதே என்று என்னுடைய தங்கையும் சரி என்னுடைய அம்மாவும் சரி வருத்தப்பட்டு விடக்கூடாது.

அவங்க இருவருக்கும் நான் இருக்கேன். எங்களுக்கு அவங்க இருக்காங்க. என்னால் முடிந்ததை நான் கண்டிப்பா செய்வேன் என்று மாரிமுத்துவின் மகன் அகிலன் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அத்தோடு பல பேட்டிகளில் மாரிமுத்து தன்னுடைய குழந்தைகள் பற்றி பெருமையாக பேசியிருக்கிறார். தன்னுடைய மகன் படித்து நல்ல நிலைமையில் இப்போது இருக்கிறான் என்றும், தன்னுடைய மகளும் நல்ல வேலையில் இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.
என்னுடைய மகன் இப்போது மாதம் 3 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறான். என்னுடைய மகளும் நல்ல வேலையில் சம்பளத்தோடு இருக்கின்றனர். அதே நேரத்தில் நாங்கள் எல்லோருமே குடும்ப whatsapp குரூப் வைத்திருக்கிறோம். அதில் நாங்கள் நான்கு பேரும் மட்டும் தான் இருக்கிறோம்.
நான் வாங்கும் சம்பளம் யார் யாருக்கு என்ன பணம் கொடுக்க வேண்டும் எங்கிருந்து எனக்கு பணம் வந்திருக்கிறது என்ற எல்லா விவரங்களையும் அதில் நான் பதிவிடுவேன். என்னுடைய பிள்ளைகளும் அதில் தான் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மாரிமுத்து ஏற்கனவே போட்டிகளில் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications