ரூ 10 லட்சம் கடனால் தவித்த கேப்டன்! விஜயகாந்துடன் நடிக்க மறுத்த மைக் மோகன்! GOATல் தரமான சம்பவம்
சென்னை: எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெற்றி நமதே என்ற படத்தில் விஜயகாந்துடன் இணைந்து நடிக்க நடிகர் மோகன் மறுத்துவிட்டார். ஆனால் அதன் பிறகு புரட்சிக் கலைஞராக வந்த அவருடன் மோகன் நூறாவது நாள் படத்தில் இணைந்தார், பின்னர் கோட் படத்திலும் செயற்கை நுண்ணறிவு மூலம் மோகனும் விஜயகாந்தும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிகள் இடம்பெற்றன.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிவப்பு மல்லி படத்திற்கு பிறகு விஜயகாந்த்துக்கு சத்யஜோதி பிலிம்ஸ் அட்வான்ஸ் கொடுக்கிறது. பிறகு அவர் நடித்த சில படங்கள் வரிசையாக சரியாக போகவில்லை.

வாய்ப்புகள் வரவில்லை. பணவரவு குறைகிறது. காருக்கு பெட்ரோல் போட பணமில்லை. அந்த நேரத்தில் சத்யஜோதி தந்த பத்து லட்ச ரூபாயும் காலியாகிறது. திடீரென சத்யஜோதி தந்த பணமும் காலியாக, படங்களும் இல்லாமல் போக வாய்ப்புகளை தேடுகிறார் விஜயகாந்த். சத்யஜோதி தயாரித்து விஜய்காந்த் நடிக்க இருந்த 'நெருப்புக்குள் ஈரம்', படத்தில் விஜய்காந்த்தை தூக்கிவிட்டு தியாகராஜனை நாயகனாக்கியது சத்யஜோதி. விஜய்காந்த்துக்கு இருந்த ஒரே படமும் போனது.
இந்த நிலையில் தந்த பத்துலட்சத்தை திருப்பிக் கேட்டு ஆளனுப்பியது சத்யஜோதி பிலிம்ஸ். "இப்போது படங்கள் இல்லை. கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்" என விஜய்காந்த் டைம் கேட்க நிறுவனம் சம்மதித்தது. எஸ்.ஏ.சி விஜய்காந்த்தை வைத்து அவர் கன்னடத்தில் எடுத்த 'கெளுவு நன்னடே' படத்தை தமிழில் எடுக்க ஒப்பந்தம் செய்தார். 'வெற்றி நமதே' என்கிற அப்படத்தில் டைகர் பிரபாகர்-அம்பரீஷ் நடித்த அந்தப் படத்தில் விஜயகாந்த்துடன் மோகன் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சில நாட்களில் மோகன் நடிக்க மாட்டேன் என விலகினார்.
அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டது. அந்த மோகனின் முன்னால் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் விஜய்காந்த் நடிப்பதாக GOAT படத்தில் காட்சி வந்தது. காலம் செய்த மாயம். (இந்த ஜோடியின் நூறாவது நாள் சூப்பர்ஹிட்).

இந்த நேரத்தில் இயக்குனர் விசுவால் 'டௌரி கல்யாணம்' வாய்ப்பு கிடைக்கிறது. அந்த தயாரிப்பாளர் நேரே விஜயகாந்திடம் வந்து "எங்களுக்கு ஃபைனான்ஸியர் சத்யஜோதி பிலிம்ஸ் தான். உங்கள் சம்பளம் பத்து லட்சத்தை கழித்து விட்டு தருவதாக சொல்கிறார்கள்" எனச் சொல்ல விஜய்காந்தோ "எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். ஐந்து லட்சத்தை எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள்" என நெருக்கடிக்கு சம்மதிக்கிறார்.
எஸ்.ஏ.சி மோகன் விலகிவிட்டதால் தன் 'சாட்சி' படத்தை தொடங்குகிறார். பிரபு, கார்த்திக் சம்மதிக்காததால் விஜய்காந்திடம் வருகிறார் எஸ்.ஏ.சி. சாட்சி விஜய்காந்த்தை முன்னணி ஹீரோவாக்குகிறது. பத்து லட்ச ரூபாய்க்கு நெருக்கடி கொடுத்த சத்யஜோதிக்கு பின்னாளில் ஒரு வெற்றிப்படம் கொடுக்கிறார் விஜய்காந்த். அது மெகாஹிட்டாகிறது. சத்யஜோதி அதற்கு முன் எடுத்த 'வேடன்', 'என்றும் அன்புடன்' ஓடவில்லை. பின் எடுத்த 'ஹரிச்சந்திரா'வும் ஓடவில்லை. அந்தப் படம் தான் 'ஹானஸ்ட் ராஜ்'. விஜய்காந்தின் பத்துலட்ச ஹானஸ்ட். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications