நைஸா தியேட்டருக்குள் நுழைந்த பிரபல நடிகர்.. சிவாவை சாத்தான்னு கூப்பிட்டதுமே.. பரபரத்த பறந்து போ டீம்
சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பறந்து போ' திரைப்படத்திற்கு மக்களின் அன்பும் வரவேற்பும் கிடைத்திருக்கிறது. இந்நிலையில், அப்படத்தில் நடித்திருக்கும் நடிகர் மிர்ச்சி சிவாவை, ரசிகர் ஒருவர் சாத்தானே என்று கூப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. இதுகுறித்த செய்திதான் இணையத்திலும் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது தூத்துக்குடியில்?
ராம் இயக்கத்தில் நடிகர் மிர்ச்சி சிவா, அஞ்சலி ஆகியோர் நடித்த 'பறந்து போ' படம், கடந்த 4ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை தந்து வருகிறார்கள்..

இதில், கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், விஜய் ஆண்டனி, மாஸ்டர் மிதுல் ரியான் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். தியேட்டர்கள் சக்கை போடு போட்டு வருவதால், 'பறந்து போ' படக்குழுவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.
சர்ப்ரைஸ் தந்த மிர்ச்சி சிவா
குறிப்பாக, நடிகர் மிர்ச்சி சிவா, டைரக்டர் ராம் ஆகியோர் தமிழகம் முழுவதுமுள்ள தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை நேரடியாகவே சந்தித்து, அவர்களிடம் உரையாடி வருகிறார்கள்.. அந்த வகையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு தியேட்டருக்கு இன்று நடிகர் மிர்ச்சி சிவா, இயக்குனர் ராம், மகன் வேடத்தில் நடித்த சிறுவன் மிதுல்ராயன் ஆகியோர் சென்றிருந்தனர்..
திடீரென தியேட்டருக்குள் நுழைந்து, அங்கே படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தனர்.. திடீரென படக்குழுவினரை பார்த்ததுமே, ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அப்போது ரசிகர் ஒருவர், நடிகர் சிவாவை பார்த்து சாத்தானே என்று கூப்பிட்டதுமே, தியேட்டரில் சிரிப்பலை எழுந்தது.
பிறகு தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்த அனைவரிடமும், நடிகர் சிவா மற்றும் இயக்குனர் ராம் ஆகியோர் கலகலவென பேசி மகிழ்ந்தனர்.
ஏழுகடல் ஏழுமலை
இயக்குனர் ராம் பேசும்போது, "ஆனந்த யாழை படம் நன்றாக இருக்கும். அதே போன்று தமிழ் சினிமா படங்கள் பல கொடுக்க வேண்டும் என்கிறீர்கள்.. கண்டிப்பாக பல படங்கள் வரும்" என்றார்.
உடனே ரசிகர்கள் இயக்குனர் ராமிடம், ஏன் இந்த படத்தை இவ்வளவு வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ளீர்கள்? சிறந்த இயக்குனரான நீங்கள் பல படங்கள் இயக்க வேண்டும் என்றனர்..
அதற்கு ராம் ஆமாம், இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றால் மேலும் அடுத்தடுத்த படங்கள் இயக்க உள்ளேன். இப்போது இயக்கி கொண்டிருக்கும் 'ஏழுகடல் ஏழுமலை' படம் மூன்று மாதத்தில் வந்துவிடும் என்றார்.
பிறகு ரசிகர்கள் மீண்டும் ராமிடம், உங்களுக்கு கிரஷ் ஏதும் உள்ளதா? என்று கேட்டார்கள்.. அதற்கு ராம், கிரஷ் இல்லாமல் பள்ளி, கல்லூரியில் சான்ஸே கிடையாது.. உலகத்தில் தினமும் சூரியன் நிலா உதிக்கின்ற மாதிரி கிரஷ்ஷூம் உண்டு..
சிறுவர்களின் வார்த்தைகள்
ஆனால், இப்போதுள்ள சிறுவர்கள் அனைவரும் அதிகமாக தகாத வார்த்தை பேசுகிறார்கள். அதுவும் இன்டர்நேஷனல் வார்த்தைகளாக உள்ளது. தற்போதெல்லாம் குழந்தை கேட்கக்கூடிய கேள்வி நாம் நம்முடைய அப்பாவிடம் கேட்டதை விட அதிகமாக உள்ளது. என் மகன் வாட்டர் பாட்டிலை தொலைத்து விட்டான். அப்போது அவனிடம் கோபப்பட்டு, வாட்டர் பாட்டில் எங்கே? என்று கேட்டேன்.
அதற்கு என் மகன், ஏன் என்னை திட்டுறீங்க? யாரோ வாட்டர் பாட்டில் எடுத்துட்டாங்க.. அதுக்கு நான் என்ன செய்வேன்? என்று கோபமாக பதில் சொல்கிறான்.. ஆக, குழந்தைகள் வேற மாதிரி பேச தொடங்கி விட்டார்கள். நம்முடைய காலத்தில் அப்பாவுடன் துணிந்து இப்படியெல்லாம் பேச மாட்டோம். இப்போது சிறுவர்கள் அப்படி கிடையாது.. அவர்களுக்கு வெளி உலகம் தெரிய வேண்டும் என்றார்.
ஓடி ஓடி உழைத்து
இதையடுத்து, நடிகர் சிவா பேசும்போது, உங்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. பல தியேட்டர்களுக்கு போயிருக்கிறேன்.. அங்கு ரசிகர்களை சந்தித்தும் இருக்கிறேன்.. ஆனால் யாரும் சாத்தான் என்று என்னை கூப்பிட்டதில்லை.. ஆனால் நீங்கள் அன்பாக என்னை சாத்தான் என்று கூப்பிட்டுள்ளீர்கள்.. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களின் அன்பு அதிலேயே தெரிகிறது என்றார்.
உடனே ரசிகர்கள், இந்தப் படத்திற்காக நீங்கள் ஓடி, ஓடி உழைச்சிருக்கீங்க போல? படத்தை பார்த்தாலே தெரிகிறதே என்றனர்..
அதற்கு சிவா, ஆமாம், படத்தில் வெயிலில் ஓடியதை வைத்து சொல்றீங்க.. உண்மைதான். 10 கிலோ குறைந்து விட்டேன் என்றார்... இதனைத்தொடர்ந்து ரசிகர்களிடம் சேர்ந்து, படக்குழுவினர் அனைவரும் போட்டோக்களை எடுத்துக் கொண்டனர். இந்த போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications