10 ஆண்டுகளுக்கு பிறகு சபரிமலை போன மோகன்லால்.. அதென்ன உஷா பூஜை? சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு கேன்சரா
சென்னை: நடிகர் மம்மூட்டி உடல்நலம் பெறவேண்டி, நடிகர் மோகன் லால், இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலையில் உஷப்பூஜை வழிபாடு நடத்தியுள்ளார், இதில் மம்மூட்டியின் இயற்பெயரான முஹம்மது குட்டி விசாகம் என்ற பெயரில் மோகன் லால் 'உஷப்பூஜை' செய்துள்ளார். இந்த பூஜை பல்வேறு சந்தேகங்களை சோஷியல் மீடியாவில் ஏற்படுத்தி வருகிறது. அதிலும் 10 ஆண்டுகள் கழித்து மோகன்லால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டி தந்துள்ளார். அதில் இதுகுறித்து பேசியிருக்கிறார்.
மகேஷ் நாராயணன் இயக்கி வரும் "MMMN" என்ற படத்தில் மம்மூட்டி நடித்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், மம்முட்டிக்கு லேசாக உடல்நல குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால், அதற்குள் "மம்முட்டிக்கு புற்றுநோய்" என்று யாரோ வதந்தியை கிளப்பிவிடவும், இந்த தகவல், காட்டுத்தீ போல பரவி, இந்திய ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

மம்மூட்டிக்கு என்ன ஆச்சு? அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது, என்று சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கேள்விகளை எழுப்ப துவங்கிவிட்டனர்.. இதையடுத்து, பி.ஆர் டீம் விளக்கம் ஒன்றை தந்திருந்தனர்..
அதில், "மம்மூட்டிக்கு கேன்சர் இல்லை.. அவர் நலமுடன் இருக்கிறார்.. இப்போது ரம்ஜானுக்கு நோன்பு இருப்பதால் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துள்ளார்" என்று தெளிவுபடுத்தியிருந்தனர்.. இதற்கு பிறகு இந்த பரபரப்பு மெல்ல அணைந்தது. ஆனால், மோகன்லால் சபரிமலைக்கு சென்றதுமே மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுவிட்டது.
சிறப்பு பூஜை செய்த மம்மூட்டி
இந்நிலையில், Cheyaaru balu யூடியூப் சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "நேற்று முன்தினம் மோகன்லால் இருமுடி கட்டிக்கிட்டு சபரிமலை சென்றிருக்கிறார்.. யாருமே எதிர்பாராமல் அந்த விசிட் இருந்துள்ளது.. சந்நிதானத்துக்கு போனபிறகுதான், மோகன்லால் மலைக்கு வந்துள்ளது அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
மோகன்லால் அங்கு மலையேறி, உஷப்பூஜை செய்திருக்கிறார்.. உஷப்பூஜை என்பது வேண்டுதலுக்காக செய்யப்படும் விசேஷ பூஜையாகும்.. இங்கு நாம் கோயில்களில் அர்ச்சனை செய்வதற்கு தட்டில் பெயர் தருவது போல, அங்கும் உஷப்பூஜை யார் பெயரில் செய்ய வேண்டும் என்று கேட்பார்கள். அப்போது, முகம்மது குட்டி என்று பெயர் தந்துள்ளார் மோகன்லால். நெய்யபிஷேகம்' செய்துவிட்டு, மம்முட்டி உடல் நலம் பெற சிறப்பு பிரார்த்தனை செய்துவிட்டு திரும்பியிருக்கிறார்.
மோகன்லால் செய்த பூஜை
முகம்மது குட்டி என்பது மம்முட்டியின் இயற்பெயர் ஆகும்.. தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றாலும், எதற்காக மம்முட்டி பெயரில் மோகன்லால் பூஜை செய்ய வேண்டும்? அதிலும் கேன்சர் இல்லை என்று தெளிவுபடுத்தியபிறகு, எதற்காக இந்த திடீர் பூஜை என்ற சந்தேகம் எழுந்துள்ளது..
மம்முட்டியை பொறுத்தவரை இந்தியாவின் ஆகச்சிறந்த நடிகரில் ஒருவர்.. நடிகர் என்பதையும் தாண்டி மிகச்சிறந்த மனிதர்.. லெப்ட் ஹேண்டில் டீல் செய்வதுபோல, டயலாக்குகளை அசால்ட்டாக பேசிவிட்டு போவார்.. மம்மூட்டிக்கு வயசே ஆகாதா? என்று அனைவரும் ஆச்சயரிப்படும் அளவுக்கு தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்.
சமையல்காரருடன் சென்ற மம்மூட்டி
லாக்டவுன் சமயத்தில்கூட கேரளாவிலேயே காடு போன்ற தனித்து காணப்பட்ட ஒரு இடத்துக்கு, சமையல்காரர் ஒருவருடன் அங்கு சென்று தங்கியிருந்தார் மம்மூட்டி... லாக்டவுன் முடியும் வரை வெளியே வரவேயில்லையாம்.. காரணம், கோவிட்டை அவ்வளவு லேசாக நினைத்துவிடாதீர்கள், நோய்த்தீவிரம் அதிகமாக இருக்கும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதால், மம்மூட்டி அவ்வாறு சென்று தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
சூரியும், விமலும்
பல நடிகர்கள், அந்த நேரத்தில் கொரோனாவை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. வெளியில் நடமாட வேண்டாம் என்று சொல்லியும்கூட, நடிகர்கள் சூரியும், விமலும் கொடைக்கானல் ஏரியில் மீன் பிடித்திருக்கிறார்கள்.. அதற்கு அங்குள்ள போலீசார் அபராதமும் விதித்ததை நாம் கண்டோம். ஆனால் மம்மூட்டி தன்னுடைய உடலை அந்த அளவுக்கு கவனமாக பார்த்து கொள்பவர்..
அதேபோல, ஷூட்டிங்கில் எப்பேர்ப்பட்ட ஓட்டலிலிருந்து சாப்பாடு வரவழைத்து தந்தாலும் சாப்பிட மாட்டார்.. ஒரு சமையல்காரரை கையோடு அழைத்து சென்று, சமைத்துதான் சாப்பிடுவார். எனினும். மோகன் லால் ஏன், மம்மூட்டி பெயரில் அர்ச்சனை செய்தார் என்று தெரியவில்லை. எது எப்படியோ, மம்மூட்டி என்ற ஆகச்சிறந்த கலைஞன், நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதே நம்முடைய விருப்பம்" என தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications