காமெடி நடிகர் முத்துக்காளை மகன் +2 தேர்வில் பெற்ற மதிப்பு.. மகனுக்காக இப்படி ஒரு பரிசா? முன் உதாரணமான தந்தை
சென்னை: நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ரிசல்ட் வந்திருந்த நிலையில் நடிகர் முத்துக்காளையில் மகன் பன்னிரெண்டாம் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி அடைந்திருக்கிறார். தன்னுடைய மகனுக்கு பிடித்தமான பரிசை முத்துக்களை வாங்கி கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பலரும் முத்துக்காளையின் மகனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
ஒரு சிலர் பல்வேறு திறமைகளை வைத்திருப்பார்கள் ஆனால் அவர்களை பார்த்தவர்களுக்கு அவர்களின் திறமை வெளியே தெரியாது. அது போல ஒருவர் தான் முத்துக்காளை. முத்துக்காளை நடிகராக மட்டுமல்லாமல் சண்டை மாஸ்டராகவும் இருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த முத்துக்காளை காதலன் திரைப்படத்தின் மூலமாக தான் சினிமாவில்முகமாக இருந்தார்.

முத்துக்காளையின் காமெடி காட்சி
அதற்கு பிறகு பொன் மனம், என் உயிர் நீதானே, தவசி, யூத், ஆல்பம், அன்பே சிவம், மொழி, சிவாஜி, சந்திரமுகி 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் வடிவேலுவுடன் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் ஃபைட் மாஸ்டர் ஆகவும் சண்டை காட்சிகளிலும் வந்த முத்துக்காளை அதற்குப் பிறகுதான் காமெடி கேரக்டரில் நடித்து பிரபலமானார். அதிலும் இவருடைய காமெடி காட்சிகளில் ஒன்றான செத்து செத்து விளையாடுவோமா காட்சி இப்போதும் பார்ப்பவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
நடிகர் முத்துக்காளை படிப்பு
என்னதான் மன கவலையில் இருப்பவர்களும் கூட இது போன்ற காமெடிகளை பார்க்கும்போது கவலைகளை மறந்து சிரிப்பதற்கு இவர்களைப் போன்ற நடிகர்கள் கேரக்டராகவே மாறி விடுகிறார்கள். அதுபோல முத்துக்காளை கல்விக்கு வயது தடை இல்லை என்று ஒரு உதாரணமாக இருக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு வரலாறு பாடத்தில் பி ஏ டிகிரி முடித்த முத்துக்காளை தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம், தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் படித்திருக்கிறார்.
முத்துக்காளையின் மகன் மதிப்பெண்
ஆரம்பத்தில் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்த முத்துகாளை அதற்குப் பிறகு அதிலிருந்து வெளியே வந்து யாரும் மது பழக்கத்திற்கு அடிமையாகி விடக்கூடாது என்று பலருக்கு அறிவுரைகளை கூறிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கும் முத்துக்காளையின் மகன் அப்பாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அதாவது 12 ஆம் வகுப்பு தேர்வில் 438 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்று இருக்கிறார்.
தந்தைக்கு பெருமை
தன்னுடைய மகனுக்கு அவருக்கு பிடித்த பால்கோவாவை வாங்கி பரிசு கொடுத்து இருக்கிறார். இந்த மகிழ்ச்சியான விஷயத்தை முத்துக்காளை பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு ரசிகர்களும் பொதுமக்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே முத்துக்காளையின் மகன் சில வருடங்களுக்கு முன்பே தன்னுடைய தந்தையை போலவே கராத்தேயில் சிறந்து விளங்கி அதற்காக பல பரிசுகளையும் பெற்றிருந்தார். அப்போது தன்னுடைய மகன் குறித்து முத்துக்காளை பெருமையாக பகிர்ந்து இருந்தார். இப்போது படிப்பிலும் அசத்தி இருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications