43 ஆண்டுகளாக காபியே குடிக்காத நடிகர் நெப்போலியன்! பின்னணியில் உருக்கமான காரணம்
சென்னை: நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் 43 வருடங்களாக காபி குடிப்பதே இல்லையாம். இதற்கு பின்னால் ஒரு உருக்கமான கதையை அவரே சொல்லியுள்ளார்.
நடிகர் நெப்போலியன் வாட்டசாட்டமான, உயரமான, மீசையை கம்பீரமாக முறுக்கும் நடிகர். அரசியல்வாதி என்பதற்கு ஏற்றாற்போல் ஒரு தோற்றம் என்றெல்லாம் தெரியும். ஆனால் அவர் எல்லாவற்றையும் தாண்டி நல்ல மனிதராகவும் வலம் வருகிறார்.
இத்தனை ஆண்டு கால வாழ்வில் நெப்போலியன் மீது திரைத்துறையிலும் சரி அரசியலிலும் சரி இதுவரை அவர் மீது எந்த கரும்புள்ளியும் இருந்ததில்லை. குமரேசன் என்ற இயற்பெயர் கொண்ட நெப்போலியனுக்கு பாரதிராஜாதான் பெயரை மாற்றினார் என சொல்லப்படுகிறது.
நெப்போலியன் என்ற பெயர் மதுபானத்திற்கும் உண்டு என்பதால் ஆரம்பத்தில் அந்த பெயரை வைத்து எல்லாரும் தன்னை கிண்டல் செய்தார்கள் என தெரிவித்திருந்தார். தற்போது 60 வயதாகும் நெப்போலியன் அமெரிக்காவில் மனைவி ஜெயசுதா, மகன்கள் தனுஷ், குணால் ஆகியோருடன் செட்டில் ஆகியுள்ளார்.
தனுஷுக்கு தசை சிதைவு நோய் உள்ளது. இதை 4 வயதில் நெப்போலியனும் சுதாவும் கண்டுபிடித்து அவருக்கு கொடுக்காத சிகிச்சைகளே இல்லை என சொல்லும் அளவுக்கு தனது மகனை பார்த்துக் கொண்டார். மகன் சொன்ன காரணத்துக்காகவே சினிமா, அரசியலை விட்டுவிட்டு அமெரிக்கா சென்றார் நெப்போலியன்.
கடந்த 7ஆம் தேதி தனது மகன் தனுஷுக்கு நெல்லையை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளார். தனுஷை இத்தனை ஆண்டுகளாக 3 பேர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் 4ஆவதாக தங்கள் வீட்டிற்கு குலச்சாமியே வந்துவிட்டார் என பெருமையாக பேசினார்.
நெப்போலியன் மகன் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை தனியார் யூடியூப் சேனல் பெற்றது. இந்த நிலையில் நெப்போலியனை சுஹாசினி பேட்டி எடுத்தார். அந்த பேட்டியில் நெப்போலியன் மிகவும் உருக்கமான விஷயங்களை பேசியிருந்தார். அதாவது அவர் கூறுகையில், "நான் 18 வயதாக இருந்த போதே என் அம்மா கேன்சர் வந்து இறந்துவிட்டார்கள்.
என் அம்மாவுக்கு காபி என்றால் மிகவும் பிடிக்கும். அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதால் அவருக்கு பிடித்த காபியை விட்டுவிட்டேன். அன்று அம்மா இறந்த நாள் முதல் இன்று வரை சுமார் 43 ஆண்டுகளாக நான் காபி சாப்பிடுவதையே நிறுத்திவிட்டேன். எனது வளர்ச்சியை பார்க்க என் அம்மா இல்லையே என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது.

என் அப்பா நான் எம்எல்ஏ ஆனதை பார்த்தார். கல்யாணம் ஆகி, குழந்தைகள் பிறந்ததையும் பார்த்திருந்தார். 2002 ஆம் ஆண்டு அவர் இறந்துவிட்டார். எனது எல்லா வளர்ச்சிகளையும் பார்த்தார். என்னை சிறந்த தந்தை என்கிறார்கள். இந்த உலகில் எல்லா தாயும் ,தந்தையும் சிறந்தவர்கள்தான்.
எங்கள் குழந்தைக்கு முடியாமல் இருப்பதால் நாங்கள் ஸ்பெஷல் கேர் எடுத்து பார்த்துக் கொள்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம். என் பிள்ளையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதுதான், இந்த தசை சிதைவு நோய்க்கு மருந்து என்கிறார்கள். அதை இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன். என் பிள்ளைக்காக நான் எனது கடமைகளை செய்து வருகிறேன்.
எனக்கு மகள் இல்லை. ஆனால் தற்போது மருமகள் அக்ஷயாவை நாங்கள் மறு மகளாக பார்க்கிறோம். என் மகனை நல்லபடியாக பார்த்துக் கொள் என்றேன். அவரும் சரி என்றார். நான் எதிர்பார்க்காத சிறந்த தந்தை என்ற பட்டம் எனக்கு கிடைத்தது எனக்கு பெருமையாக இருக்கிறது என்றார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications