மகன், மருமகள் பற்றி நெப்போலியன் பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி.. இந்த நாள் மறக்க முடியாது என உருக்கம்!
சென்னை: நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு ஜப்பானில் வைத்து நடைபெற்றது. தன்னுடைய மகன் மற்றும் மருமகள் பற்றி நெப்போலியன் இன்று வெளியிட்ட பதிவு இணையத்தில் பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
80ஸ் காலகட்டத்தில் வில்லனாகவும் 90ஸ் காலகட்டத்தில் கதாநாயகனாகவும் நடித்து மிரட்டிய நெப்போலியன் இப்போது சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். தன்னுடைய குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆன நெப்போலியன் பற்றி சில மாதங்களாக செய்திகள் இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.

நெப்போலியன் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போது கூட அவர் பற்றி இவ்வளவு பேச்சு இருந்திருக்காது. ஆனால் இப்போது அவருடைய குடும்பத்தை பற்றியும் அவர் செய்த செயல் குறித்தும் தான் இணையத்தில் பலரும் பேசிக் கொண்டிருந்தனர். அதிலும் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய மூத்த மகன் தனுஷின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார். அப்போதுதான் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
நெப்போலியன் எங்கே போனார் என்ற தேடிக் கொண்டிருந்த ரசிகர்கள் கூட அவர் பற்றி பேச தொடங்கி விட்டார்கள். நெப்போலியன் 24 வயதிலேயே சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் அந்த காலகட்டத்தில் 50, 60 வயது மதிக்கத்தக்க வில்லனாகத்தான் நடித்து வந்தார். அதற்கு பிறகு தான் சில வருடங்கள் கழித்து அவர் கதாநாயகனாக நடிக்க தொடங்கி இருந்தார்.

அதே நேரத்தில் அரசியலிலும் என்ட்ரி கொடுத்து எம்எல்ஏவாகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் இப்போது அரசியல், சினிமா எல்லாவற்றையும் விட்டு விலகி குடும்பத்தோடு அமெரிக்காவில் ஐடி பிசினஸ் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய மூத்த மகன் தனுஷ்க்கு 4 வயதிலேயே தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டு இருந்தது.
அதற்கு பிறகு பல்வேறு சிகிச்சை எடுத்திருந்தாலும் பெரிய அளவில் பலன் கிடைக்காததால் அவருடைய மகன் எழுந்து நடக்க முடியாத வகையில் வீல்சேரில் தான் வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு வாழ்க்கை துணை வேண்டும் என்று நினைத்த நெப்போலியன் கடந்த நவம்பர் மாதத்தில் தன்னுடைய மகனின் திருமணத்தை ஜப்பானில் நடத்தி முடித்து இருந்தார்.
இதில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பேசிய பேட்டி கூட இணையத்தில் ட்ரெண்டானது. நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு வாழ்க்கைத் துணை ஏற்படுத்திக் கொடுத்தது குறித்து பலர் பாராட்டு இருந்தாலும் சிலர் நெகட்டிவ் ஆகவும் பேசி இருந்தார். எழுந்து நடக்க முடியாத மகனுக்கு நெப்போலியன் திருமணம் செய்து வைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்துவிட்டார் என்றெல்லாம் கூட வசபாடினார்கள்.
ஆனால் அதைப் பற்றி நெப்போலியனும் அவருடைய குடும்பத்தினரும் கண்டுகொள்ளவில்லை. நெப்போலியனின் மருமகள் அக்ஷயா, தான் தன்னுடைய கணவர் தனுஷை விரும்பி தான் திருமணம் செய்து கொண்டேன் என்று தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் மூன்று மாதங்களாக ஜப்பானில் குடும்பத்தோடு இருந்த நெப்போலியன் இப்போது சிங்கப்பூருக்கு வந்திருக்கிறார்கள். கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தை உலகெங்கும் உள்ள காதலர்கள் கொண்டாடி இருந்தனர். அப்போது நெப்போலியன் குடும்பத்தினரும் கொண்டாடி இருந்தனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் instagram பக்கங்களில் பகிர்ந்தனர். அது வைரலாகி வந்தது.
இந்த நிலையில் தற்போது நெப்போலியன் தன்னுடைய மகன் மற்றும் மருமகள் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதற்கு, "அன்பு நண்பர்களே காதலர்தின வாழ்த்துக்கள். தனுஷ் மற்றும் அக்ஷயா நூறாவது திருமண நாள் கொண்டாட்டம் சிங்கப்பூரில் பிப்ரவரி 14, 2025 அன்று நடந்தது. உண்மையில் நாங்கள் இதை கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஆச்சரியப்படும் விதமாக நூறாவது திருமண நாள். பிப்ரவரி 14 அன்று வந்தது. நவம்பர் 7, 2024 முதல் பிப்ரவரி 14, 2025 வரை" என்று தன்னுடைய மகனின் திருமணம் முடிந்த நூறாவது நாளை குடும்பத்தோடு கொண்டாடி இருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications