நான் செத்தா கூட “அந்த” பேரோடு போகணும்னு ஆசைப்படுறேன்.. என் கனவு இதுதான்! நடிகர் நெப்போலியன் உருக்கம்
சென்னை: நடிகர் நெப்போலியன் பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆசை குறித்து பேசி இருந்தது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் நான் செத்தால் கூட இப்படி ஒரு மனுஷன் இருந்தாரு.. என்று பலர் சொல்லும்படி வாழ்ந்து விட்டு போகணும்னு தான் ஆசைப்படுறேன். என்னுடைய உறவுகளையும், கூட இருப்பவர்களையும், என்னை நம்பியவர்களையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
நடிகர் நெப்போலியன் சினிமா மற்றும் அரசியலை விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகி இருந்தாலும் அமெரிக்காவில் தமிழர்களோடு சமீபத்தில் அவர் கொண்டாடிய பங்க்ஷன் பெரிய அளவில் பேசப்பட்டது. அதுபோல நெப்போலியனின் மகன் எங்கேஜ்மென்ட் கடந்த மாதத்தில் நடைபெற்று வந்த நிலையில் அதுவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெப்போலியன் அமெரிக்காவில் இப்போது வாழ்ந்து வந்தாலும் அவருடைய மூத்த மகன் தனுஷ்க்கு திருநெல்வேலியை சார்ந்த அக்ஷயா என்ற பெண்ணை வீடியோ கால் மூலமாக நெப்போலியன் என்கேஜ்மென்ட் செய்திருந்தார். இது பலரையும் வியக்க வைத்திருந்தது. நடிகர் நெப்போலியன் ஜேயசுதா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
அதில் தனுஷ்க்கு தசை சிதைவு நோய் இருக்கும் நிலையில் அதற்கு பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் அது முழுமையாக குணமாகாத நிலையில் அமெரிக்காவில் வாழ வேண்டும் என்று தன்னுடைய மகன் ஆசைப்பட்டதால் தன்னுடைய மகன் மற்றும் குடும்பத்தோடு அமெரிக்காவில் நெப்போலியன் செட்டில் ஆகி இருக்கிறார். அங்கு ஐடி நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.
அதோடு 300 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தன்னுடைய நிறுவனத்தில் அதிகமான தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைகள் கொடுத்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. அதுபோல நெப்போலியனின் மகன் திருமணம் அடுத்த மாதத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் நெப்போலியன் ஏற்கனவே பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நெப்போலியன் பேசுகையில், நான் 16 வயதிலிருந்து அரசியலில் நுழைந்துவிட்டேன். என்னுடைய மாமா கே என் நேரு அமைச்சராக இருந்தபோது அவருக்கு பிஏவாக நான் இருந்தேன். பிறகு நடிக்க வேண்டும் என்று ஆசை வந்ததால் நான் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் அரசியலை விட்டு விலகவில்லை. அதற்குப் பிறகு எம்.எல்.ஏ வாகி மினிஸ்டர் ஆகவும் இருந்திருக்கிறேன். ஆனாலும் என்னுடைய குடும்பத்திற்காக நான் அரசியல் மற்றும் சினிமாவை விட்டுவிட்டு இப்போது அமெரிக்காவில் குடியேறி இருக்கிறேன்.
அதுபோல என்னுடைய அம்மா அப்பாவிற்காக மணிமண்டபத்தையும் கட்டி இருக்கிறேன். என்னோட கூட பிறந்தவர்களையும் நான் நன்றாக பார்த்துக் கொள்கிறேன். என்னோடு இருப்பவர்களை நன்றாக பார்த்துக் கொண்டு... "நான் செத்தால் கூட இப்படி ஒரு மனுஷன் நம்மோடு வாழ்ந்துட்டு போயிருக்காரு என்று நம்மோடு இருப்பவர்கள் நம்மை பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை" என்று அந்த பேட்டியில் நெப்போலியன் பேசியிருக்கிறார்.

அதோடு அமெரிக்காவில் தன்னுடைய நிலத்தில் விளையும் இயற்கை காய்கறிகளை தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் எல்லோருக்குமே தான் கொடுத்து விடுவதாகவும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதால்தான் என்னால் அமெரிக்காவில் வெற்றி பெற்ற ஒரு பிசினஸ்மேனாக வாழ முடிகிறது,
நான் மட்டுமல்ல எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் நம்முடைய மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் நம்மோடு இருக்கும் நண்பர்கள் உறவினர்களை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் தனக்குள்ள கேரக்டர்களில் சரியாக இருந்தால் தான் அவன் மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று அர்த்தம் என்று அந்த பேட்டியில் நெப்போலியன் பேசியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications