பாண்டியனின் மகனா இது? மண்வாசனை பாண்டியன் கிட்ட ஒரேயொரு கெட்ட பழக்கம்.. அதுவும் அந்த கடைசி நேரத்தில்?
சென்னை: பணத்தோட அருமை என் அப்பாவுக்கு தெரியல.. யார் யாரை எந்தெந்த இடத்துல வைக்கணும்னு தெரியல. என் அப்பாவுக்கு இருந்த ஒரே கெட்ட பழக்கம் இதுதான்.. அதுமட்டும் இல்லேன்னா அவரை பிடிக்கவே முடியாது" என்று மறைந்த நடிகர் பாண்டியனின் மகன் தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படத்தில் அறிமுகமாகி, இந்த முதல் படத்திலேயே தமிழக மக்களின் ஆதரவை பெற்றவர் பாண்டியன்.. ஒரு கட்டத்தில் ஹீரோவாக மார்க்கெட்டை இழந்த பிறகு, கேரக்டர் நடிகராகவும் வலம் வந்தார்..

பின்னர், அரசியலில் ஈடுபட்டு பிரபல கட்சி ஒன்றுக்கு பிரச்சாரம் செய்து வந்தார். அரசியல் வட்டாரங்களில் சில நண்பர் பழக்கங்கள் ஏற்பட்டதையடுத்து, குடிப்பழக்கம் அதிகமாகிவிட்டதாம்..
துரோகிகளான நண்பர்கள்
ஒருகட்டத்தில், தன்னுடைய நண்பர்களுக்கு தன்னுடைய மொத்த சொத்தையும் விற்று உதவி செய்ததாகவும், ஆனால், பாண்டியனுக்கு அந்த நடிகர்கள் கடைசி காலத்தில் கை செலவுக்கு கூட காசு இல்லாமல் உதவாமல் விட்டுவிட்டதாகவும் தகவல்கள் உண்டு.
அதிகமாக குடித்து குடித்து, பாண்டியனின் கல்லீரலும் பாதிக்கப்பட்டு, கடந்த 2008ல் உயிரிழந்தார். மிக திறமையான நடிகரான பாண்டியன், நண்பர்களால் ஏமாந்து குடித்தே உயிரிழந்தவர் என்று சினிமா வட்டாரத்தில் சொல்வதுண்டு.
இந்நிலையில், Behindwoods TV யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் பாண்டியனின் மகன் ரகு... அந்த பேட்டியில், "தேனியில் ஒரு கூட்டத்தில் நின்று கொண்டிருந்த என் அப்பாவை பார்த்த பாரதிராஜா சார், தரையிலுள்ள மண்ணை எடுத்து, இதில் எத்தனை மண் இருக்கு" என்று கேட்டுள்ளார்.. உடனே என் அப்பா, "3500 இருக்கும்" என்றார். இதைக்கேட்ட பாரதிராஜா, "நீதான் என் படத்தின் ஹீரோ" என்று சொன்னதுமே ஆடிப்போயிட்டாராம்.
இது ஒன்னுதான் கெட்ட பழக்கம்
என் அப்பா நிறைய குடிப்பாரு.. குடிக்கு அடிமையாகிவிட்டாரு.. குடிப்பழக்கம் மட்டும் இல்லன்னா அவரை பிடிக்க முடியாது. அவர் ஒரு ரியல் ஹீரோ. வெகுளித்தனமானவர்.. அவரை வச்சி நிறைய பேரு பெரிய ஆளா வந்தாங்க. ஆனா கடைசி நேரத்துல கைகொடுக்காம போயிட்டாங்க. நல்ல பழகுற மாதிரி பழகி, அவரை டவுன் ஆக்கிட்டு பெரிய ஆளா வந்துருக்காங்க. அது நிறைய பேர் இருக்காங்க. இதுல என் அப்பா மட்டும் இல்ல. ஏகப்பட்ட பேர் இருக்காங்க.
பணத்தின் அருமை தெரியல
பணத்தோட அருமை என் அப்பாவுக்கு தெரியல.. யார் யாரை எந்தெந்த இடத்துல வைக்கணும்னு தெரியல. பாரதிராஜா சார், டி.ராஜேந்தர் சார், பிரபு பெரியப்பா, கார்த்திக் சார் இவங்க எல்லாம் உள்ளே வந்தாங்க. அவங்களுக்கு எல்லாம் இதான் ஃபீல்டு. பணம் இருந்தா தான் வருவாங்க.
யாருக்கும் கொடுத்து உதவாமலும் இருக்க முடியாது.. கஞ்சமாகவும் இருக்க முடியாது. அந்த நேரத்துல என்ன தோணுதோ, அதை செஞ்சிட்டு போயிடலாம்னு நினைச்சாரு. ஆனா எங்க அப்பாவுக்கு எடுத்துச் சொல்ல யாரும் இல்லை. பக்கபலமா அப்படி ஆளுங்களும் இல்லை. அப்பாவுக்குப் பிறகு பெரியப்பா, பாட்டியும் பக்கபலமாகவும் இருந்தாங்க.. அவங்களும் இறந்துட்டாங்க.
கடவுள் எனக்கு தந்த வரம்
அம்மாதான் வளர்த்து என்னை படிக்க வச்சாங்க... அப்பா இறக்கும்போது, நான் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்தேன்.. பட வாய்ப்புக்காக 25 கம்பெனிகள் நான் ஏறி இறங்கி இருக்கேன்.. எனக்கு 2 படம் வாய்ப்பும் வந்தது. ஆனால், அதை சரியாக கையாள தெரியல..
அப்பா நடிச்சதிலேயே எனக்கு ரொம்ப பிடிச்ச படம் மண்வாசனை. முதல் வசந்தம், ஆண்களை நம்பாதே, படங்கள் ரொம்ப பிடிக்கும். அப்பாவும் நானும் சூர்ய வம்சம், வாரணம் ஆயிரம் படங்கள் சேர்ந்து பார்த்துருக்கோம்.. அப்பாவைப் பார்த்ததும் உலகத்தையே மறந்துடுவேன், நானும் என் அப்பாவும் ஒரே மாதிரி இருப்போம். இதுதான் கடவுள் எனக்கு தந்த வரம்" என்று கூறியிருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications