பிரபு வீட்டில் நடிகையால் புயல்? அசராத சிவாஜி.. தன் குடும்பமே உயிர்: நடிகர் திலகத்தை புகழ்ந்த பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவாஜி கணேசன் - பத்மினி பிரமாதமான ஜோடி.. அன்பு, புதையல் போன்ற படங்களிலிருந்தே ரசிகர்களிடம் எடுபட்ட ஜோடி.. ஜெமினி - சாவித்ரியை கணவன் மனைவியாக நாங்கள் எல்லாம் பார்த்த அளவுக்கு சிவாஜி - பத்மினியை பார்க்கவில்லை என்று டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு, மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி பல்வேறு விஷயங்களை புகழ்ந்தும், பெருமைபடவும் கூறியிருக்கிறார்.

television prabhu sivaji ganesan

அதில், "சாவித்திரியுடன் சிவாஜியை சேர்த்து யாருமே பேசவேயில்லை.. பத்மினியுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டது. சிவாஜியும், நீங்களும் கல்யாணம் செய்து கொள்ளும் அளவுக்கு சென்றீர்களாமே? என்று ஒருமுறை பத்திரிகையாளர்களும் கேட்டார்கள்.

பத்மினி பதில்: ஆனால் அதற்கு பத்மினி பதில் சொல்லவில்லை. ஆனால், சிறிது நேரம்கழித்து, "அவர் தேவர், நாங்கள் நாயர்" என்று சொன்னார். அதாவது சாதி அடிப்படையில்தான் தங்கள் திருமணம் நின்றுவிட்டதாக அவருடைய பதில் இருந்தது.

ஆனால், அந்த ஜோடி பிரமாதமான ஜோடி.. அன்பு, புதையல் போன்ற படங்களிலிருந்தே ரசிகர்களிடம் எடுபட்ட ஜோடி.. ஜெமினி - சாவித்ரியை கணவன் மனைவியாக நாங்கள் எல்லாம் பார்த்த அளவுக்கு சிவாஜி - பத்மினியை பார்க்கவில்லை. ஆனால், அற்பதமான ஜோடி. பிற்காலத்தில் ஜெய்சங்கர் - எல்.விஜயலட்சுமி ஜோடியும் நல்லா இருந்தது. இவர்கள் திருமணம் செய்து கொண்டால் நல்லா இருக்கும் என்று ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள்.

சரோஜாதேவி: எம்ஜிஆர் - சரோஜாதேவி நிறைய படங்களில் நடித்தும், யாருக்கும் எந்த தவறான எண்ணமும் தோன்றவில்லை. ஆனால், ஜெயலலிதாவுடன் நடிக்கும்போது மட்டும், நடிப்புக்கு அப்பாற்பட்டு இருவரும் இணைந்திருக்கிறார்களோ என்ற எண்ணம் மக்களுக்கு வந்தது. எனினும் இந்த ஜோடி நாளடைவில் சலிக்க ஆரம்பித்துவிட்டது. காதல் வாகனம், தாய்க்கு தலைமகன்,ராமன் தேசிய சீதை போன்ற படங்கள் தோல்வியை தர ஆரம்பித்துவிட்டன.

தனக்கு மார்க்கெட் சரிகிறது, வசூலும் அடிபடுகிறது என்பதை புரிந்துகொண்ட எம்ஜிஆர், உடனடியாக ஜோடியை மாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சந்திரகலா, மஞ்சுளா, லதா என்று 3 ஹீரோயின்களை வைத்து எடுத்தார்.. படமும் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்துக்கு ஜெயலலிதாவை கூப்பிடவேயில்லை.

பொதுவாழ்க்கை: ஆனால், தன்னுடைய இமேஜ் சரியக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார் சிவாஜி. எம்ஜிஆருடன் அரசியல் உட்பட பொதுவாழ்க்கையில் போட்டியிட முடியாததற்கு காரணமே சிவாஜிக்கு பெரிய குடும்பம் இருந்தது. எம்ஜிஆருக்கு குடும்ப இல்லை.

மனைவி என்று ஜானகி இருந்தாரே தவிர, எம்ஜிஆரும், அவரும் என்ன வாழ்ந்தார்கள் என்று தெரியவில்லை.. காரணம், தன்னுடைய மகன் சுரேந்திரனுக்காகத்தான் ஜானகி வாழ்ந்தாங்க. சுரேந்திரன், கணபதி பட்- ஜானகிக்கு பிறந்தவர். குடும்பம் இல்லாத காரணத்தினால், எம்ஜிஆரால் பொதுவாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட முடிந்தது.. சிவாஜிக்கோ கிட்டத்தட்டட 40 குடும்பங்கள் அவரை நம்பி இருந்தன.. இவருடைய ஒரு சம்பளத்தை நம்பி அத்தனை பேரும் இருந்தனர்.

குடும்ப வாழ்க்கை: சிவாஜி தன்னுடைய குடும்ப வாழ்க்கையை நன்றாக கவனித்து கொண்டார். பிள்ளைகளை எல்லாம் அவர்தான் தூக்கிவிட்டார். சிவாஜிக்கு பிறகு ராம்குமார் சினிமாவுக்கு வருவார் என்று நினைத்தோம். ஆனால், அவருக்கு அந்த எண்ணமே இல்லை. பிரபுதான் சரியாக இருப்பார் என்று நினைத்து அவரை கொண்டுவந்தார்கள். அதற்கேற்றவாறு அபார வளர்ச்சி பெற்றார்.. ஆனால் பிரபு அளவுக்கு விக்ரம் பிரபு நிற்கவில்லை..

வீடுதான் சிவாஜிக்கு உலகம்.. சொந்தங்களை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.. அதனால்தான் பிரபுவுக்கும் ஒரு நடிகைக்கும் திருமணம் என்று செய்தி வந்தபோது, அதை சிவாஜி ஏற்றுக் கொள்ளவில்லை.. அதனால்தான் அந்த ஜோடியும் பிரிந்தது. மகனின் இமேஜ் மாறிவிடும் என்பதுடன், தன் குடும்பத்துக்கும் இழுக்கு வந்துவிடும் என்று நினைத்தார்.

தன்னிலை விளக்கம்: பிரபுவுக்கும், அந்த நடிகைக்கும் திருமணம் என்று ஒரு பிரபல பத்திரிகையில் தலைப்பு செய்தியாகவே அப்போது வெளிவந்திருந்தது. ஆனால், ஒருவாரம் கழித்து அது இல்லையென்றாகிவிட்டது. இப்படியொரு செய்தியை தந்ததால்தான் நாங்கள் வெளியிட்டோம் என்று அந்த பத்திரிகை, தன்னிலை விளக்க கொடுக்கும் அளவுக்கு விவகாரம் அப்போது சென்றது.. எனினும், இதுபோன்ற சர்ச்சைகளால் பிரபுவுக்கு மார்க்கெட் சரியவேயில்லை. இன்றும் நிறைய படங்களில் நடித்து வருகிறார்..

சிவாஜிக்கு தன்னுடைய குடும்பத்தின் மீது எப்போதுமே அளவுக்கு அதிகமான பாசம்.. அனைவரையும் ஒன்றாக பாவித்தார்.. கூட்டுக்குடும்பமாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர்.. அவர் விரும்பியது போலவே இப்போதுவரை தொடர்கிறது..

கூட்டுக்குடும்பம்: சிவாஜிக்கு நடிக்க தெரியுமே தவிர, அதை காசாக்க தெரியாது. அதை காசாக்கியது அவரது தம்பி சண்முகம். நிறைய சொத்துக்களை நிர்வகித்து, குடும்பத்தையும் நிர்வகித்தவர் அண்ணன் தங்கவேலு.

தம்பி சண்முகத்தை மூத்த புதல்வனாக நினைத்து லண்டனில் படிக்க வைத்தார். தன்னுடைய மனைவியின் தங்கையையே அவருக்கு திருமணமும் செய்து வைத்தார்.. தன்னுடைய மகளுக்கு, சகோதரியின் மகனையே திருமணம் செய்து வைத்தார். இப்படி தன்னுடைய குடும்பம் பிரிந்துவிடக்கூடாது என்பதிலும், அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார் சிவாஜி" என்றெல்லாம் புகழ்ந்து பேசியிருக்கிறார் டாக்டர் காந்தராஜ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+