சூப்பர் அப்பாக்கள்.. பிரேம்ஜிக்கு காதல்.. நடிகர் பப்லு இதேதான்.. தெய்வீக காதலென்றாலும்?: பிரபலம் நச்
சென்னை: யாருக்கும், எந்த வயதிலும் காதல் வரலாம்.. ஆனால், குறைந்தபட்சம் வயதாவது இருக்கணும்.. ஓரளவுக்காவது இருவருக்கும் வயது மேட்ச் ஆகணும்.. வயது மூப்பான நபரை தேர்வு செய்யும்போது, பெண்ணின் பெற்றோர் நிச்சயம் கவலைப்படவே செய்வார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரேம்ஜி, தன்னுடைய 45 வயதில், காதல் திருமணம் செய்து கொண்டார். தன்னைவிட 20 வயது குறைந்த இந்து என்ற பெண்ணை, பிரேம்ஜி திருமணம் செய்திருந்தது, மிகப்பெரிய அளவில் இணையத்தில் பேசப்பட்டது.

இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடக்காமல், எளிமையான முறையிலேயே கோவிலில் வைத்து நடைபெற்றது. இந்த திருமணத்தில், இந்துவின் தம்பி கலந்து கொள்ளவில்லையாம்.
இந்து மற்றும் பிரேம்ஜியின் திருமணம் காதல் திருமணம் என்பதால் பெண் வீட்டில் விருப்பமில்லாமல் தான் திருமணம் நடைபெற்றது என்று கூறப்படுகிறது. அதுவும், இந்துவின் தம்பி பிரேம்ஜியிடம் பேசக்கூட விரும்பவில்லையாம்... பிரேம்ஜி சிலமுறை பேச முயற்சி செய்தும் தோல்வியுற்றதால் அவராக புரிந்து கொண்டு வரட்டும் என்று விலகி இருக்கிறாராம்.
இந்து கவலை: பிரேம்ஜியை திருமணம் செய்ததால், இப்போது வரை என் தம்பிக்கு அவரை பிடிக்காது, எங்க கல்யாணத்துக்கு கூட வரவில்லை என்று பிரேம்ஜியின் மனைவி இந்து ஓபனாகவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதுகுறித்து, மூத்த பத்திரிகையாளர் சேகுவேராவிடம் Kingwoods TV யூடியூப் சேனலில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சேகுவேரா, "மகளை பெற்ற தாய்க்கும், தந்தைக்கும், உடன்பிறந்த சகோதரிக்கும், ஓரளவுக்காவது மணமகனை பிடிச்சிருக்கணும். யாரையும் "பாடிஷேமிங்" செய்ய வேண்டும் என்பது நம்முடைய நோக்கமில்லை.. அழகு என்பதும் ஒரு பிரச்சனையே இல்லை.. அழகு என்பது, ஒரு பெண்ணின் மனதை பொறுத்தது. ஆனால், மகளின் எதிர்காலம் குறித்து, பெற்றோர்கள் நினைக்கும்போது, குறைந்தபட்சம் வயது வித்தியாசத்தை கவனிக்க வேண்டியிருக்கிறது.
கவலைகள்: எப்போதுமே ஒரு பெண் தன்னுடைய காதலனை வீட்டில் அறிமுகப்படுத்தும்போது, அழகு பற்றின விஷயம் எப்போதுமே சர்ச்சையாகாது. ஆனால், வயது அதிகமாக இருக்கும்போது, நிச்சயம் கவலைகள் எழும். சாதி பிரச்சனை, பொருளாதார பிரச்சனைகளுடன், வயது வித்தியாசமும் சேரும்போது, அது கவலைக்குரியதாக மாறக்கூடும். ஒரு கட்டத்தில் இது எங்கே போய் நிற்கும்? என்பதையும் யோசிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு பெண்ணுக்கு 40 வயது என்றால், மணமகனுக்கு அப்போது 60 வயதாகியிருக்கும். வாழ்க்கை துணை என்பது என்ன? கடைசிவரை கூடவே இருக்க வேண்டும் என்பதுதானே? பொதுவாக 2 அல்லது 5 வயதுவரை வித்தியாசம் இருக்கலாம். பிரேம்ஜியை, பெண்ணின் குடும்பத்திலுள்ள அனைவருமே ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. 50 வயதில் கங்கை அமரன் திடகாத்திரமாக இருந்தார். ஆனால், 45 வயதுள்ள நபர் போல பிரேம்ஜி இப்போது காணப்படவில்லையே..
சூப்பர் அப்பாக்கள்: பிரேம்ஜி, வெங்கட்பிரபு, யுவன் சங்கர் ராஜா, எஸ்பிபி சரண் இவர்கள் எல்லாம் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள்.. இவர்களது அப்பாக்கள் எல்லாம் சூப்பரான அப்பாக்கள்,. சொத்து, புகழ், என அனைத்தையும் தங்கள் பிள்ளைகளுக்கு சேர்த்து வைத்தவர்கள். அதனால், இவர்களும் அப்பாக்களின் சொத்தில் ஜாலியாக வாழ்ந்தவர்கள்..
3 கல்யாணம் வரை செய்துள்ளார் யுவன்.. எஸ்பிபி மகனை பற்றி சொல்லவே வேணாம்.. எஸ்பிபி சரண், வெங்கட்பிரபு இவர்கள் எல்லாம் தங்கள் திறமையால் இன்று மேலே வந்துவிட்டார்கள் என்றாலும், வாழ வேண்டிய வயதில் வாழாமல், வாழ்க்கையை தொலைத்துவிட்டார்கள்.
நடிகர் பப்லு: பப்லு என்ற நடிகர், மிகச்சிறந்த தகப்பன்.. மனவளர்ச்சி குன்றிய மகனை பராமரித்து வருகிறார்.. ஒருமுறை தன் மகனை ஏர்போர்ட்டில் அனுமதிக்கவில்லை என்றதுமே, ஒட்டுமொத்த ஏர்போர்ட்டையும் அலறவைத்தார்..
ஆனால், முதல்மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டு, மகள் வயதில் உள்ள பெண்ணை 2வதாக திருமணம் செய்ய முயற்சித்து, கடைசியில் இவரை விட்டுவிட்டு அந்தப் பெண் பிரிந்து போய்விட்டார். நல்ல தகப்பன் என்ற பெயர் எடுத்தவர், மகள் வயது பெண்ணை திருமணம் செய்ய முயன்று, பெயரை கெடுத்து கொண்டார்.
எந்த வயதிலும் யாருக்கும் காதல் வரலாம்.. ஆனால், குறைந்தபட்சம் வயதாவது இருக்கணும்.. ஓரளவுக்காவது இருவருக்கும் வயது மேட்ச் ஆகணும்.. தெய்வீக காதலாகவே இருந்தாலும்கூட, வயது மூப்பான நபரை தேர்வு செய்யும்போது, பெண்ணின் பெற்றோர் நிச்சயம் கவலைப்படவே செய்வார்கள்.
நல்ல தம்பி : உண்மையிலேயே, பிரேம்ஜியின் மனைவி, நல்ல குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கிறார்.. தன்னுடைய அக்காவின் வாழ்க்கை பாழாகிவிட்டது என்று அந்த பெண்ணின் தம்பி கவலைப்படலாம். அந்த பையன் ரொம்ப நல்ல பையன்.. இப்படியொரு தம்பி கிடைக்க, அந்த பெண் நிஜமாகவே கொடுத்து வைத்திருக்கணும்" என்றெல்லாம் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications