திருமணமான 10 மாதத்தில் குக் வித் கோமாளி புகழுக்கு "புரமோஷனா?" இனி புது அவதாரம்! குவியும் வாழ்த்துகள்
சென்னை: திருமணமான 10 மாதத்தில் குக் வித் கோமாளியில் கோமாளியாக வரும் புகழுக்கு புரமோஷன் கிடைத்துள்ளது. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.
மனக்கவலை, உடல் களைப்பு, நோய் உள்ளிட்டவைகளை போக்கும் அருமருந்து காமெடிதான். அதற்கு வயிறு குலுங்க சிரித்தால் போதும். ஆனால் ஒருவரை சிரிக்க வைப்பது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல.

அந்த வேலையைதான் காமெடியன்கள் செய்கிறார்கள். 80, 90 களில் காமெடியை பார்ப்பதற்காகவே மக்கள் தியேட்டர்களில் குவிந்தனர். அது போல் படம் ஓடாவிட்டாலும் 5 அல்லது 6 காமெடிகள் இருந்து விட்டால் போதும் அதை பார்த்து ரசிக்கவே மக்கள் கூட்டம் கூடும்.
கவர்ச்சி, பாடல்கள் இவற்றை தாண்டி ரசிகர்களை சுண்டி இழுக்கும் தந்திரமாகவே இயக்குநர்கள் இதை வைத்திருந்தனர். அந்த வகையில் தற்போது டிவி முன்பு உட்கார்ந்தால் போதும் காமெடி நிகழ்ச்சிகள் ஏராளம். அசத்த போவது யாரு, அது இது எது, கலக்க போவது யாரு, குக் வித் கோமாளி என ஏராளமான நிகழ்ச்சிகள் உள்ளன.
அப்படி ஒரு சிரிக்க வைக்கும் நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு சிரித்து சிரித்து உடல் ஆரோக்கியமாக இருந்ததால் நீண்ட காலமாக குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை உண்டானதாகவும், ஐசியூவில் இருந்த ஒருவரின் தாய் உடல் நலம் தேறி பொது வார்டுக்கு வந்துவிட்டதாகவும் அதற்கு நன்றி என்றும் தெரிவித்தார். இவற்றை செஃப் வெங்கடேஷ் பட் , புகழ், சிவாங்கி ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் புகழ், பாலா, மணிமேகலை, குரேஷி உள்ளிட்டோரின் காமெடி அனைவரையும் மகிழ்விக்கும். இந்த நிகழ்ச்சியில் பிரபலமான புகழ் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் காதலித்த பென்ஸியை மணந்தார்.
இவரது திருமணத்திற்கு சிவாங்கி, பாலா, மணிமேகலை உள்ளிட்டோர் நேரில் போய் வாழ்த்தினர். இந்த நிலையில் தற்போது புகழுக்கு புரமோஷன் கிடைத்துள்ளது. இது தற்காலிகம்தான் என்றாலும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். விஜய் டிவியில் அண்மையில் தொடங்கப்பட்ட Ready Steady Po எனும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக புகழ் வருகிறார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications