"ஏழைகள் வாழ நீ செய்த யாகம்… என்னென்னவென்று எங்கே சொல்வேன்…"! விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் புகழ்
சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவருடைய நினைவிடத்தில் நடிகரும் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காமெடியில் கலக்கிய புகழ், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஏழைகள் வாழ நீ செய்த யாகம்...
என்னென்னவென்று எங்கே சொல்வேன்...
அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ...
நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்...
இன்றைக்கும் என்றைக்கும்...
நீ எங்கள் நெஞ்சத்தில்...
அன்புக்கும் பண்புக்கும்...
நீ அந்த சொர்க்கத்தில் மன்னவன் காவிய நாயகனே...
என்னுயிர் தேசத்து காவலனே...
வாடிய பூமியில் கார்முகிலாய் மழை...
தூவிடும் உன் புகழ் வாழியவே என குறிப்பிட்டு கேப்டன் கோயிலில் எடுத்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்த் என்றாலே அவர் அலுவலகத்திலும் வீட்டிலும் வயிறார அளிக்கும் உணவுதான் நினைவுக்கு வரும். தன் வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களை சாப்பிட வைக்காமல் அனுப்பவே மாட்டார் என நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட நற்பெயரை பெற்ற விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நல குறைவால் காலமானார். அவரது உடல் அவர் பெரிதும் விரும்பிய கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டு, அது தற்போது கோயிலாக மாற்றப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலும் தினந்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் விஜயகாந்த் இறந்ததும் அவருக்கு அஞ்சலி செலுத்த பல நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் சென்றனர்.
அந்த வகையில் கலக்க போவது யாரு புகழும் சென்றிருந்தார். அப்போது அவர், விஜயகாந்தை போல் என்னால் முடிந்த வரை மக்களுக்கு உணவு அளிப்பேன் என தெரிவித்திருந்தார். அதன்படி கலைஞர் நகரில் உள்ள புகழின் அலுவலகத்தில் "வள்ளல் விஜயகாந்த் நினைவு அன்னதான அறக்கட்டளை" என்ற பெயரில் தினமும் உணவு அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த மே 18 ஆம் தேதி அன்னதானம் தொடங்கி 500-ஆவது நாளாக இருந்தது.
அப்போது அவர் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று ஆசி பெற்று வந்தார். "தான் ஓரிரு நாட்களில் அன்னதானத்தை நிறுத்துவிடுவேன் என என்னை நிறைய பேர் கிண்டல் செய்தார்கள். ஆனால் இன்று கடவுளின் புண்ணியத்தால் கேப்டனின் ஆசியால் 500 ஆவது நாளை கடந்துள்ளது. இந்த பணி எனக்கு பிறகு என் குழந்தைகளும் தொடர்வார்கள் என புகழ் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி புகழ் மாலை வாங்கிக் கொண்டு கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்திற்கு வந்தார். அங்கு கேப்டனுக்கு மாலை அணிவித்து கற்பூர ஆரத்தி காட்டினார். பிறகு அவரது நினைவிடத்தை சுற்றி வந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications