ஜப்பானுக்கு மனைவி, குழந்தையுடன் டிரிப் சென்ற புகழ்! என்ன உரிமை இருக்கு என விமர்சிக்கும் நெட்டிசன்கள்
சென்னை: ஜப்பான் நாட்டுக்கு மனைவி, மகளுடன் விஜய் டிவி பிரபலம் புகழ் சென்றுள்ள நிலையில் அவரை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் காமெடியனாக தனது பணியை தொடங்கியவர். அதில் பெண் வேடம் போட்டு மக்களை சிரிக்க வைத்தார். இவரது பெண் வேட காஸ்ட்யூமுக்காகவே ரசிகர்கள் இருந்தனர்.

பின்னர் சிறு சிறு வேடங்களில் நடித்து தனது காமெடியையும் நடிப்புத் திறனையும் வெளிப்படுத்திய புகழ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த நிகழ்ச்சி மூலம்தான் புகழுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.
வலிமை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர் மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த 3 ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த நிலையில் இவருக்கும் பென்ஸி என்பவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்தன. கடந்த ஆண்டு புகழின் மனைவி பென்ஸி கர்ப்பம் அடைந்தார். அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி புகழுக்கு பெண் குழந்தை பிறந்தது. புகழ் தன்னுடைய மகளுக்கு ரித்தன்யா என பெயர் சூட்டினார்.
இதுகுறித்த இன்ஸ்டா போஸ்டில் அவர் கூறியிருந்ததாவது: "என் வாழ்வை புன்னகையால் இன்புறச் செய்ய தவமாய் கிடைத்த அழகியடி நீ.. கம்பன் இன்றிருந்தால் உனக்கென தனிக்கவிதையே வடித்திருப்பானடி... ஊரே கண் வைக்கும் அளவிற்கு, பிரம்மன் வடித்த காவியம் நீயடி என் செல்ல மகளே... கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை.
இருந்தாலும், எங்கள் வாழ்வை வசந்தமாக்கிய எங்கள் தேவதை தனித்து தெரியவே, இன்று முதல் நீ, பு.ரித்தன்யா என்று அழைக்கப்பட இருக்கிறாய் அன்பு மகளே.. எங்களின் மகாராணிக்கு பு.ரித்தன்யா என்ற பெயரை வைத்துள்ளோம் என்பதை என் அன்பு உறவுகளுக்கு தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் பிஸியாக இருந்து வரும் நிலையில் புகழ், தனது மனைவி பென்ஸி, மகள் ரித்தன்யாவுடன் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். விமானம் முதல் ஜப்பான் நாட்டில் சுற்றி பார்த்த இடங்களை எல்லாம் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அவருடைய குழந்தையின் முகத்தை அவர் காட்டவே இல்லை.
அந்த குழந்தைக்கு 6 மாதம் இருக்கும். எனினும் அவர் முகத்தை காட்டாமல் இருக்கிறார். ஆனால் அந்த வீடியோவில் மற்றொரு குழந்தை உள்ளது, அது ஜப்பான் நாட்டு குழந்தை போல் இருக்கிறது, அந்த குழந்தையின் முகத்தை மட்டும் புகழ் காட்டியுள்ளார். ஆனால் தனது குழந்தையின் சைடு ஃபேஸை கூட அவர் காட்டவில்லை.
இதனால் ரசிகர்கள் பலர் ஜப்பான் சென்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அது போல் ஊரார் வீட்டு குழந்தையை காட்டுகிறீர்கள். உங்கள் குழந்தையை மட்டும் ஏன் மறைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
இதற்கு புகழ் பதில் அளித்துள்ளார். அவர் இல்ல செல்லம் பாப்பாவுக்கு ஒரு வயது ஆனதும் கண்டிப்பாக முகத்தை கண்டிப்பா காட்டுறேன். சாரி , அதுவரை முகத்தை காட்டக் கூடாதுனு வீட்ல பெரியவர்கள் எல்லாம் சொல்லிவிட்டார்கள் என்றார்.
அதற்கு நெட்டிசன்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆகும் வரை போட்டோ கூடதான் எடுக்கக் கூடாதுனு சொல்வாங்க. நீங்கள் என்னப்பா வீடியோ எடுத்துட்டு முகத்தை காட்ட இவ்ளோ பண்றீங்களே என்கிறார். அது போல் குழந்தையின் முகத்தை காட்டுவதும் காட்டாததும் பெற்றோரின் விருப்பம். ஆனால் அடுத்தவர் குழந்தையின் முகத்தை காட்ட புகழுக்கு என்ன உரிமை என கேட்கிறார்கள். மேலும் அந்த குழந்தையின் பெற்றோரிடம் அனுமதி கேட்டுவிட்டு புகழ் அந்த குழந்தையின் முகத்தை காட்டியிருப்பார் என்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications