பாரதிராஜா குறித்து சீக்ரெட் உடைத்த ராஜேஷ்! பிக்கப் ஆகுறதுதான் முக்கியம்! கமல் சொன்னது என்ன?
சென்னை: நடிகர் ராஜேஷ், நடிப்பை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலுக்கு சென்ற போது இயக்குநர் பாரதிராஜா என்ன சொன்னார் என்பது குறித்து நடிகர் ராஜேஷ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுதான் நிதர்சனமான உண்மையும் கூட! அப்படி என்னதான் பாரதிராஜா சொன்னார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ராஜேஷ். இவர் "அந்த 7 நாட்கள்" படம் மூலம் புகழ் பெற்றார். "அவள் ஒரு தொடர்கதை" படத்தில் சிறிய ரோலில் அறிமுகமானார். பிறகு கன்னி பருவத்திலே எனும் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இவர் சினிமா மட்டுமல்லாது ரோஜா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். பன்முகத் திறமை கொண்டவர், நடிகர், டப்பிங் கலைஞர், தொழிலதிபர் உள்ளிட்ட பல்வேறு திறமைகளை கொண்டவர். இவர் ஜோதிடத்தையும் கற்றுத் தேர்ந்தவர்.
புரியாத புதிர்
புரியாத புதிர் எனும் புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார். அத்துடன் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் இருந்ததால் ராஜேஷ் தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு சினிமா வாய்ப்புகளை தேடினார்.
ராஜேஷ் காலமானார்
இந்த நிலையில் ராஜேஷ் கடந்த மாதம் திடீரென காலமானார். அவருக்கு வயது 75. அவர் இறப்பு குறித்து பலரும் பலவிதமாக பேசுவதால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மகள் திவ்யா, தனது தந்தையின் இறப்பில் எதுவும் நடக்கவில்லை, அப்பா குறித்து தப்பா பேசாதீர்கள் என கேட்டுக் கொண்டார்.
ராஜேஷின் பழைய பேட்டி
இந்த நிலையில் ராஜேஷின் பழைய பேட்டி வைரலாகி வருகிறது. அது போல் ராஜேஷ் சித்த மருத்துவம், யோகா, உள்ளிட்ட பாரம்பரிய வைத்தியத்தை ஊக்குவித்தார். அதை தானும் பயன்படுத்தி பார்த்துவிட்டு அடுத்தவர்கள் பயன்பெறவும் சொல்வார். நல்ல கருத்துகள் அனைத்து மக்களையும் போய் சேர வேண்டும் என அவர் எப்போதும் விரும்புவார்.
ரியல் எஸ்டேட்
இந்த நிலையில் அவர் நடிப்பை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் துறைக்கு சென்ற போது கமல்ஹாசன் , அருமையா நடிச்சிக்கிட்டு இருக்கீங்க. இந்த நேரத்துல ஏன் பிசினஸ் போறீங்கன்னு கேட்டார். ஒரு நல்ல நடிகனை திரையுலகம் இழக்கிறது என்று சொன்னார்.
துதி பாட கூடாது
யாருக்கிட்டேயும் போய் சுகமில்லன்னு கையேந்தறதோ, இல்ல எனக்கு வாய்ப்பு கொடுன்னு கேட்குறதோ இதெல்லாம் கிடையாது. எவன் ஒருவன் அடுத்தவனை துதி பாடுகிறானோ அவன் தன்னம்பிக்கை இல்லாதவன். தன்னம்பிக்கை உள்ளவன் துதி பாட மாட்டான். அதற்காக உன்னோட திறமையை நான் ஃபுல்லா சொல்றதுங்கறது உங்களைத் துதி பாடுறது இல்ல. நான் யாரையும் துதி பாட மாட்டேன் என்றார்.
இயக்குநர்
அதற்கு கமல் கூறுகையில் ராஜேஷ் இயக்குநராகவோ, நடிகராகவோ சாவதை விட பணக்காரராக சாவதை நான் விரும்புகிறேன் என கமல் தெரிவித்திருந்தாராம். அதன்படி பணத்திற்கும் வசதி வாய்ப்பிற்கும் எந்த குறைவும் இல்லாமல் அவர் இறந்தார்.
பாரதிராஜா சொன்னதுதான் சரி
இந்த நிலையில் பாரதிராஜா, தன்னிடம் கூறியது குறித்து ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாரதிராஜா சொன்னது தான் கரெக்ட். என்ன சொன்னாருன்னா, யோவ் நான் நடிக்க வந்தேன்யா. நான் டைரக்டர் ஆகிட்டேன்யா. புரொடியூசர் ஆகிட்டேன். அதே மாதிரி நீ வந்து நடிக்க வந்தே. வாத்தியார் வேலை பார்த்தே. இப்ப ரியல் எஸ்டேட் பண்றே. எது பிக்கப் ஆகுதோ, காசு தான்யா முக்கியம்னாரு என ராஜேஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications