நடிகர் ரஜினிகாந்த்தால் ஜெய் ஆகாஷ்க்கு நேர்ந்த சோகம்..பல வருடங்களுக்குப் பிறகு அவரே பகிர்ந்த வருத்தம்
சென்னை: நடிகர் ஜெய் ஆகாஷ் வெள்ளித்திரையில் சில திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்திருந்த நிலையில் தற்போது சின்னத்திரையில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய சினிமா வாழ்க்கை அதில் ஏற்பட்ட சரிவு குறித்து பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

அது நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்களால் தன்னுடைய திரைப்படத்திற்கு வந்த பிரச்சனை குறித்து பேசி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரு சில நடிகர்களுக்கு மட்டும்தான் சினிமாவில் நல்ல வாய்ப்புகளும் அடுத்தடுத்த வெற்றிகளும் கிடைத்திருக்கிறது. பலருக்கு திறமை இருந்திருந்தாலும் வெற்றிகளுக்கு இடையூறுகள் அதிகமாக வந்திருக்கிறது. அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் ஜெய் ஆகாஷ் இவர் 2001 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான "ஆனந்தம்" என்ற திரைப்படத்தில் மூலமாக பெரிய அளவில் பிரபலமானார்.
ஆனந்தம் திரைப்படத்தை தொடர்ந்து ஜெய் ஆகாஷ்க்கு தெலுங்கில் பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனாலும் தமிழில் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. குறிப்பாக ரோஜாவனம், ரோஜா கூட்டம், இனிது இனிது காதல் இனிது போன்ற சில திரைப்படங்களில் ஜெய் ஆகாஷ் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சில வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்த ஜெய் ஆகாஷ் ஜீ தமிழில் சமீபத்தில் முடிவடைந்த நீதானே என் பொன்வசந்தம் என்று சீரியலில் கதாநாயகனாக மீண்டும் அறிமுகம் ஆகி இருந்தார். இந்த சீரியல் பெரும் அளவில் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பிரபலத்தை கொடுத்தது. அதைத் தொடர்ந்து தற்போது எக்ஸ் மேன் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான பூஜை சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்த படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெய் ஆகாஷ் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் பொதுவாக பெரிய படங்கள் திரைக்கு வரும் போது சின்ன படங்கள் எல்லாம் தியேட்டரில் இருந்து தூக்கி விடுகின்றனர். இதுகுறித்து அதில் பேசியிருக்கிறார். அப்போது எனக்கு கூட என்னுடைய வாழ்க்கையில் அப்படி ஒரு நிலைமை நடந்திருக்கு. அதாவது நான் ஹீரோவாக நடித்த குருதேவா என்ற படம் 2005 ஆம் ஆண்டு வெளியானது. அந்தப் படத்தில் சிறந்த வரவேற்பும் பாசிட்டிவ் விமர்சனங்களும் கிடைத்திருந்தன. ஆனாலும் அந்த படம் தியேட்டரில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் போதே அந்த திரைப்படத்தை தூக்கிவிட்டார்.

அப்போது ரஜினி நடித்த சந்திரமுகி படம் வெளியானது. அதனால் தான் பல திரைப்படங்கள் தூக்கப்பட்டது. அப்போது தூக்கப்பட்ட படங்களில் என்னுடைய திரைப்படமும் ஒன்று. அது மட்டும் இல்லாமல் இது எதுவுமே எங்களுடைய கையில் இல்லை. ரஜினிக்கு என்று ஒரு மாஸ் பட்டாளம் இருக்கிறது எங்கள் படத்தை விட அவருக்கு தான் அதிகமான ரசிகர்கள் படம் பாக்க வருகிறார்கள். 30 கூட நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயலலிதா திரைப்படம் நிறைய தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் பலருக்கும் டிக்கெட் கிடைக்காமல் காத்திருக்கின்றனர். அதனால் நடிகர் ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார். அவர் வருகிறார் என்றால் நாங்கள் அனைவரும் ஒதுங்கி வழிவிட்டு தான் ஆக வேண்டும். ரஜினி படத்தோடு எங்கள் படம் போட்டி போட முடியாது என்றும் அந்த பேட்டியில் ஜெய் ஆகாஷ் பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
