ரஜினிகாந்த் திடீர் எமோஷனல்.. குன்றத்தூர் அபிராமியின் கணவர்! மகனுக்கு கடைசி முத்தம் தரப்போய்.. கடவுளே
சென்னை: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் முழுக்க சிறை என்பது வரவேற்கக்கூடிய விஷயமாகும்.. எனினும், இதுபோன்ற நபர்களுக்கு தூக்கு தண்டனை தரவேண்டும் என்று பொதுமக்களின் கருத்தாக உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.. அத்துடன், அபிராமி தன்னுடைய குழந்தைகளை கொலை செய்தது குறித்தும், அவரது கணவர் விஜய் குறித்தும் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "தனியார் வங்கியில் அபிராமியின் கணவர் விஜய் வேலை பார்த்து வந்துள்ளார்.. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்ததுமே, மனக்கசப்பு வந்துள்ளது.. இது இயல்பாக வரக்கூடியதுதான்..

வேலை அழுத்தம் அதிகமாக இருந்தால், மனைவியை பராமரிப்பதும், மகப்பேறு முடிந்ததும் குடும்ப வாழ்க்கை சுமை கூடுவதும் கணவன் மீதான கவனம் குறைவது இயல்பாகும்..
பணிச்சுமை
அப்படித்தான் விஜய்க்கும் பணிச்சுமை இருந்திருப்பதாக தெரிகிறது.. இதில் அபிராமி தவறு செய்துவிட்டார்.- அபிராமி மடடும்தான் இப்படி தவறு செய்தவர் என்று கிடையாது.. கணவனையும், பிள்ளைகளையும் கொன்ற வரலாறுகள் கடந்த காலங்களிலும் உண்டு..
ஆனால், டிஜிட்டல் மீடியா வந்த நேரத்தில்தான், அபிராமி வழக்கு சூடு பிடித்தது.. அனைவருமே அபிராமி கேஸ் என்ன ஆனது என்று உற்று கவனித்தார்கள்..
பிரியாணி கடைக்காரர்
பிரியாணி கடைக்காரருடன் அபிராமிக்கு உறவு ஏற்பட்டுள்ளது.. 2 தரப்பு குடும்பமுமே நாசமா போயிருச்சு.. தன்னுடைய குழந்தைகளுக்கு மட்டுமல்ல, கணவனுக்கும் சேர்த்துதான் தூக்க மாத்திரையை கலந்து தந்தார் அபிராமி... இதில் மகள், கைக்குழந்தை என்பதால், உடனே தூக்கத்திலேயே இறந்துவிட்டது.. மகனுக்கும், கணவனுக்கும் தூக்க மாத்திரை வேலை செய்யவில்லை..
மறுநாள் காலையில் படுக்கையிலிருந்த மகனுக்கு முத்தம் தர போயிருக்கிறார் விஜய்.. உடனே அபிராமி, தூங்குற குழந்தையை எழுப்பாதீங்க என்று தடுத்து, விஜய்யை வேலைக்கும் அனுப்பி வைத்துவிட்டார்..
பிறகு அபிராமி, கடைக்கு சென்று தன்னுடைய நகையை அடமானம் வைத்துவிட்டு, மறுபடியும் வீட்டுக்கு வந்துள்ளார்.. மகன் சாகாமலேயே இருந்ததால், கழுத்தை நெரித்து கொன்றதாக செய்திகள் வெளியானது.. கணவருக்கு தூக்க மாத்திரை வேலை செய்யாததால், தப்பித்துவிட்டார்..
அபிராமியின் தம்பி
அபிராமியின் தம்பி, ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.. ஆனால், அபிராமி வழக்கு பொதுவெளியில் வந்தபிறகு, அந்த காதலி, அபிராமியின் தம்பியை விட்டு பிரிந்தார்..
இந்த அவமானம் தாங்காமல், அபிராமியின் தம்பி தற்கொலை செய்து கொண்டார்.. இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது, அபிராமியின் கணவர் விஜய்யை, தன்னுடைய வீட்டுக்கு அழைத்து ஆறுதல் சொல்லியிருந்தார்.. 2 குழந்தைகளும் இல்லாமல், மனைவி ஜெயிலுக்கு சென்றபிறகு, தனிமையிலிருந்த விஜய்க்கு இவ்வாறு ரஜினி ஆறுதல் சொன்னது, இது மிகவும் முக்கியமான விஷயமாகும்..
தற்போது அபிராமிக்கு ஆயுள் முழுக்க சிறை என்பது வரவேற்கக்கூடிய விஷயமாகும்.. எனினும், இதுபோன்ற நபர்களுக்கு தூக்கு தண்டனை தரவேண்டும் என்று பொதுமக்களின் கருத்தாக உள்ளது..
தம்பதிக்குள் பிணக்கு
கணவன் - மனைவிக்குமான இடைவெளி இருந்தாலே, 3வது நபர் உள்ளே நுழைந்துவிடக்கூடும்.. இது இரு தரப்பிலுமே நடக்க வாய்ப்புண்டு.. அபிராமி விஷயத்தில் என்னதான் பேசினாலும், குழந்தைகளை கொன்றதை மட்டும் மனசாட்சி உள்ளவர்களால் ஏற்கவே முடியாது.. இப்படியான நபர்களை எப்படி சமுதாயத்தில் நடமாடவிடுவது?
அபிராமி குடியிருந்த, அவரது வீட்டின் உரிமையாளர்கள், "அந்த 2 பிள்ளைகளை எங்க கிட்ட தந்திருந்தால் நாங்களே வளர்த்திருப்போமே" என்று அழுதுகொண்டே அன்று பேசியிருந்ததை பலராலும் மறக்க முடியல்விலை.. இங்கே தூக்கு தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது என்பதால், அபிராமிக்கு சாகும்வரை சிறை தண்டனை என்பது சரியான தண்டனையே" என்று தெரிவித்து உள்ளார் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா.
ரஜினி ரசிகர்கள்
குன்றத்தூர் அபிராமி குழந்தைகளை கொன்றுவிட்டு ஜெயிலுக்கு சென்ற நிலையில், நிர்கதியாக நின்றார் கணவர் விஜய். மிகவும் மனமுடைந்து போன அவர், யாருடனும் பேசாமல் இருந்தார்.. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், பாதிக்கப்பட்ட விஜய்யை போயல் கார்டன் இல்லத்திற்கு அழைத்து நேரில் சந்தித்து பேசியிருந்தார்.
குழந்தைகளை இழந்து தவித்து வரும் விஜய்க்கு ஆறுதலும் சொன்னார்.. விஜய் நடிகர் ரஜினியின் தீவிர ரசிகராம்.. அதுமட்டுமல்ல, அபிராமியால் கொலை செய்யப்பட்ட அவரது குழந்தைகள் இருவரும்கூட, ரஜினியின் ரசிகர்களாகவே இருந்துள்ளனர். இதனால் குழந்தைகளை இழந்துத் தவிக்கும் விஜய்-க்கு ரஜினிகாந்த் நேரில் ஆறுதல் கூறியிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications