ராம்கியின் சக்ஸஸ்.. அதிர்ஷ்டம் இப்படி கதவை தட்டும்.. அன்பை இங்கே விதைத்தால் போதும்: அட லக்கி பாஸ்கர்
சென்னை: "நாம் ஒருவரை நேசிப்பதைவிட, நம்மை பிறர் நேசிப்பது மிக முக்கியமானது.. ஹோம் மேக்கரான பெண்களுக்கு, நாம் உரிய மரியாதையை, உரிய இடத்தை தரும்போதுதான், அதை நமக்கு அவர்கள் திருப்பி தருவார்கள்" என்று நடிகர் ராம்கி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Behindwoods TV யூடியூப் சேனலுக்கு நடிகர் ராம்கி பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் மனைவி நிரோஷாவுக்கு தான் கொடுக்கும் மரியாதை, அன்பு குறித்து அழகாக பேசியிருக்கிறார். அத்துடன் புத்தகம் படிப்பதில் தனக்குரிய ஆர்வம் குறித்தும் விலாவரியாக கூறியிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

நிம்மதி வாழ்க்கை: "வாழ்க்கையில் நிம்மதி முக்கியமா? வெற்றி முக்கியமா? என்று கேட்டால் நான் நிம்மதியைதான் சொல்வேன்.. காரணம், நிம்மதியால் சக்சஸை தர முடியும், ஆனால், சக்சஸால், நிம்மதியை ஒருபோதும் தர முடியாது. ஆனால், எல்லாருமே அமைதியை விட்டுவிட்டு, பணம் பின்னாடியே ஓட ஆரம்பிச்சிட்டாங்க.. பணம் மட்டுமே மகிழ்ச்சியை தரும் என்று முடிவு செய்துவைத்துவிட்டார்கள்.
இங்கே, பெரும்பாலானோர் நடந்து முடிந்ததை பற்றி கவலைப்படுகிறார்கள், அல்லது வரப்போவதை பற்றி கவலைப்படுகிறார்கள். ஆனால், இப்போதுள்ள நிகழ்காலத்தை பற்றி யாருமே சிந்திப்பதில்லை. நம்மை நாமே தொலைத்து கொண்டிருக்கிறோமோ? என்று கவலையாக உள்ளது. அமைதியாக இருந்தால் எல்லா பிரச்சனைகளுக்குமே இங்கு தீர்வு கிடைக்கும். ஆனால், அந்த அமைதியை நாம் நமக்குள் அனுமதிப்பதில்லை.
அது இஷ்டத்துக்கு வருவதால்தான் அதிர்ஷ்டம் என்று பெயர் வந்ததாக சொல்வார்கள்.. ஆனால், ஒருவர் தயார்தன்மையுடன் இருக்கும்போது, சந்தர்ப்பமும் சேர்ந்து வந்தால், அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அப்படி பயன்படுத்தி கொள்பவர்களுக்கே அதிர்ஷ்டம் அடிக்கும்..
அதிர்ஷ்டம் பெயர்: ஏற்கனவே பலருக்கும் அதிர்ஷ்டம் கதவை தட்டியிருக்கும். ஆனால், அந்த நேரத்தில் அவன் தயாராக இருந்திருக்க மாட்டான்... மாறாக, யார் ஒருவர் திட்டமிட்டு, தயாராக காத்துக் கொண்டிருக்கிறாரோ, அவருக்கே சந்தர்ப்பமும் அமைகிறது. இதன்பெயர்தான் உண்மையான அதிர்ஷ்டம் என்பதாகும்.
நான் நடிகராக இருப்பதால் எனக்கு மிகப்பெரிய பெருமை உண்டு.. என்னை பார்த்ததுமே அடையாளம் கண்டுபிடித்து சிரிக்கும்போது, எனக்குள்ளும் மகிழ்ச்சி பொங்கும். கோயிலில் சாமி கும்பிடும்போதுகூட, அதைவிட்டுவிட்டு என்னை திரும்பி பார்ப்பார்கள். எனக்கு சிலிர்ப்பாக இருக்கும். இதுக்கெல்லாம் நான் கடவுளுக்குதான் நன்றி சொல்லலாம். இதைதான் எனக்கு கிடைத்த அவார்டாக நான் நினைக்கிறேன்.
விருதுகள்: "அவார்டு என்பது முத்தம் தருவது போல.. அது கொடுப்பவர்களுக்கும் சந்தோஷம், பெறுபவர்களுக்கும் சந்தோஷத்தை தரக்கூடியது" என்று பார்த்திபன் சார் சொல்வார். அது உண்மைதான்.. இப்போது நான் நடித்துள்ள ஆன்டனி கேரக்டர், தெலுங்கு, மலையாளம், இந்திய மொழிகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதே எனக்கு மிகப்பெரிய அவார்டுதான்.
நான் மோடிவேஷனல் பேச்சு நன்றாக தருவேன்.. எப்போதுமே கோயிலுக்கு போனால் ஆறுதல் கிடைக்கும்.. ஆனால் குருக்களிடம் போனால் மட்டுமே மாறுதல் கிடைக்கும். அதனால், பல்வேறு குருக்களை நான் நேரில் சென்று வந்திருக்கிறேன்.. இதற்காகவே சிங்கப்பூர் சென்றுள்ளேன்.. லண்டனில் படித்துள்ளேன்.. இது சம்பந்தமான கோர்ஸ்களையும் படித்திருக்கிறேன்.. நிறைய புத்கங்கள் படிப்பேன்..
புத்தகங்கள்: எதுக்கு இவ்வளவு படிக்கிறேன் என்று எனக்கே தெரியாமல் இருந்தது. படித்ததை மற்றவர்களுக்கு சொல்லவே, இவ்வளவு புத்தகங்களையும் கடவுள் படிக்க வைத்தார் என்று பிறகுதான் புரிந்தது. அப்படி நான் பேசுவது ஒன்றிரண்டு பேருக்கு உபயோகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எல்லாரும் இங்கே கெட்டிக்காரர்கள்தான்.. ஆனால், அவர்களுக்கு தேவை இங்கே சரியான விதை.
நாம் ஒருவரை நேசிப்பதைவிட, நம்மை பிறர் நேசிப்பது மிக முக்கியமானது.. நிரோஷா அப்படித்தான்.. எனக்கு எப்பவுமே முக்கியதுவம் தருவார்.. ஹோம் மேக்கரான பெண்களுக்கு, நாம் உரிய மரியாதையை, உரிய இடத்தை தரும்போதுதான், அதை நமக்கு அவர்கள் திருப்பி தருவார்கள்.
அன்பு விதைக்கணும்: எந்த இடத்தில் அவர்களை வைக்கிறோமோ, அதே இடத்தில் நம்மையும் வைத்து மதிப்பார்கள்.. இதற்கு முதலில் நாம் அன்பை விதைக்கணும். நாம் சோர்ந்து போகும்போதெல்லாம், நம்மை நிமிர்ந்து வைக்கக்கூடிய தைரியசாலிகள் பெண்கள்" என்று மகிழ்ந்து சொல்லி உள்ளார் ராம்கி.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications