லக்கி பாஸ்கர் படத்தில் மட்டுமல்ல! என் நிஜ வாழ்க்கையிலும் நடந்த அவமானம்.. ராம்கி பகிர்ந்த விஷயம்
சென்னை: நடிகர் ராம்கி, "லக்கி பாஸ்கர்" திரைப்படத்தில் நடித்த பிறகு அவரைப் பற்றி இணையத்தில் அதிகமாக பேசப்படும் நிலையில் லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் பாஸ்கருக்கு நடந்த அவமானத்தை போலவே என்னுடைய வாழ்க்கையிலும் சில சம்பவங்கள் நடந்தது என்று ராம்கி பேசிய வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
80ஸ் காலகட்டத்தின் இறுதியிலும் 90ஸ் காலகட்டத்திலும் நடிகர் ராம்கி பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்புக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையன் போலவே இருக்கும் இவர் பல வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

ஆனால் குறிப்பிட்ட ஒரு சில திரைப்படங்களில் தான் நடித்து வருகிறார். தன்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வரும் திரைப்படங்களில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் அந்தோணி கேரக்டரில் நடித்து இருந்தார்.
இந்த திரைப்படம் வெளியான பிறகு ராம்கி பற்றிய பேச்சுகள் இணையத்தில் அதிகமாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ராம்கி நல்லவரா? கெட்டவரா? என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருந்தனர். அந்தோணி தான் பாஸ்கரை ஏமாற்றப் போகிறாரோ என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றம் கிடைத்தது.
அந்தோணி போல ஒரு கேரக்டர் நம்முடைய வாழ்க்கையில் வர மாட்டாரா? என்று பலர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் பாஸ்கருக்கு எப்படி அவர் வேலை பார்க்கும் இடத்தில் அவமானம் நடந்ததோ அது போலவே ராம்கிக்கு அவர் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் நடந்து இருக்கிறது.

ராம்கியின் வீட்டில் எல்லோருமே அரசு அதிகாரியாகவும் படித்து நல்ல நிலையில் தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் ராம்கி மட்டும் படிக்காமல் வீட்டை விட்டு வெளியே வந்து எப்படியாவது ஒரு நடிகராக வேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் அவருக்கு சின்ன பூவே மெல்ல பேசு என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த திரைப்படத்தில் முதலில் இவர் மட்டும்தான் கதாநாயகன் என்று நினைத்திருக்கிறார். அதற்கு பிறகு தான் பிரபுவும் அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. படம் வெளியே வந்ததும் படம் எதிர்பார்க்காத அளவிற்கு ஹிட் ஆகி இருக்கிறது. 125 வது நாள் கொண்டாட்டம் நடைபெற்று இருக்கிறது.
அப்போது நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு ராம்கி போய் இருந்திருக்கிறார். ஆனால் ராம்கியை அங்கிருந்தவர்கள் மேடைக்கு விடாமல் தடுத்து இருந்திருக்கிறார்கள். பிறகு விருது எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் போது ராம்கி காணவில்லை என்று மேடையில் தேடி இருக்கிறார்கள்.

அதற்கு பிறகு ராம்கி அங்கிருந்த போலீஸ்காரர்களிடம் கெஞ்சி என்னை தான் கூப்பிட்டு இருக்கிறார்கள் என்று சொன்ன பிறகுதான் அவர்கள் மேடைக்கு விட்டார்கள். அப்போ நான் எப்படியாவது இதே சினிமா துறையில் எல்லோருக்கும் தெரியும் ஒரு நபராக மாற வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் ஒரு சில வருடங்களிலேயே நான் நினைத்த மாதிரி எல்லோருக்கும் தெரியும் அளவிற்கு பிரபலமாகி விட்டேன்.
என்னை மேடையில் ஏறவிடாமல் தடுத்த இடத்திற்கு நான் பிறகு காரில் போய் இறங்கும்போது அங்கிருந்தவர்கள் எல்லோரும் எனக்கு வணக்கம் சொன்னார்கள். அது என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாது என்று அந்த பேட்டியில் ராம்கி பேசியிருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications