ஐசரி கணேஷ் மகள் திருமணம்! பட்டு வேட்டி சட்டையில் தோழி கெனிஷாவுடன் அட்டன்டன்ஸ் கொடுத்த ரவி மோகன்
சென்னை: தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தா திருமணத்திற்கு நடிகர் ரவி மோகன் தனது தோழியும் பாடகியுமான கெனிஷாவுடன் கலந்து கொண்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன.
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் லிமிடெட் மூலம் 25 படங்களை தயாரித்து ஹிட் கொடுத்தவர் ஐசரி கணேஷ். இவர் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் ஆவார். இவருடைய மூத்த மகள் ப்ரீத்தா கணேஷுக்கு சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து இன்று திருமணம் நடைபெறுகிறது. மகளின் திருமணத்திற்கு 10 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ளலாம் என்பதால் சென்னை ஈசிஆரில் உள்ள பழைய டிரைவின் தியேட்டரான பிரார்த்தனா தியேட்டரில்தான் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ரூ 30 கோடி
இதற்காக ரூ 30 கோடியில் செட் போடப்பட்டுள்ளது. அதே பகுதியில் உள்ள ஆர்.கே. மஹாலில் திருமணம் நடைபெறுகிறது. தனது மகளின் திருமணத்திற்கு அரசியல், சினிமா பிரபலங்கள், நெருங்கிய உறவினர்கள் என கிட்டதட்ட 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
வேல்ஸ் நிறுவனம்
இவர்கள் மட்டுமின்றி வேல்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்தை தொடர்ந்து மணமக்களின் ஆசைக்காக மாலத்தீவில் திருமணம் நடத்தப்படுகிறதாம். இதற்காக தனியாக பிளைட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாலத்தீவிலும் திருமணம்
இந்த நிகழ்வுக்காக சுமார் 300 பேர் மாலத்தீவு செல்கிறார்களாம். ப்ரீத்தாவின் கணவர் ஆர்க்கிடெக்ட்டாக உள்ளாராம். பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத ஐசரி கணேஷ், தற்போது தனது மகளுக்கு மிடில் கிளாஸ் மாப்பிள்ளையைதான் பார்த்துள்ளாராம்.
மருமகன் குணம்
மருமகனின் குணம் எல்லாருக்கும் பிடித்துவிட்டதால் அவரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஐசரி கணேஷ் முடிவு செய்து இந்த திருமணம் நடைபெறுகிறதாம்.
கெனிஷாவுடன் ரவி மோகன்
இவர்களுடைய திருமணத்திற்கு நடிகர் ரவி மோகன், தனது தோழியும் பாடகியுமான கெனிஷாவுடன் வருகை தந்துள்ளார். அவர் கெனிஷாவுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். தங்க நிறத்தினாலான வேட்டி, சட்டையை அணிந்திருந்தார். அப்போது தனியாக நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு கெனிஷா கூறியதற்கு ரவி வேண்டாம் என கூறிவிட்டார்.
ஆர்த்தி ரவி
ரவி மோகன் , சீரியல் தயாரிப்பாளர் விஜயலட்சுமியின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் கடந்த ஆண்டு அறிவித்தார்.
வதந்தி
இது ஆர்த்திக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னிடம் கலந்து பேசாமல் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாகவும் இதற்கு தான் ஒப்புக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தனது கணவர் குறித்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் ஆர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்.
16 வருட பந்தம்
16 வருடங்கள் திருமண பந்தத்தில் இருந்த ஆர்த்தி, ரவியுடன் சேர ஆசையாக இருப்பதாக தெரிவித்திருந்தார். ரவிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பதாக சொல்லப்பட்டது. பெங்களூரை சேர்ந்த கெனிஷாவுடன் தொடர்பிருப்பதாக தகவல்கள் பரவின.
காதல் இல்லை
இதை ரவி மறுத்தார். கெனிஷா ஒரு பாடகி என்றும் அவர் மருத்துவ உளவியலாளர் என்றும் கூறிய ரவி மோகன், தான் கடினமான நேரங்களில் இருந்த போது அதிலிருந்து வெளியே வர உதவியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தனக்கும் கெனிஷாவுக்கும் எந்த காதலும் இல்லை என தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications