குழந்தை இருக்குன்னு அசிங்கப்படுத்தினாங்க.. ஷாரிக் சொன்ன வார்த்தை! ரியாஸ்கான் மருமகள் உருக்கம்
சென்னை: நடிகர் ரியாஸ் கானின் மகன் ஷாரிக் சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டார். அவருடைய மனைவி ஜெனிஃபருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், குழந்தையோடு தன்னை ஷாரிக் திருமணம் செய்து கொண்டதால் அதிகமான விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் நான் எதற்காக ஷாரிக்கை திருமணம் செய்ய சம்மதித்தேன் என்று அவருடைய மனைவி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
நடிகர் ரியாஸ்கான் மற்றும் உமா ரியாஸ்கான் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் ஷாரிக் ஏற்கனவே சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பிக் பாஸ் தமிழ்
சீசன் 2 நிகழ்ச்சியிலும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு ஜெனிபர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய எங்கேஜ்மென்ட் புகைப்படம் தான் முதலில் இணையத்தில் வெளியானது. அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஜெனிபருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை இருக்கிறார். ஆனால் குழந்தையை சிங்கிள் மதராக ஜெனிபர் வளர்த்து வந்த நிலையில் ஷாரிக்கை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு தன்னுடைய குடும்பம் பற்றி பேட்டி ஒன்றில் ஜெனிபர் பேசியிருக்கிறார். அதில் நான் முதலில் கல்யாணமே வேண்டாம் என்ற முடிவில் தான் இருந்தேன். யாராவது என்னிடம் பேச வந்தால் கூட அவர்களிடம் என்னுடைய குழந்தையை நான் ஸ்கூலில் இருந்து கூப்பிட போக வேண்டும் என்று சொல்லுவேன். அப்படி என்றால் தான் அவர்களுக்கு எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது தெரியும் என்பதற்காக நான் அவர்களிடம் என்னுடைய குழந்தையை பற்றி பேசுவேன்.
என்னுடைய நண்பர்கள் யாரையும் என்னுடைய வீட்டிற்கு கூட்டிட்டு வரமாட்டேன். காரணம் என்னுடைய குழந்தை இன்னொரு குடும்பத்தை பார்த்து தனக்கு ஒரு அப்பா இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டு விடக்கூடாது என்று யோசித்தேன். ஆனால் ஷாரிக்கை முதல் முறையாக பார்த்ததும் அவரிடம் என்னுடைய மகள் சாரா ரொம்பவும் செட் ஆகிவிட்டாள்.

ரொம்பவும் பாசமாக இருவரும் பழகி வந்தனர். அதை பார்க்கும்போதுதான் எனக்கு ஷாரிக் மீது காதல் வந்தது. எங்கள் இருவருக்கும் மூன்று வயது வித்தியாசம் இருக்கிறது. ஆனால் முதலில் அவர்தான் என்னிடம் காதலை சொன்னார். அப்போது கூட நான் அவருடைய அப்பா அம்மா எங்களுடைய காதலுக்கு என்ன சொல்லுவாங்க என்று பயந்தேன்.
பிறகு ஒருநாள் வீட்டிற்கு கூட்டிட்டு போனார். அங்கு அவர்களை பார்த்ததும் எனக்கு அழுகையே வந்துவிட்டது. ஆனால் அவர்கள் என்னுடைய மகளோடு செட் ஆகி விட்டார்கள். என்னுடைய மகள் மீது அவர்கள் அதிகமாக பாசம் வைத்திருக்கிறார்கள். இதை பார்க்கும் போது எனக்கு சந்தோஷமாக இருந்தது.
ஷாரிக்கை சினிமா ரசிகர்களுக்கு சின்ன பையனாக தெரியும். ஆனால் அவர் என்னுடைய குழந்தைக்கு முழுமையாக அப்பாவாக மாறிவிட்டார். எங்கள் கல்யாணம் நெருங்கி வந்த சமயத்தில் என்னை அதிகமானோர் திட்டினார்கள். அப்போது எனக்கு கணவர் குடும்பத்தினர் தான் முழுமையாக ஆதரவு தந்து என்னை கஷ்டத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தார்கள் என்று ஜெனிபர் பேசியிருக்கிறார்.

அவரை தொடர்ந்து பேசிய ஷாரிக் நான் ஜெனிபரை பார்த்ததும் இனி அவருடைய வாழ்க்கையில் கஷ்டமே இருக்கக் கூடாது என்று நினைத்தேன். அவளுக்கு முழுமையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும், துணையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். என் வாழ்நாள் முழுக்க நான் அப்படித்தான் இருப்பேன்.
ஜெனிஃபரை மட்டுமல்லாமல் எனக்கு சாராவையும் ரொம்பவும் பிடிக்கும். சாரா எப்போதும் என்னுடைய மகள் தான். நான் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று இந்த தம்பதி மகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்கள். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து அதிகமான ரசிகர்கள் ஷாரிக் மற்றும் ரியாஸ்கான் குடும்பத்தை பாராட்டி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications