மனசு கேட்காமல் வீடு தேடி வந்த விஜய்.. உள்ளே வராதனு திருப்பி அனுப்பிய சஞ்சீவ்.. இப்படியும் நடந்துச்சா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் அரசியலிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இந்த நிலையில் அவர் குறித்து அவருடைய நண்பர் நடிகர் சஞ்சீவ் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். சஞ்சீவ் எந்த இன்டர்வியூ கொடுத்தாலும் அங்கு விஜய் குறித்து அவரிடம் பல கேள்விகள் கேட்கப்படும் இந்த நிலையில் ஒரு பேட்டியில் தன்னுடைய வீட்டுக்கு வந்த விஜய்யை நான் வாசலிலேயே வீட்டை விட்டு அனுப்பி வைத்து விட்டேன் என்று உருக்கமாக சஞ்சீவ் பேசியிருந்தார்.

அதாவது தனக்கு உதவி செய்வதற்காக வந்த விஜய்யை தான் வீட்டு வாசலில் திருப்பி அனுப்பியது தன்னை ரொம்பவே கஷ்டப்படுத்தியது என்று அந்த பேட்டியில் சஞ்சீவ் கூறி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Actor Sanjeev said that he sent Vijay away from the house at the door.

நடிகர் விஜய்யை அப்படியே காப்பி அடித்தது போல மேனலிசம் காட்டிக் கொண்டிருக்கும் சஞ்சீவ் குறித்து அடிக்கடி இணையத்தில் ரசிகர்கள் கலாய்த்து வருவதை பார்க்க முடியும். ஆனால் தன்னை பற்றி வரும் ட்ரோல்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் சஞ்சீவ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் குறித்த சில தகவல்களை பேசி இருக்கிறார்.

அதில் கொரோனா காலகட்டத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த காலகட்டத்தில் புகழில் உச்சத்தில் இருந்தவர்களுக்கும் அடிமட்டத்தில் இருந்தவர்களின் வாழ்க்கையும் ஒரு போலத்தான் அமைந்தது. வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். அடிப்படை தேவைகளுக்கு கூட பயந்து பயந்து தான் வெளியே செல்ல முடிந்தது.

அந்த நேரத்தில் சஞ்சீவ்க்கு கொரோனா தொற்று அறிகுறி ஏற்பட்டிருக்கிறது. உடனே தன்னுடைய குழந்தை மற்றும் மனைவியை தன்னுடைய மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்து வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் விஜய் திடீரென்று சும்மா போன் பண்ணி இருக்கிறார். அப்போது தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது போன்ற அறிகுறிகள் இருப்பதால் தான் வீட்டில் தனியாக இருப்பதாக சஞ்சீவ் தெரிவித்திருக்கிறார்.

அதற்கு சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய் என்று விஜய் கேட்டிருக்கிறார். அதற்கு ஏதாவது பாத்துக்கலாம் என்று சஞ்சீவ் சொல்லி இருக்கிறார் பிறகு இருவரும் பேசி போனை வைத்ததும் 15 நிமிடம் கூட ஆகவில்லையாம் திடீரென்று சஞ்சீவ் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து இருக்கிறது யார் என்று சஞ்சீவ் வெளியே எட்டிப் பார்க்க அதில் விஜய் இறங்கி வந்திருக்கிறார்.

மனைவி வீட்டில் இல்லை என்றால் எப்படா சாப்பாட்டுக்கு மேனேஜ் பண்ணுவ என்று நான் எடுத்துட்டு வந்தேன் என்று விஜய் சொல்ல அது சஞ்சீவ்க்கு சந்தோஷமா இருந்தாலும் விஜய் வீட்டுக்குள் விடவில்லையாம். கேட்டில் இருக்கும் காவலாளியிடம் சாப்பாட்டை கொடுத்துவிட்டு நீ அப்படியே கிளம்பி போயிருடா வீட்டுக்குள்ள வரவேண்டாம் என்று வெளியே அனுப்பி வைத்து விட்டாராம்.

அதற்கு காரணம் வீட்டுக்குள் வந்தால் விஜய்க்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று அக்கரையில் தான் நான் வாசலோடு போக சொன்னேன் என்று சஞ்சீவ் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். என்னதான் சஞ்சீவ் விஜயை காப்பி அடித்து நடித்துக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கிண்டல் செய்து கொண்டிருந்தாலும் இருவர் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பு குறித்து இப்போது ரசிகர்கள் இவர்களை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதுபோல சஞ்சீவ் இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் போலீஸ் ஆபீஸராக நடித்துக் கொண்டிருக்கிறார். வீரசிங்கம் கேரக்டரில் இவர் நடிப்பதை பலர் கலாய்த்து ட்ரோல் செய்து வருகின்றனர். அது குறித்து கூட அந்த பேட்டியில் சஞ்சீவ் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+