இவரே ஒரு கஞ்சன்.. விஜயகாந்தை போய் தப்பா பேசலாமா? வடிவேலுவை அடிக்க பாய்ந்த சாரப்பாம்பு சுப்புராஜ்
சென்னை: நடிகர் வடிவேலுக்கு என் கோபம் பற்றி நன்றாக தெரியும். அதனால் என்னிடம் அவ்வளவாக வெச்சிக்க மாட்டார் என காமெடி நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
கவுண்டமணி, செந்தில் என காமெடி ஜாம்பவான்களுக்கு மத்தியில் கடந்த 20 ஆண்டுகளாக காமெடியில் கலக்கி வந்தவர் நடிகர் வடிவேல். இவரது முகபாவனையும் பாடி லேங்குவேஜும் அனைவருக்கும் பிடித்துவிடும்.
இன்றுவரை எல்லா சிசுவேஷன்களுக்கும் பொருந்த கூடியது அவருடைய மீம் டெம்ப்ளேட்கள். விவேக், வடிவேலை சுற்றி சில கலைஞர்கள் இருப்பார்கள். விவேக்கோ வடிவேலுவோ எந்த படத்தில் நடித்தாலும் இந்த கலைஞர்களுக்கும் ஒரு சீன் இருக்கும்.

அந்த வகையில் வடிவேலுவை சுற்றி போண்டாமணி, பெஞ்சமின், முத்துக்காளை, சாரப்பாம்பு சுப்புராஜ் என சக நடிகர்கள் இருப்பார்கள். இவர்களாலும் வடிவேலுவின் காமெடி சினிமாவில் எடுப்பட்டது. ஆனால் இவர்களை எல்லாம் அவர் தக்க வைத்துக் கொள்ளவில்லை. வடிவேலு எப்படி என்றால் தன்னைவிட வேறு யார் வளர்ந்தாலும் அதை விரும்பமாட்டாராம்.
அதனால்தான் பல நடிகர்கள் வடிவேலுவை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில்தான் காமெடி நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் ஒரு தகவலை யூடியூப் சேனலுக்கு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஆரம்பத்திலிருந்தே விஜயகாந்தும் வடிவேலுவும் நல்ல நட்புடன் இருந்தனர். ஒரு சில படங்களில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர். 2010ஆம் ஆண்டு விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை வடிவேல் கண்டபடி விமர்சித்தார்.
அதிலிருந்து எனக்கு வடிவேலுவை பிடிக்காமல் போனது. இதுகுறித்து அடுத்த நாளே வடிவேலுவிடம் கேட்டு எச்சரித்தேன். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் விஜயகாந்த் கையால் சாப்பிட்டிருக்கேன். என்னை போல் அவரால் நிறைய பேர் பலனடைந்திருக்கிறார்கள். விஜயகாந்த் அவருடைய அறைக்கு வரும் போது செந்தில் ஒரு பக்கமும், ராவுத்தர் ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமும் படுத்திருப்போம். எங்களை தொந்தரவு செய்ய கூடாது என நினைத்து கொண்டு விஜயகாந்த் ஒரு துண்டை விரித்துக் கொண்டு தரையில் படுத்திருப்பார்.

காலை, மதியம், இரவு என 3 வேளையும் கறி சோறுதான். அவர் என்ன சாப்பிடுகிறாரோ அதையே எங்களுக்கும் தருவார். இப்படிப்பட்ட மனுஷனை தப்பா பேசுனா சும்மா இருப்பேனா? வடிவேலுவை அவர் வீட்டுக்கே போய் அடிக்கவே பாய்ந்துவிட்டேன். அப்போது மறைந்த எம்பி ஜே.கே. ரித்தீஷ்தான் என்னை தடுத்து சமாதானம் செய்தார். வடிவேலு ஒரு கஞ்சன், அவர் விஜயகாந்தை திட்டலாமா, அதுக்குத்தான் ஆண்டவன் வடிவேலுக்கு அந்த தண்டனை கொடுத்திருக்கான். வலுவேலு கூட நடித்த எல்லா காமெடியும் நான் உருவாக்கியது.
சாரப்பாம்பு காமெடி கூட நான் போட்டதுதான். நான் இயக்குநராகவும் உதவி இயக்குநராகவும் இருந்த காலத்தில் கடுமையாக கோபம் வரும். கவுண்டமணி, செந்தில் , வினு சக்கரவர்த்தி, ராமராஜன் ஆகிய எல்லோரிடமும் சண்டையிடுவேன். வடிவேலுவுக்கு என் கோபம் பற்றி தெரியும். என்கிட்ட வச்சிக்க மாட்டார். அவரே இதை சொல்வார். மூன்று வேளையும் கறி சோறு போட்டு என்னை அம்மா, அப்பா மாதிரி பார்த்துக் கொண்டவர் கேப்டன். அவரை பற்றி பேசினால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். அது முதல் வடிவேலுவுடன் நான் சேர்ந்து நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டேன். இவ்வாறு சாரப்பாம்பு சுப்புராஜ் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications