ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் சரத்குமார்.. எவ்ளோ பணம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்- சென்ராயன் கெத்து
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சரத்குமார் நடித்தது குறித்த கேள்விக்கு நடிகர் சென்ராயன் பதில் அளித்துள்ளார்.
சென்னை: ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நான் நடிக்க மாட்டேன். பணம் கிடைத்தால் எல்லாவற்றிலும் நடிக்க முடியாது என நடிகர் சென்ராயன் தெரிவித்தார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஜெயித்து எப்படியாவது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் பலர் கடனை வாங்கி லட்சக்கணக்கில் வைத்து ரம்மி விளையாடுகிறார்கள். அந்த பணத்தை இழந்தாலும் அடுத்த முறை வெல்வோம் என்ற அதீத நம்பிக்கையால் மீண்டும் கடனை வாங்கி விளையாடுகிறார்கள்.
இப்படி அடுத்தடுத்து விளையாடி கடனானது கோடிக்கணக்கை எட்டுகிறது. வாங்கும் ஊதியம் வயிற்றுக்கும் வாய்க்கும் பற்றாத நிலையில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் கடன் கழுத்தை நெரிக்கிறது.

கழுத்தை நெரித்து தற்கொலை
இதனால் கடன் வாங்கியவர்களும் கழுத்தை நெரித்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது போல் ஆன்லைன் ரம்மியால் 40 க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் தற்கொலை செய்துள்ளனர். இதனால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசும் இரு முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது.

ஆன்லைன் ரம்மி தடை
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை சட்டமாக இயற்ற ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இருமுறையும் ஆளுநர் அந்த மசோதாவை அனுப்பிவிட்டார். இதனால் அடுத்து என்ன செய்யலாம் என தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருவது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

தமிழக இளைஞர்கள்
காசுக்காக தமிழக இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார்கள் , அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் இதுகுறித்து சரத்குமார் கூறுகையில் நான் வோட்டு போடுங்கன்னு கேட்டாலே யாரும் போடுறதில்லை. இதுல நான் ரம்மி விளையாடுங்கன்னு சொல்றதால மட்டும் அவர்கள் ரம்மி விளையாடிவிருவார்களா என சீறினார்.

சட்டம் அமலானால்
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் அமலானால் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனையும் ரூ 5000 அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாகவும் வழங்கப்படும் என மசோதாவில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் சரத்குமார் நடிப்பது குறித்து சென்ராயன் கூறுகையில் நான் ரம்மி என்ற ஒரு படத்தில் நடித்திருக்கிறேன்.

அஜித் நடித்த மங்காத்தா
மங்காத்தா என்ற அஜித் நடித்த படத்தை பார்த்திருக்கிறேன். மற்றபடி சீட்டாட்டம் என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. அதிகபட்சமாக அந்த மாதிரியான விளம்பரத்திற்கு என்னை அழைத்தால் பொதுவாக நான் செல்ல மாட்டேன். பணம் கொடுத்தாலும் அது போன்ற ரம்மி விளம்பரத்தில் நான் நடிக்க மாட்டேன். அந்த விளம்பரங்களை நான் பார்த்ததில்லை. நான் மொபைல் பார்க்கும் போது என் கண்ணில் அந்த விளம்பரம் தென்படவில்லை, அதற்கு நான் என்ன செய்வது என கேள்வி எழுப்பியிருந்தார்.

அதிர்வலைகள்
ஆன்லைன் ரம்மி விளம்பரத்தை தடை செய்ய பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் அரசியல் கட்சித் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான சரத்குமார் இந்த விளம்பரங்களில் நடித்து வருகிறார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளையாட்டின் மோகத்தால் பல இளைஞர்கள் தங்கள் குடும்பத்தையும் இன்னுயிரையும் இழக்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications