நடிகர் செவ்வாழை ராசுவின் வாழ்க்கையில்இப்படி ஒரு துயரமா?அதனால்தான் அந்த முடிவா?வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: பருத்திவீரன் திரைப்படத்தின் மூலமாக பிரபலம் அடைந்த நடிகர் செவ்வாழை ராசு இன்று காலமானார்.
அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.

மறைந்த நடிகர் செவ்வாழை ராசு ஆரம்பத்தில் தான் எப்படி சினிமா வாழ்க்கைகள் வந்தேன் என்றும் சினிமாவில் தான் பட்ட சந்தோஷங்கள் கஷ்டங்கள் குறித்தும் தன்னுடைய குடும்பத்தை பற்றியும் பல தகவல்களை பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் கிட்டத்தட்ட 200 திரைப்படங்களுக்கு மேலாக செவ்வாழை ராசு நடித்து இருப்பதாக கூறி இருக்கிறார். 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகிவிட்டது என்றும் இன்னும் பல திரைப்படங்கள் சில பஞ்சாயத்தால் வெளியாகாமல் முடங்கி போய்விட்டது என்றும் கூறியிருக்கிறார். முன்னணி நடிகர்கள் பலரோடு நடித்து விட்ட செவ்வாழை ராசு தான் சினிமாவை விட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களாக திடீரென்று விலகியதற்கு காரணங்கள் பற்றியும் அதில் கூறி இருக்கிறார்.
அதில் செவ்வாழை ராசுவிற்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தார்களாம். அதில் ஒரு மகன் திடீரென்று இறந்து விட்டார். அவர் பெயர் எஸ் ஆர் தமிழன் அந்த இழப்பிலிருந்து என்னால் மீள முடியவில்லை. அதனால் தான் நான் சினிமாவை விட்டு விலகி எந்த படமும் நடிக்காமல் இருக்கிறேன் என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

என்னுடைய மகன் தவறி விட்டான் என்னுடைய மகன் மாவட்டத்தில் எங்க சமுதாயத்தில் ஒரு பெரிய தலைவராக இருந்தார். அவர் திடீரென்று இறந்தது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனக்கு பட வாய்ப்புகள் வந்தாலும் அதில் என்னால் அந்த கேரக்டராக நடிக்க நெஞ்சில தைரியம் இல்ல. அதனால்தான் அஞ்சாறு வருடங்களாக நான் நடிக்கவில்லை.
ஆனால் இப்போ பலரும் என்னிடம் நடிக்க சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பதால் நான் இப்போ சுமைதாங்கி என்னும் படத்தில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்த வீடியோவில் பகிர்ந்து இருக்கிறார். பல திரைப்படங்களில் காமெடிராகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்த நடிகர் செவ்வாழை ராசுவின் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோகங்களா என்று ரசிகர்கள் இப்போது ஃபில் பண்ணி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications