3 நாளாக குளிக்கலை! கமல்ஹாசனை கல்யாணம் செய்திருப்பேன்! நடிகர் சிவராஜ்குமார் பரபரப்பு தகவல்
சென்னை: நான் பெண்ணாக இருந்திருந்தால் கமல்ஹாசனை திருமணம் செய்திருப்பேன் என நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார். த்ரில்லர் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி இணைந்து நடித்துள்ள படம் 45. இந்த படம் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
அப்போது சிவராஜ்குமார் பேசியதாவது: எப்போது சென்னை வந்தாலும் உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். இந்த நகருக்கு வந்தால் எனக்கு மலரும் நினைவுகள் அதிகம் உள்ளது. சென்னையில் நான் இருந்த போதுதான் எனக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஹீரோ
நான் என்னை ஹீரோவாக நினைத்ததே இல்லை. ஹீரோ என்றால் அது கமல்ஹாசன் மாதிரி அமிதாப் மாதிரி இருக்க வேண்டும் என நினைத்தேன். அவர்கள்தான் எனக்கு பிடிக்கும். என் அப்பா ராஜ்குமாரை கூட நான் முன்மாதிரியாக கொண்டதில்லை. ஆனால் கமல்ஹாசன்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.
அழகு
அவரை போன்று அழகு யாருக்கும் வராது. நான் பெண்ணாக பிறந்திருந்தால் அவரை எப்படியாவது திருமணம் செய்திருப்பேன் என அவரிடமே நிறைய முறை சொல்லியிருக்கிறேன். சினிமாவில் நான் நிறைய வெற்றித் தோல்விகளை பார்த்தேன்.
மரணங்கள்
எதையுமே நான் தலைக்கு ஏற்றியது கிடையாது. அது போல் வாழ்க்கையில் நெருக்கமானவர்களின் மரணங்களையும் பார்த்துள்ளேன். எனக்கு கேன்சர் வந்து தலையில் அறுவை சிகிச்சை செய்தார்கள். எனக்காக ரசிகர்கள் வேண்டிக் கொண்டார்கள். படம் 45 மிகவும் அருமையான படமாகும்.
கமல்ஹாசன் படங்கள்
கமல்ஹாசனின் படங்களை முதல் நாளே பார்த்துவிடுவேன். ஒரு நாள் என் வீட்டிற்கு அப்பாவை பார்ப்பதற்காக கமல்ஹாசன் வந்திருந்தார். அவர் பார்த்தும் நான் ஓடி போய் கட்டி அணைத்துக் கொண்டேன். அதன் பிறகு அந்த ஸ்பரிசம் போய்விடும் என்பதால் 3 நாட்கள் குளிக்காமலேயே இருந்தேன்.
அமெரிக்காவில் சிகிச்சை
நான் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது கூட கமல்ஹாசன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எனக்கு கூடுதல் தைரியம் வந்தது. என் நிலையை கண்டு உணர்ச்சிவயப்பட்டு கண் கலங்கினார். நானும் உணர்ச்சிவசப்பட்டேன் என கூறியுள்ளார்.
சினிமாவில் முன்னணி
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார் சிவராஜ் குமார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 125-த்தும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது உத்தரகாண்டா, 45, பெட்டி, பைரவனா கேனே பாட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சிறுநீர் பை
இந்த நிலையில் சிறுநீர் பையில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அமெரிக்காவில் 2 மாத தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் நலம் பெற வேண்டி ரசிகர்கள் வேண்டிக் கொண்டனர்.
ஜெயிலர் 2 திரைப்படம்
இதையடுத்து புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு உடல் இளைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அவர் மாறியிருப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்திலும் சிவராஜ்குமார் நடிக்கிறார். புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்ததால் அவர் நடிக்க மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது ஜெயிலர் 2 படத்தில் அவர் இருப்பது உறுதியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கேரளாவில் அட்டப்பாடி மலைத்தொடரில் 35 நாட்கள் ஷூட்டிங் நடைபெறுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications