இந்த தருணத்தில் நான் "இதை" சொல்லியே ஆக வேண்டும்.. பிக்பாஸில் கண்ணீர் விட்ட சிம்பு!.. ஃபேன்ஸ் கவலை
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட நடிகர் சிம்பு கண்ணீர் விட்டதால் அவரது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகளையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் 24 மணி நேரமும் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் விக்ரம் 2 படப்பணிகளில் பிஸியாக இருப்பதால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து அவர் விலகினார்.

நடிகர் சிம்பு
இதையடுத்து அந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கடந்த சில தினங்களாக பிக்பாஸ் வீட்டில் ஏராளமான சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு வார இறுதியிலும் சிம்பு நிகழ்ச்சியை காண ரசிகர்கள் காத்திருப்பார்கள்.

சிம்பு நெகிழ்ச்சி
அந்த வகையில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் சிம்பு நெகிழ்ச்சியாக ஒரு விஷயத்தை பேசினார். பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர் நிரூப், தனது தந்தையை பற்றி பேசினார். அப்போது சிம்பு கூறுகையில், நானும் ஒரு விஷயத்தை இங்கு சொல்லியே ஆக வேண்டும். எனக்கு கிடைத்த அப்பா, அம்மா போல அடுத்த ஜென்மத்தில் கிடைப்பார்களா என தெரியவில்லை.

கண்ணீர் விட்ட சிம்பு
(நா தழுதழுக்கிறது) நீங்கள் அனைவரும் என்னை ரசிக்கிறீர்கள் என்றால் அதற்கு என்னை தட்டிக் கொடுத்து கூட்டி கொண்டு வந்தது... என பேசும் போது மிகவும் உடைந்து போய் கண்ணீர் விட்டார். மேலும் அவர் கூறுகையில் என்னை மிகவும் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அப்பா, அம்மா I love you" என்றார்.

நடுராத்திரியில் கலாட்டா
சிம்புவின் படங்கள் வெளியாகும் நேரத்தில் பெரும் பிரச்சினை ஏற்படும். படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும். அந்த தருணங்களில் சிம்புவின் அப்பாவும், அம்மாவும் தயாரிப்பாளர்கள் சங்கத்துடனும் படம் விநியோகஸ்தர்கள் சங்கத்துடனும் சமரசம் பேசுவார்கள். மாநாடு படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு பிறகு நடுராத்திரியில் ரிலீஸ் இல்லை என சொல்லப்பட்டு பின்னர் அந்த படம் சொன்ன தேதியில் ரிலீஸானது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications