Actor Simbu: ஆச்சரியமா இருக்கே.. சிம்புக்கு காதல் செட்டாகவே மாட்டேங்குதே!
சென்னை: நடிகர் சிம்பு நல்ல அழகு, சுறுசுறுப்பு, அறிவு, என்று எல்லா விதத்திலும் பளிச்சிடும் பன்முகத் திறமை கொண்டவர். என்னதான் குறை அவருக்கு?
அவருக்கு மட்டும் அழகழகான நடிகைகள் காதலிக்க கிடைத்தும் ,அவரது காதல் மட்டும் கை கூடவில்லையே ஏன்? கொஞ்சம் அலசிப் பார்க்கலாமே.
தேவதை என்றால் நயன்தாரா என்று காதலித்தார். கல்யாணம் செய்துவைக்க டிஆர் தயாராக இருந்தும், நயன் கல்யாணத்துக்கு அவசரப் பட்டும் கூட கடைசியில் விலகிக் கொண்டார் நயன். அடுத்து ஹன்சிகா கூட இப்படித்தான்.

சிறு வயது முதலே
சிம்பு குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது தத்தையுடனே பயணித்தவர். அதனாலயோ என்னவோ, அப்பாவின் அத்தனை கலைகளும் இவரிடம் ஒட்டிக் கொண்டது. அப்பாவின் சுறு சுறுப்பான செயல்பாடுகள், அத்தனை வேலைகளையும் தனி ஆளாக இருந்து செய்வது என்று அத்தனையும் இவரிடம் ஒட்டிக் கொண்டது. இவை எல்லாம் சிம்புவுக்கு தீராத கலை தாகத்தை உண்டாக்கியது.

வல்லவன் இயக்கம்
அந்த கலை தாகம்தான் வல்லவன், மன்மதன் படங்களை இயக்க வைத்தது. சிறு வயதில் அவருக்கு ஏற்ற கதையை உருகுவாக்கி, படத்தை இயக்கியது ஒரு சாதனைதான். இல்லை என்று மறுக்க முடியாது. இப்படி இசையின் மீது தாகம், பாடல் பாடுவதில் மோகம், எடிட்டிங், லைட்டிங், செட்டிங்கில் ஆர்வம் என்று முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் இருந்தது.

காதலும் உண்டு
சிம்புவுக்கு பெண்கள் என்றாலும் மதிப்பு, மரியாதை, அதிகம்., காதலும் மனத்தில் பூக்கும் அளவுக்கு மென்மையானவர்தான் சிம்பு. அப்படித்தான் அவருக்குள்ளும் நயன்தாரா மீது காதல் வந்தது. சிம்புவை பொறுத்தவரை காதல் என்றாலும் 100 சதவிகிதம் காட்ட வேண்டிய இடத்தில், காட்ட வேண்டிய நேரத்தில் சரியாக காண்பிப்பார்.

தூங்கினியா சாப்டியா
அதுக்காக வேலையை விட்டுவிட்டு சும்மா போன் பேசுவது. எதாவது பேசணுமே என்பதற்காக சாப்டியா, தூங்கினியான்னு கேட்பது இதெல்லாம் எனக்கு வேலைக்கே ஆகாதுன்னு அவரே சொல்லி இருக்கார். எனக்கு கலையின் மீதும் தீராத தாகம் இருக்கு. அதனால் என்னால் பொண்ணுங்க பின்னால சுத்தறது முடியாதுன்னு சொல்லி இருக்கார். இதனால்தான் இரண்டு காதலும் இவரை கைவிட்டு போனது.

நடிச்சாலே கவனம்
முதலில் ஹன்சிகா மோத்வானி உடன் நடிக்கும்போது, சிம்பு கூட நடிக்கறே ஜாக்கிரதையா நடின்னு சொன்னாங்களாம். ஆனாலும்,சிம்புவின் மேல் காதலில் விழுந்தார் ஹன்சிகா. சிம்பு காதல் குறித்து நடிகை வரலட்சுமி பேசுகையில் கூட, எனக்கு தெரிஞ்சு சிம்பு யாரையும் தேடி போகவில்லை. அவர்கள்தான் சிம்புவை காதலிப்பதாக காதலில் விழுகிறார்கள் என்று சொல்லி இருந்தார்.

கல்யாணம் வரை அவளுடன்
நான் முதன் முதலில் ஜோடி சேர்ந்து நடிச்சது சிம்பு கூடத்தான். எனக்கு சிம்புதான் ரொம்ப பிடிக்கும் என்றும் நடிகை வரலட்சுமி கூறி இருந்தார். இந்த கலைஞனின் தாக்கத்தை புரிந்துகொண்டு அவருக்கு வாழ்வில் இணையாக வரும் ஜோடி பெண் யாராக இருக்கும் என்று ஆவலுடன் காத்து இருக்கிறோம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications