குறும்பா என் உலகே நீ தான்டா.. மகன் பிறந்தநாளில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட போஸ்ட்.. க்யூட் ரியாக்ஷன்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மகன் குகனின் பிறந்த நாளில் அவரோடு எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தன்னுடைய மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். இது இணையத்தில் அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
திறமையும் உழைப்பும் இருந்தால் அதற்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக பலரை சொல்லலாம். அதில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி பிறகு திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், மற்றும் நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சின்னத்திரையில் இருக்கும் போது இவருக்கு அதிகமான ரசிகர்கள் தொடங்கி விட்டார்கள். அதிலும் கலக்கப்போவது யாரு சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிறகு அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவே மாறி இருந்தார். அதுபோல விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாவது இடத்தில் வெற்றியும் பெற்றிருந்தார்.

அதற்குப் பிறகு சூப்பர் சிங்கர் ஜூனியர், ஜோடி நம்பர் 1 சீசன் 5, airtel சூப்பர் சிங்கர் சீசன் 3 என்று விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனுக்கு அது இது எது நிகழ்ச்சி தான் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது என்று சொல்லலாம்.

அதிலும் மெரினா திரைப்படத்தில் பக்கத்து வீட்டு பையன் போலவே நடித்து மக்கள் மனதில் பசை போல ஒட்டிவிட்டார். முதல் திரைப்படத்தில் தனக்காக வாய்ப்பு வந்தபோது அதில் சிறப்பாக தன்னுடைய நடிப்பை காட்ட வேண்டும் என்பதற்காக பாண்டியராஜன் தன்னிடம் கதையை சொன்னதும் மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு சில நாட்கள் அங்கிருந்தவர்களோடு பழகி அதற்குப் பிறகு தன்னுடைய இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

முதல் படத்தில் ஓவியாவுடன் ஜோடியாக நடித்த சிவகார்த்திகேயன் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவோடும் ஜோடியாக நடித்து விட்டார். அடுத்தடுத்து இவருக்கு வெற்றிப்படங்கள் கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய குடும்பத்தினரும் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்திருக்க தொடங்கி இருக்கின்றனர்.

அதாவது சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஆர்த்தியை திருமணம் செய்திருந்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் அவருடைய மகள் ஆர்த்தி கனா திரைப்படத்தின் மூலம் வாயாடி பெத்த புள்ள பாடலின் சில பகுதிகளை பாடி ஒரு பாடகியாக மாறிவிட்டார். அதுபோல சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை சில மாதங்களுக்கு முன்பு தான் பிறந்தது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் இரண்டாவது மகன் குகனின் பிறந்தநாள் இன்றுதான். அதனால் தன்னுடைய மகனோடு எடுத்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். "பிறந்தநாள் வாழ்த்துக்கள் குகன் லவ் யூ" என்று அவர் வெளியிட்ட பதிவுக்கு வாழ்த்துக்களும் லைக்குகளும் குவிந்து கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் எவ்வளவு வளர்ச்சி இருக்கிறதோ அந்த அளவிற்கு தன்னை பற்றி நெகட்டிவான கருத்துகளும் வதந்திகளும் பரவி வந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத சிவகார்த்திகேயன் தன்னுடைய குடும்பம் மற்றும் சினிமா இரண்டையும் சம நிலையில் எடுத்து சென்று கொண்டிருக்கிறார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications