ரத்த வாந்தி எடுத்த சரோஜாதேவி.. அசத்தலான நடிப்பு.. கடைசிவரை கோடீஸ்வரி.. லிஸ்ட்டோடு வந்த சிவகுமார்
சென்னை: மூத்த நடிகை சரோஜாதேவி கடைசிவரைக்கும் கிளாமராகவே நடித்து புகழ்பெற்றவர் என்று பிரபல நடிகர் சிவகுமார் புகழாரம் சூட்டியிருக்கிறார்.. அத்துடன், சரோஜா தேவி எப்படி சினிமாவுக்குள் நுழைந்தார்? ஒவ்வொரு மொழியிலும் அவர் எத்தனை படங்கள் யாருடன் நடித்துள்ளார் என்ற புள்ளி விவரத்தையும் நடிகர் சிவக்குமார் பட்டியலிட்டுள்ளார்.. இது தொடர்பான ஆடியோ மெசேஜ்ஜையும் சிவகுமார் வெளியிட்டிருக்கிறார்.
சரோஜா தேவி குறித்து சிவகுமார் ஆடியோ ஒன்றில் கூறும்போது, சரோஜாதேவியுடன் நான் நடித்து 1968-ல் வெளிவந்த ஒரே படம் பணமா? பாசமா?.. இந்த படத்தை கேஎஸ் கோபாலகிருஷ்ணன் டைரக்ட் செய்திருந்தார்.. ஆனால் ஃபுட்டேஜ் காரணமாக அதில் நிறைய சீன்களை தூக்கிவிட்டார்கள்.,

முதல் கலர்ஃபுல் படம்
சரோஜாதேவி முதன்முதலில், கன்னட படத்தில்தான் அறிமுகமானார்.. அதில் அவரை அறிமுகப்படுத்தியவர் கே.சுப்பிரமணியம் என்ற பிரபல டைரக்டர்தான்.. இவர் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் அப்பா. இந்த படம்1956-ல் வெளியானது.. இதற்கு பிறகு கன்னடத்தில் மட்டும் மொத்தம் 42 படங்களில் நடித்துள்ளார் சரோஜாதேவி.,
தமிழில் 1957-ல் நடிக்க துவங்கினார்.. தங்கமலை ரகசியம் என்ற படத்தில் சிவாஜி கணேசன் நடித்திருப்பார்.. இதல் தேவதை மாதிரி 2 சீன்களில் வருவார் சரோஜா தேவி.. பிறகு, 1958-ல் எம்ஜிஆர் அவர்கள் தயாரித்து டைரக்ட் செய்த நாடோடி மன்னன் படத்தில் முதல் பாகத்தில் பானுமதியும், இரண்டாம் பாகத்தில் சரோஜாதேவியும் நடித்திருப்பார்கள்.. இதில் சரோஜாதேவி வருவது கலர் போர்ஷனாக பிரம்மாதமாக இருக்கும்.
சிவாஜி, எம்ஜிஆர் படங்கள்
1959-ல் பாகப்பிரிவினை என்ற படத்தில்தான் சிவாஜியுடன் முதன்முதலாக சரோஜாதேவி ஜோடி சேர்ந்து நடித்தார்.. வேலுமணி தயாரிப்பில் பீம்சிங் டைரக்ட் செய்த அந்த படம், சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதே வருடத்தில் கல்யாண பரிசு என்ற படத்தை முதன்முதலில் ஸ்ரீதர் டைரக்ட் செய்தார்.. அதில் சரோஜாதேவிதான் ஹீரோயின்.. நான் அப்போது ஓவிய கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது, கேசினோ தியேட்டரில் இந்த படத்தை பார்த்திருக்கிறேன்.
சின்னப்பதேவர் எடுத்த படங்களில், 16 படங்கள் எம்ஜிஆர் நடித்துள்ளார்.. பெரும்பாலும் எம்ஜிஆருடன் ஜோடியாக நடித்தவர் சரோஜாதேவி.. மொத்தம் 26 படங்கள் சேர்ந்து நடித்துள்ளார்.. குறிப்பாக பெரிய இடத்துப் பெண், தெய்வத்தாய், பணக்கார குடும்பம், படகோட்டி, எங்க வீட்டுப்பிள்ளை, அன்பே வா, பறக்கும்பாவை, அரசக்கட்டளை போன்ற படங்கள் எல்லாம் எம்ஜிஆருடன் நடித்தது சூப்பர் ஹிட்டாயின.
ரத்த வாந்தி எடுத்தார்
சிவாஜி கணேசனுடன் மொத்தம் 19 படங்கள் நடித்திருக்கிறார்.. இரும்புத்திரை, பாலும் பழமும், ஆலயமணி, இருவர் உள்ளம், பார்த்தால் பசி தீரும், குலமகள் ராதை, புதிய பறவை, பணமா, பாசமா, தாமரை நெஞ்சம் போன்ற படங்கள் வெற்றிப்படங்களாகும்..
இதில், தாமரை நெஞ்சம் படத்தை பாலச்சந்தர் எடுத்திருந்தார்.. மிகவும் எமோஷனலான படம்.. சோகக்காட்சிகள் நிறைந்து ஹிட்டான படம். எனவே இதேபோலவே, கேஎஸ் கோபாலகிருஷ்ணனும், குலவிளக்கு என்ற படத்தில் சரோஜாதேவியை கேரக்டர் ரோலில் நடிக்க வைத்தார்.. அதில், ரத்த வாந்தி எடுத்தெல்லாம் சரோஜா தேவி நடித்திருப்பார்.. அந்தவகையில், மேற்கண்ட 2 படங்கள்தான் அவர் நடித்த கேரக்டர் ரோல் படங்களாகும்.. மற்ற படங்கள் எல்லாமே கிளாமர் ரோல்தான்.
சூப்பர் ஸ்டார்களுடன் நடித்தவர்
ஜெமினி கணேசனுடன் மொத்தம் 22 படங்கள் நடித்துள்ளார்.. இதில், கல்யாண பரிசு, வாழ வைக்கும் தெய்வம், கைராசி, ஆடிப்பெருக்கு, உள்ளிட்ட படங்கள் ஹிட்டானவை..
இந்திப்படங்களில் 11 படங்களில் நடித்திருக்கிறார் சரோஜா தேவி.. அன்று அசோக்குமார், திலீப்குமாருடன் மிகப்பெரிய பிரபலங்களாக விளங்கினார்கள்.. இவர்களுடன் மட்டுமல்லாமல் ஷம்மி கபூர், சுனில் தத் போன்ற டாப் ஹீரோக்களுடன் சரோஜாதேவி நடித்திருக்கிறார்..
170 படங்கள் - கோடீஸ்வரி
இங்கு எம்ஜிஆர் சிவாஜி போல, தெலுங்கில் என்டி ராமராவ், நாகேஸ்வர ராவ் இருவருமே சூப்பர் ஸ்டார்கள்.. அவர்களுடன் 27 படங்கள் நடித்துள்ளார்.. மொத்தமாக பார்த்தால், 4 மொழிகளிலும் 170 படங்களில் சரோஜாதேவி நடித்துள்ளார்..
கடைசிவரைக்கும் கிளாமராகவே நடித்தவர்.. 87 வயதென்றாலே, நடிகைகள் வாய்ப்புகளை இழந்து, வறுமையில் வாடி, கஷ்டப்படுவார்கள் என்று சொல்வார்கள்.. ஆனால், கடைசிவரை கோடீஸ்வரியாக வாழ்ந்துள்ளார் நடிகை சரோஜாதேவி.. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்" என்று தெரிவித்துள்ளார் சிவகுமார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications