சிவக்குமாருக்கு கை உதறுதா? டி.ஆருக்கு? இதுவே தனிமனித ஒழுக்கம்.. நடிகர்களும் இதுபோல் மாறணும்: பிரபலம்
சென்னை: குறைந்த பட்சம் அர்ப்பணிப்பு, தனிமனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே, எந்த துறையிலும் யாராலும் நிலைத்து நிற்க முடியும் என்றும், ஒழுக்கத்துடனும் கெட்ட பழக்கத்திற்கும் எளிதில் ஆளாகிவிடக்கூடாது என்றும் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கூறியிருக்கிறார்.
BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு, மூத்த பத்திரிகையாளர் தந்துள்ள பேட்டியில், "ஒழுக்கமில்லாவிட்டால் இப்படித்தான் கை கால் உதறும்.. காலாகாலத்தில் கல்யாணமாகி, குழந்தை குட்டிகள் என்றிருந்து, சினிமாவையும், நடிப்பையும் தொழிலாக கருதினால் இப்படியெல்லாம் யாருக்கும் கைகள் உதறாது..

சிவக்குமார்: நடிகர் சிவக்குமாருக்கு 70 வயதாகிறது.. அவருக்கு கை உதறுதா? டி.ராஜேந்தருக்கு கை உதறுதா? சிவக்குமார், டி.ராஜேந்தர் என்று இப்படித்தான் ஒழுக்கமானவர்களை தேடி தேடி இப்போதுவரை பேச வேண்டியிருக்கிறதே தவிர, 100 நடிகர்களின் பெயர்களை, கடகடவென சினிமாவில் சொல்ல முடிகிறதா?
500 நடிகர்களில் 50 பேரை உதறல் லிஸ்ட்டில் வைத்துவிட்டாலும், 450 நடிகர்களாவது ஸ்ட்ராங்காக இருக்கணும் இல்லையா?
பெண்கள் விஷயத்தில் பலரும் பலவீனமாக இருக்கிறார்கள் என்பதே இங்கு பலரது பார்வையாக உள்ளது.. பெரும்பாலானவர்கள் சினிமா துறையில் சுத்தமாக இருப்பார்கள் என்று இனியாவது அனைவரும் சொல்ல வேண்டும்.
பட ரிலீஸ்: விஷால் உதறலுக்கு என்ன காரணம்? அவருக்கு வைரல் ஜூரம்னு சொல்றீங்க? டாக்டர் சர்ட்டிபிகேட் எதுக்கு உடனே போடுறீங்க? வைரல் ஜூரம் என்பது உண்மையானால், 10 நாள் பட ரிலீஸை தள்ளி போட்டிருக்கலாமே? 1 மாதத்தில் வைரல் ஜூரம் சரியாயிடுமே? இந்த பொங்கலுக்குதான் படம் ஓடணுமா? எப்போது ரிலீஸ் செய்தாலும், விஷாலுக்காக அந்த படம் ஓடத்தான்போகுது.. ஆனால், இவர்கள் ஏன் அவசரப்படுகிறார்கள்?
விஷாலுக்கு உடல்நிலை சரியில்லை என்று இவர்களுக்கு தெரிந்துவிட்டது. அவர் ஃபீல்டு அவுட் ஆகிவிட்டார் என்றதுமே, உடனே பட ரிலீஸை இப்போதே வைத்து, அந்த படத்தை காசாக்க நினைக்கிறார்கள்.
விஜய் ஆண்டணி: விஜய் ஆண்டனி அவரை பிடித்து சேரில் உட்கார வைத்தும்கூட, பட புரமோஷனுக்காக விஷால் இப்படியெல்லாம் மேடையில் நடிக்கிறாரா? என்று எல்லாரும் கேட்கும் நிலைமைக்கு அவரை கொண்டுவந்துட்டாங்க. ஏன் இந்த நிகழ்ச்சிக்கு சந்தானம் வரவில்லை? அவர்தானே இந்த படத்தில் முக்கியம்? அவருக்கும் ஜூரமா?
"சம்சாரம் அது மின்சாரம்" படத்தில் தெளிவாக வசனங்களை பேசியிருப்பார் ரகுவரன்.. ஆனால், போதை உள்ளே போக போக, அவருக்கும் கை உதறல் ஆயிடுச்சு, வாய் குழற ஆரம்பித்துவிட்டது.. கடைசியில் இதுவே ரகுவரனின் ஸ்டைல் ஆகிவிட்டது. "அலைகள் ஓய்வதில்லை" படத்தில் கார்த்திக் குரலும், வசனமும் தெளிவாக இருக்கும். சரக்கு உள்ளே போகப்போக அவரது குரலும், தெளிவான வார்த்தையும் போய்விட்டது.
நடிக்கக்கூடாது: யாரையும் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. மீண்டும் உடலை விஷால் தயார் செய்ய வேண்டியிருக்கிறது. நாளைக்கே விஷால் நினைத்தால், உடல்நலம் சரியாகி வரமுடியும். ஆனால், படக்குழு செய்தது தவறு. மேடைகளில் வந்து நடிக்கக்கூடாது.
சுந்தர் சி பதார்த்தவாதி.. விஜய் ஆண்டனி தான் யதார்த்தவாதி.. தன்னை தானே செதுக்கி கொண்டவர்.. அவருக்கும் உங்க வயசுதானே ஆகுது? அவரால் எப்படி முடியுது? குறைந்த பட்சம் அர்ப்பணிப்பு, தனிமனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே எந்த துறையிலும் ஒருவரால் நிலைத்து நிற்க முடியும்.
பேருதவி: யாராக இருந்தாலும், பெற்றோருக்கு நீங்கள் செய்யக்கூடிய உதவி, நன்மை, நன்கொடை, பேருதவி எதுவென்றால், அவர்கள் நம்முடைய உடம்பை எப்படி தந்தார்களோ, அதுபோல கடைசிவரை ஒழுக்கத்துடன், கெட்ட பழக்கத்திற்கு ஆளாகாமல் வைத்திருகக வேண்டும்.. பெற்றவர்களுக்கு சோறுகூட போட வேண்டாம்.. நோய், நொடியின்றி, உடலை கெடுத்துக் கொள்ளாமல் நல்லபடியாக பிள்ளைகள் வாழ்வதே பெற்றோர்களுக்கு செய்யும் பேருதவி" என்றெல்லாம் சேகுவேரா கூறியிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications