Soori: திருமதி செல்வம் சீரியலை பார்த்திருக்கீங்களா? இதுல நடிகர் சூரி இருக்காராமே!
சென்னை: திருமதி செல்வம் என்ற சீரியலை பார்த்துள்ளீர்களா? அந்த சீரியலில் தற்போதைய காமெடி நடிகர் பரோட்டா சூரி நடித்திருக்கிறார் என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா? என்ன கதாபாத்திரம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சந்தானம், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தொலைகாட்சியில் இருந்துதான் சினிமாவுக்குள் நுழைந்தனர். இன்றைய காலகட்டத்தில் இருவருமே பெரிய ஸ்டார்கள்தான். இருவருமே விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு சென்றவர்கள்தான்.
இப்படி சினிமாவுக்குள் வர ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு "கேட்வே- gateway" இருக்கும். சிலர் உறவினர்கள் மூலம் வந்திருப்பார்கள், சிலர் கல்லூரியில் நடந்த கலை விழாவின் மூலம், சிலர் சினிமாவுக்கு செல்ல வேண்டும் என்ற வாய்ப்பை கேட்டும் வந்திருப்பார்கள்.

இன்னும் சிலர் திரைப்பட கல்லூரியில் படித்து நடிகர்களாகவோ இயக்குநர்களாகவோ தொழில்நுட்ப கலைஞர்களாகவோ ஆகி இருப்பார்கள். அந்த வகையில் மிக முக்கியமான நடிகர் பரோட்டா சூரி. மதுரையை சேர்ந்த இவர் தனது மதுரை ஸ்லாங்கில் அடிக்கும் லூட்டிகள் அருமை!
இவர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் விடுகதை என்ற படத்தில் ஹீரோவாகவும் சூரி நடித்துள்ளார். இவர் வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் கலந்து கொண்டு பிரமாதமாக நடித்திருந்தார். அதனாலேயே அவர் பரோட்டா சூரி என்றே அழைக்கப்படுகிறார்.
இவர் மதுரையில் அம்மன் எனும் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்திலும் நடித்திருந்தார். இவர் வின்னர் படத்தில் கைப்புள்ள கேரக்டரில் நடித்த வடிவேலுவின் அடியாளாக வருவார். சூர்யா, கார்த்தி, விஷால், சிவகார்த்திகேயனுடன் நிறைய ரோலில் நடித்துள்ளார்.
சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த சூரி பின்னாளில் காமெடினாகவும் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் சீரியலிலும் நடித்துள்ளாராம். இவர் திருமதி செல்வம் தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
திருமதி செல்வம் சீரியலில் நடிகர் சஞ்சீவ், அபிதா (சேது பட நாயகி), வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த சீரியல் 2007ஆம் ஆண்டு சன் டிவியில் தொடங்கப்பட்டது. இது 1360 எபிசோடுகளை கடந்து, 2013 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
இந்த சீரியலில் செல்வம் மெக்கானிக் கடை வைத்திருப்பார். அங்கு ஒரு மெக்கானிக் பாயாக சூரியும் நடித்திருப்பார். இந்த மெக்கானிக் காட்சிகள் வரும் போது மட்டும்தான் சூரியின் காட்சிகள் வரும். அதில் ஒரு முண்டா பனியன் போட்டுக் கொண்டு நடித்திருப்பார். இந்த படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications