பெரியண்ணாவில் விஜயகாந்த் என்னை செலக்ட் பண்ணாரு.. ஆனால் விஜய் தான் சூர்யாவை! ஸ்ரீ சொன்ன பகீர் காரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஸ்ரீகுமார் பெரியண்ணா திரைப்படத்தில் விஜயகாந்த் என்னை தான் சூர்யா நடித்த கேரக்டரில் செலக்ட் பண்ணினார். ஆனால் சூர்யாவை நடிகர் விஜய் செலக்ட் செய்து இருந்தார். அதோடு தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு காரணம் இதுதான் என்று பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

பெரிய நடிகராக வேண்டும் என்று கனவில் இருந்த நடிகர் ஸ்ரீகுமார் தான் செய்த சின்ன சின்ன தப்புகளால் தான் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இப்போதும் என்னுடைய மனதில் ஒரே ஒரு நடிகர் போல ஆக வேண்டும் என்று ஆசை இருக்கிறது என்று அந்த பேட்டியில் வெளிப்படையாக கூறி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Actor Sreekumar said in Periyanna movie miss opportunity reson

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகுமார் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதோடு ஒரு சில திரைப்படங்களிலும் சின்ன சின்ன வருடங்களில் நடித்திருக்கிறார். கடந்த வருடத்தில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கூட முக்கிய கேரக்டரில் ஸ்ரீ நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீ குமார் பேட்டியில் தன்னுடைய ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார். அதில் தனக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அந்த நேரத்தில் நான் அதற்கு சரியான முயற்சிகள் எடுக்காததால் தான் அது என்னை விட்டு போய்விட்டது என்று கூறி இருக்கிறார். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்ல வேண்டும் என்றால் பெரிய அண்ணா திரைப்படத்தில் நடிப்பதற்காக விஜயகாந்த் என்னை தான் முதலில் செலட் பண்ணினார்.

ஆனால் அப்போது விஜய் தான் சூர்யாவை செலக்ட் பண்ணுனாரு. கடைசியில் அந்த வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைத்தது. சூர்யாவின் நடிப்பும் மிகவும் அருமையாக இருந்தது சூர்யாவும் நானும் ஒரே டான்ஸ் கிளாஸில் டான்ஸ் ஆடி இருக்கிறோம். நானும் அவரும் கடைசி இடத்தில் ஒன்றாக ஆடி இருக்கிறோம். அதுபோல சூர்யாவுக்கு நிறைய திறமை இருந்தது.

அதனால் அந்த நேரத்தில் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது. அது குறித்து கூட பிறகு நடிகர் சஞ்சய் உடன் நான் ஒரு பங்க்ஷனில் கலந்து கொள்ளும்போது நடிகர் விஜய் என்னிடமே கேட்டார், அதாவது உனக்கு விஜயகாந்த் பெரியண்ணா படத்தில் நடிக்க ரெக்கமெண்ட் பண்ணினாரு என்று சொன்னார். எனக்கு அது சந்தோஷமாகத்தான் இருந்தது. அதுபோல சிலர் நமக்கு சரியான வாய்ப்பு இல்லை நம்ம கூட இருந்தவங்க நல்ல இடத்திற்கு போயிட்டாங்கன்னு புலம்புவதை பார்த்திருக்கிறோம்.

அப்படியெல்லாம் சொல்லவே கூடாது நாம நம்மளுடைய திறமையை சரியாக பயன்படுத்தணும். ஒரு இடத்தில் இருக்கிறோம் என்றால் அதில் நிறைய விஷயங்களை கத்துக்கணும். நான் அந்த விஷயங்களை ஆரம்பத்தில் செய்யாமல் விட்டு விட்டேன். என்னுடைய அப்பா ஆரம்பத்திலேயே என்னை டான்ஸ் கத்துக்கோ, பைட்டு கத்துக்கோன்னு சொன்னாரு. அப்போ எனக்கு அது பெருசா தெரியல. அப்புறம் எனக்கு தெரிஞ்சு. அந்த நேரத்தில் எனக்கு சரியாக வாய்ப்பு கிடைக்கல.

ஆனால் நான் இப்போதும் வாய்ப்புக்காக தேடிக் கொண்டே இருக்கிறேன். எந்த நேரத்திலும் வாய்ப்பு தேடி நான் சளைத்து போக மாட்டேன். அதுபோல எனக்கு இப்ப இருக்கிற சூழ்நிலையில் நடிகர் எம் எஸ் பாஸ்கர் போல ஆக வேண்டும் என்று தான் ஆசை. அவருடைய நடிப்பு வேற லெவலில் பிரமாதமாக இருக்கும். அதுபோல நானும் மாறனும் எனக்கு ரொம்ப ஆசை இருக்கு.

அதற்கான முயற்சிகளை நான் எடுத்துக் கொண்டே இருக்கிறேன். அதுபோல டிவி நிகழ்ச்சிகளில் நான் இருக்கும்போது சிவகார்த்திகேயன் என்னோடு சேர்ந்து ஷோ பண்ணியிருக்கிறார். இப்போ அவர் சினிமாவில் முன்னணி நடிகராக மாறி இருக்கிறார். அதற்காக நான் அவரை நீ நான் என்று சொல்லவே மாட்டேன். நான் ஆரம்பத்தில் அவரை அப்படித்தான் கூப்பிட்டேன். ஆனால் இப்போ அவர் உழைப்பால் இவ்வளவு உயர்ந்திருக்கிறார்.

அந்த உழைப்புக்கு நான் மரியாதை கொடுக்கணும் ஆனால் சிவகார்த்திகேயன் எந்த இடத்திலும் என்னை அப்போ பேசின மாதிரியே தான் அண்ணே எனறு இன்னும் கூப்பிடுவார். சூர்யாவும் என்னிடம் ஆரம்பத்தில் எப்படி பழகினாரோ அதுபோலத்தான் இப்போதும் பழகிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் நான் எல்லோருக்கும் அவர்களுடைய உழைப்புக்கு தகுந்த மரியாதையை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் சில திரைப்படங்களில் இப்போது எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அது என்னுடைய நடிப்பை வெளிகாட்டும் என்று நம்புகிறேன் என்று அந்த பேட்டியில் நடிகர் ஸ்ரீகுமார் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+