சில நடிகைகள் சூட்டிங் ஸ்பாட்டில் அப்படி பண்றாங்க! வருத்தப்பட்ட நடிகர் ஸ்ரீ! வடிவுக்கரசி கொடுத்த பதில்
சென்னை: நடிகர் ஸ்ரீகுமார் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது சீரியலில் நடிக்கும் சில நடிகைகள் கதாநாயகியாக நடிக்க தொடங்கியதும் திமிராக நடந்து கொள்கிறார்கள். ஆனால் பல வருடங்களாக சினிமாவிலும் சீரியலிலும் நடிக்கும் வடிவுக்கரசி அப்படி இல்லை என்று பேசி இருக்கிறார்.
ஒரு சிலர் தன்னுடைய மனதில் பட்டதை யார் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்காமல் வெளிப்படையாக பேசி விடுவார்கள். அந்த வகையில் ஒருவர்தான் நடிகர் ஸ்ரீகுமார். இவர் பல வருடங்களாக சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இவர் பெரியண்ணா படத்தில் நடிகர் சூர்யா நடித்த கேரக்டரில் தான் நடிக்க இருந்ததாம்.

ஆனால் அந்த கேரக்டருக்காக நடிகர் விஜய் சூர்யாவிற்கு ரெக்கமெண்ட் பண்ணினதால் தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் சூர்யா அந்த வாய்ப்புக்காக ரொம்பவும் கஷ்டப்பட்டு அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். நான் அந்த நேரத்தில் என்னுடைய வாழ்க்கையை சரியாக புரிந்து கொள்ளாமல் கெட்ட நண்பர்களோடு சேர்ந்து என்னுடைய வாழ்க்கையை கெடுத்துக் கொண்டேன்.
என்னுடைய அப்பா (இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்) எவ்வளவோ சொன்னார், ஆனால் நான் எனக்கு என்னுடைய வாழ்க்கைக்கு முன்னேற்றத்திற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதுபோல அடிக்கடி சினிமாவில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் சீரியலில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து கூட பல பேட்டிகளில் பேசி இருக்கிறார்.
அதுபோலத்தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் சீரியலில் நடிக்கும் நடிகைகள் குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நானும் சில நடிகைகளை பார்த்திருக்கிறேன் ஒரு சில சீரியலில் கதாநாயகி கேரக்டர் கிடைத்துவிட்டால் போதும்.. எனக்கு அவங்கள தெரியும், இவங்களை தெரியும் என்று ரொம்பவும் திமிராக நடந்து கொள்கிறார்கள்.

நான் எல்லோரையும் சொல்லவில்லை. ஒரு சிலரை மட்டும்தான் சொல்கிறேன். அவர்கள் கதாநாயகி ஆகிவிட்டால் மற்றவர்களை இளக்காரமாக நடத்துகிறார்கள். ஆனால் வடிவுகரசி அம்மா அப்படி கிடையாது. நான் அவங்க கூட பல வருஷமா நடித்து இருக்கிறேன். அவங்க தன்னோடு நடிப்பவர்களை அரவணைத்து கொண்டு போறவங்க.
அவங்க நடிகர் ரஜினிகாந்த் உட்பட எல்லாரோடும் நடித்திருக்கிறார். பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார், இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் எவ்வளவு கஷ்டமான கேரக்டரையும் அசால்டாக நடித்துவிடுவார். அதுபோல சீரியலிலும் அவரை மிஞ்ச ஆள் கிடையாது என்று சொல்லுவேன். அப்படி நடித்திருந்தாலும் எந்த இடத்திலும் யாரிடமும் தன்னுடைய திமிரை காட்டவே மாட்டார்.

நான் சில காட்சிகளில் ஏதாவது நடித்து இருந்தால் கூட அது அருமையாக இருக்கிறது என்று என்னிடம் பாராட்டி இருக்கிறார். சில நேரங்களில் அவர் வீட்டிற்கு போய்விட்டால் கூட எனக்கு போன் செய்து அந்த காட்சியில் நீ அருமையாக நடித்தாய் என்று பாராட்டி இருக்கிறார். இதுபோல பெரிய மனசு பலருக்கு இருப்பதில்லை.
இதுபோல குணம் எல்லாம் ஒரு சிலருக்கு மட்டும்தான் இருக்கிறது என்று அந்த பேட்டியில் நடிகர் ஸ்ரீ பேசியிருக்கிறார். இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வடிவுக்கரசி இதை எதிர்பார்க்காத ஒரு ரியாக்ஷன் கொடுத்தார். அதோடு ஸ்ரீ உண்மையிலேயே ரொம்பவும் அழகாக நடிப்பவர். அது மட்டும் அல்ல எப்போதும் யாருக்கும் பயப்பட மாட்டார். மனதில் சரி என்று பட்டால் சரிதான். ஆனால் யாருக்காவது ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக நின்று உதவி செய்வார் என்று வடிவுக்கரசி பாராட்டி இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications